Tuesday, March 29, 2011

நாடகக் கூட்டணி!!!!

          திமுக கூட்டணிக்கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் என்ன சொல்லி ஒட்டு கேட்பதென்று தெரியவில்லை. கலைஞர் கடந்த 5 வருடங்களும் செய்த செயல்கள் காலத்தின் கட்டாயம் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதையே சாதனைகளாக சொல்லி ஒட்டு கேட்பது மிகவும் நகைப்புக்குரியது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மேடையிலும் திமுக கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் இருப்பது போல ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டும் உள்ளதை மக்கள் நம்புகிறார்கள் என்றும் நினைக்கின்றனர். சிறிது தினங்களுக்கு முன்பு வரை இந்த பச்சோந்தி ராமதாஸ் என்னென்ன வசை பாடினார் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். இப்பொழுது அதை மறந்து ஒரே மேடையில் அமர்ந்து ஆறாவது முறையாக கருணாநிதியை முதல்வராக்குவோம் என்று முழங்குகிறார் இல்லை இல்லை தன் மகன் மேல் சபை MP பதவிக்காக நடிக்கிறார். ஆனால் எதிர் கட்சிகள் ஒன்றாக இல்லை என்று கிண்டல் செய்கின்றனர் ராமதாஸ் மற்றும் திருமாவும்.

          மேற்கண்ட கூட்டணிக்கட்சிகளைப் போல் ஜெயலலிதாவிற்கு நடிக்கத்தெரியாது, ஒரே மேடையில் நின்று ஒருவரின் கைகளைப்பிடித்துக்கொண்டு நாடகமாடத் தெரியாது, எப்பொழுதும் போல் எதார்த்தமாகவே அதிமுக கூட்டணி வாக்கு கேட்டுக்கொண்டுள்ளனர். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் எண்ணம் இவர்களுக்கில்லை. நாங்கள் இப்படிதான் என்று உண்மை முகத்துடன் தனித்தனியே ஒட்டுக்கேட்கின்றனர் இவற்றையும் மக்கள் நன்கு அறிவர். இது இந்தத் தேர்தல் முடிவுகளில் தெரியும்.

1 comment:

  1. அம்மாவுக்கு ஜிங் சா.. ஜிங் சா.. ஊத்தி கொடுத்தவளும் .. வாங்கி குடித்தவனும் வராங்க டோய் .. ஜிங் சா

    ReplyDelete