Thursday, June 23, 2011

மீண்டும் உயருது பெட்ரோல், டீசல் வாழ்க காங்கிரஸ் அரசாங்கம்!!!

          இப்பொழுது எந்த நாளேடை திருப்பினாலும் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருகிறது என்று எழுதுகிறார்கள். படிக்கும்பொழுதே தலை சுற்றுகிறது. நானும் இனி மோட்டார் சைக்கிள் தவிர்த்து சிறு வேலைகளுக்கு சைக்கிள் ஓட்டிப்பழக வேண்டும் என்று என் மனதில் கூறிக்கொண்டே இருந்தேன், நேற்று சைக்கிளை எடுத்துக்கொண்டு மார்கெட் வரையில் சென்று காய்கறிகள் வாங்கி வந்தேன். என் சட்டை முழுவதும் வேர்வையில் நனைத்து, நான் என்னவோ கொத்தனார் வேலையில் இருந்து வந்தது போல் காட்சியளித்தேன். என் கால்கள் இயங்க மறுத்தன, பிறகு மெத்தையில் விழுந்து ACயின் நனைந்ததும் தான் பழைய நிலைக்கு வந்தேன். இப்பொழுது தான் தெரிகிறது சைக்கிள் ஒட்டுவது எவ்வளவு கஷ்டம் மேலும் ஏன் இந்த மோட்டார் சைக்கிள்கள் இவ்வளவு அதிகமாக விற்பனை ஆகின்றன என்றும் தெரிந்தது.

          தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டிய மக்கள். மக்களின் நலனில் அக்கறையே இல்லாத மத்திய காங்கிரஸ் அரசிற்கும் முடிவு கட்டுவார்களா என்று எதிர்ப்பார்க்கிறேன். அதற்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் உள்ளது. அதுவரை விதியை நொந்தப்படி நான்.

Saturday, June 4, 2011

தயாநிதிக்கும் களி தின்ன ஆசை!!!

          கனிமொழியை தொடர்ந்து தயாநிதிமாறனுக்கு திகார் ஜெயில் களி தின்பதற்கு ஆசை வந்துவிட்டது, விரைவில் அவரது ஆசை நிறைவேறும் என்று நம்புவோமாக. கருணாநிதி கூடா நட்பு கேடு என்று மீண்டும் தனது பழைய பஞ்சாங்க பேச்சை பேச தொடங்கிவிட்டார். ஊழல் செய்யும் தனது குடும்பத்தை தடுக்க யோகியதை இல்லாத முதுகெலும்பில்லாத கிழவர் என்பதை மீண்டும் நிருபித்துவிட்டார். தனது குடும்பத்திற்கு அளித்த முக்கியத்துவம் தான் கடந்த தேர்தலில் தான் பெற்ற படுதோல்விக்கு காரணம் என்று தெரிந்து வைத்துக்கொண்டே காங்கிரஸ் கட்சியை குறை சொல்லிக்கொண்டுள்ளார். அவரது மகன் அஞ்சாநெஞ்சன் அழகிரி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை, ஆனால் தேர்தல் முடிவுக்கு முன் என்ன வாய்சவடால் பேச்சை பேசிக்கொண்டிருந்தார் இந்த மனிதர். அனைத்திற்கும் தமிழக மக்கள் பதில் சொல்லிவிட்டார்கள். இன்னும் எங்கள் கட்சியை சேர்ந்த எவரும் தவறு செய்யவில்லை என்று கூரிக்கொண்டுள்ளது மிகவும் நகைப்பிற்குரியது.