Wednesday, August 18, 2010

ENTHIRAN WALLPAPERS (ROBOT)

          எந்திரன் படத்தின் WALLPAPERS சிலவற்றை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன். SEP3 படம் வெளிவரலாம் என்று தெரிகிறது.










Sunday, August 8, 2010

DR ரங்காசாரி (1882--1934) THE FLYING DOCTOR

          கானாடுகாத்தான் மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்படிருந்தார் அந்தப் பெண்மணி. வசதிஏதும் இல்லாதவர் குழந்தை பிறந்துவிட்டாலும் பரவாயில்லை. இயற்க்கை பிரசவம் நடைபெற வழியில்லாமல், வயிற்ரை கிழித்து குழந்தையை எடுக்கவேண்டும். அதற்கு சரியான மருத்துவர் வேண்டும். கானாடுகாத்தான் லேடி பேன்ட்லாண்ட் ஆஸ்பத்திரியிலிருந்து செய்தி அனுப்பப்படுகிறது. சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம், சில மணிநேரங்களில் பக்கத்தில் ஒரு வயலில் இறங்குகிறது. அடுத்த சில மணிநேரங்களில், தாயும் சேயும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, நலமாக மூச்சுவிடுகிறார்கள். தனக்கு எவ்வளவு FEES தருவார்கள் என்பதைப் பற்றிய நினைப்பே இல்லாமல், சென்னையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு என்ன சிகிச்சை கொடுக்கவேண்டும் என்பதைப் பற்றிய நினைப்போடு புறப்பட்டுப் போகிறார் அந்த டாக்டர். தொழில்நுட்பம் பெருகிவிட்ட 21ம் நூற்றாண்டோ, குறைந்த விலை விமான நிறுவனங்கள் படர்ந்துவிட்ட நவீன யுகமோ இல்லை. சென்னையிலிருந்து காரைக்குடி சுமார் 400 கி.மீ, அங்கிருந்து கானாடுகாத்தான் சுமார் 16 கி.மீ. அந்த ஊர் என்று மட்டுமில்லாமல், இன்னும் பற்பல ஊர்களுக்கும் இடங்களுக்கும், தன் சொந்தத விமானத்தில் பறந்து, தெரிந்தவர் தெரியாதவர், ஏழை பணக்காரர் என்று எந்தவித பேதமும் பார்க்காமல் மருத்துவம் செய்த மருத்துவப் பண்பாளர் DR ரங்காச்சாரி. 1882ஆம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி பிறந்தார். அந்தக்காலத்தில் ரங்காச்சாரி FLYING டாக்டர் என்றும் அழைக்கப்பட்டார். 

          தன்னை நம்பி வந்த நோயாளிக்காக, எமதர்மனை எத்தனையோ முறை ரங்காச்சாரி எட்டி உதைத்தார் என்பது தமிழகத்தின் மருத்துவ வரலாறு. 20ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில், DR ரங்காசாரியால் மிகப்பெரிய புரட்சிகளே ஏற்பட்டன எனலாம். மகப்பேறு காலங்களிலும், தங்களுடைய நோயை வெளியே சொல்லமுடியாத நாணத்தாலும் பற்பல பெண்கள் உயிரிழந்தனர். தாயுன் சேயும் தனித்தனி உயிர்களாக முடியும் என்பதை, மக்களென்ன, இயற்கையே நம்பாத காலம். மருத்துவப் படிப்பு முடிந்து, பெண்கள் மருத்துவமனையில் பணியாற்றிய சில ஆண்டுகளில், எண்ணற்ற தாய்மார்களை எமனுடைய பிடியிலிருந்து கைப்பற்றினார் ரங்காச்சாரி.

          தொடர்ந்து ஹைதராபாத்திலும் பணி. கோஷாவுக்குள் பெண்கள், மதம் என்னும் போர்வையை போர்த்திக்கொண்டு, பிற மனிதர்கள் கையால் மருந்தா என்று முகம் சுளித்த மக்கள். 1909ஆம் ஆண்டு -- கறுப்புக் காலனாக ப்ளேக் நோய், அந்தப் பிரதேசத்தையே உள்ளுக்கியப்பொழுது ரங்காச்சாரியின் சிகிச்சை, நோய் கொடுமையிலிருந்து மட்டுமில்லாமல், வேண்டாத மூடப் பழக்கவழக்கங்களில் இருந்தும் மக்களை மீட்டது.

          மாயவரம் மருத்துவமனை, தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட உதவி மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவப்பள்ளியின் தலைமை ஆசான், பின்னர் நாகப்பட்டினத்தில் சிவில் சர்ஜனாக உயர்வு, அடுத்து கும்பகோணம்... இப்படியாக ரங்காச்சாரியின் பணி தொடர, ஆரம்பகாலங்களில் சைக்கிள், அடுத்து குதிரைவண்டி, பின்பு மோட்டார் சைக்கிள் என்று ஓடி ஓடி, நோயாளிகளின் இடம் தேடித் தேடி, துன்பம் தீர்த்த டாக்டர், இப்போது கார் வாங்கிவிட்டார், சொகுசாகப் பயணம் செய்ய அல்ல! சோர்ந்து வாடித் தவித்த ஏழைக்கும் பாழைக்கும் பட்டிக்காட்டானுக்கும் பட்டினதானுக்கும் பெரியவர்க்கும் சிறியவர்க்கும் வைத்தியம் செய்வதற்கு அந்தக் கறுப்பு நிற ஸ்டாண்டர்ட் கார் சீறிப் பாயும்.

          DR ரங்காச்சாரி எந்தத் துறையில் SPECIALIST? இந்த வினோத வினாவிற்கு சரியான விடை தர முடியாது. காரணம், அவர் பார்க்காத வைத்தியம் இல்லை, தீர்க்காத வியாதி இல்லை. மிகவும் கடினமான பிரசவம், அடிக்கடி தொந்தரவு கொடுக்கும் பிளவை கட்டி, கீழே விழுந்ததால் காயம், பட்டுப் புரையோடிப் போன எலும்பு ரணம், உள்ளுறுப்புகளில் தோன்றும் பெயர் தெரியாத பெரிய பெரிய நோய்கள்-- எதுவாக இருந்தாலும் ரங்காசாரியிடம் தீர்வு உண்டு. அப்படியானால், அவர் கொடுத்த மருந்துகளும் மிக உயர்ந்தவையாக இருக்குமோ? அதுதான் இல்லை. சாதாரணமானவை! அவ்வளவுகூட இல்லை-- மருந்து என்றே சொல்ல முடியாத இயற்கையான காற்று, சூர்ய வெளிச்சம், சின்னச்சின்ன உணவுப் பழக்கங்கள், காய்கறிகளும் கீரையும் பலன்களும் சாப்பிடுவதை பரிந்துரைத்தார் அந்த வித்தியாச டாக்டர். மருந்து சீட்டில் மிக நீளமான பட்டியல் இருக்காது. ஒற்றை வரியில் ஏதேனும் எளிமையான மருந்து, பல நேரங்களில், அந்த மருந்தையும் அவரே கலக்கிக் கொடுத்துவிடுவார். எல்லாத்தையும் விட அவருடைய பீஸ்? அவராக கேட்கமாட்டார், வசதியுள்ளவர்கள் கொடுத்தால் வாங்கிக்கொள்வார். எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று கணக்குபார்க்கமாட்டார். அப்படியே வாங்கி, கால்சட்டை பையில் திணித்துக்கொள்வார். அந்தப்பணமும் கூட இல்லாதவர்களுக்கு பயன்படவே செலவழியும். மாயவரத்தில் பணியாற்றியபோது, மருத்துவமனையில் பொருள்கள் தீர்ந்து போன நிலையில், புதிதாக தோன்றிய யுக்தி, இப்படிப்பயன்பட்டது-- டாக்டரின் மேசையில் உண்டியல், விருப்பமுள்ளவர்கள் அதில் காசு போடலாம், சேர்கின்ற காசைக் கொண்டு, மருத்துவமனைக்குச் கூடுதலாகத் தேவைப்பட்ட சிகிச்சைப் பொருள்களை வாங்கினார்கள். சிகிச்சை பெற்றவர்கள் கொடுப்பதை (அது சில்லறையோ, நாணயமோ, நோட்டோ) என்ன ஏதென்று கணக்குப் பார்க்காமலேயே, கால்சராய் பையில் திணித்துக்கொள்வார். வீடிற்கு வந்தவுடன், அதற்கென்று வைத்திருக்கும் பெட்டியில் அதை கொட்டுவார். ஒவ்வொரு நாள் வெளியில் கிளம்பும்போதும், தேவையானவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதற்காக, அந்தப் பெட்டியிலிருந்து அள்ளியெடுத்து சராய் பையில் நிரப்பிக்கொள்வார்.

          ரங்காச்சாரியின் தொழில் வல்லமை, பற்பல புதுமைகளையும் செய்தது. அந்த நாட்களில், யாரும் நினைத்துப்பார்க்க முடியாதவற்றைஎல்லாம் அவர் சாத்தியமாக்கினார். பெண்கள் இரண்டாம் தரமானவர்கள் என்னும் எண்ணம் ஓங்கிய அக்காலத்தில், இளம் பெண் டாக்டரை உதவியாளராக ஏற்பதற்கு ரங்காச்சாரி தயங்கியதில்லை, அதேப்போன்று, தம் உதவியாளர்கள், முறையான பயிற்சி பெற, அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதிலும் வல்லவர்.



          பர்காம்பூரில் இருக்கும்போது நடைபெற்ற சம்பவம் இது. நிறைமாததை நெருங்குகிற கர்ப்பிணி ஒருத்தி, தெருவில் நடந்துகொண்டிருந்தாள். மாடுகளை ஓட்டிக்கொண்டு போனான் சிறுவன் ஒருவன். எப்படியோ அது நடந்துவிட்டது. சிறுவன் கையிலிருந்த குச்சி, கர்ப்பிணி தாயின் வயிற்றில் குத்திக் கிழித்து வயிற்றில் உள்ள பிள்ளையின் பிஞ்சு விரல், ஓட்டை வழியே எட்டிப்பார்த்தது. தவறான பழக்கவழக்கங்களை என்றைக்குமே ஒத்துக்கொள்ளாத ரங்காச்சாரி, சற்று தூரத்தில் உதவி டாக்டர், சிகரட் குடிப்பதை பார்த்துவிட்டார். கோபத்தை அடக்கிக்கொண்டு, அந்த சிகரெட்டை பிடுங்கிக்கொண்டு ஓடிவந்தார். சிகரெட்டின் சூடு பட்டவுடன், அந்த கருக்குழந்தை விரலை இழுத்துக்கொள்ள ஆபத்தான நிலையிலிருந்து அந்த ஏழைத் தாயையும் குழந்தையையும் காப்பாற்றினார். ஊட்டிக்கு விடுமுறைக்குச் சென்றிருந்த சிறுமி ஒருத்தி, காய்ச்சலால் துவள்வது குறித்து செய்தி வந்தது. சென்னையிலிருந்தபடியே, அந்தச் சிறுமி டிப்தீரியா நோய்க்கு ஆளாகியிருந்தாள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டார். குறித்த சிகிச்சைக்கான தகவலைத் தந்தி வழியே அனுப்பிவிட்டு, மாலை நேரத்தில் தம் காரிலேயே புறப்பட்டார், மறுநாள் பொழுது புலரும்போது சிறுமியின் முன்னால் நின்றார். அவர் சொன்ன மருந்தை அப்போதுதான் கொடுத்திருந்தார்கள், ஆனாலும், அவளைக் காப்பாற்றமுடியவில்லை. இன்னும் வேகமாகச் செயல்பட்டிருந்தால்-- முதல் நாள் மாலையிலிருந்து இப்பொழுது வரை காலதாமதத்தைக் குறைக்கமுடிந்தால்-- எத்தனை உயிர்களை இவ்வாறு மீட்கலாம்... பணக்கணக்கு பார்க்காத அந்த உள்ளம், இப்படியொரு பாசக்கணக்கைப் போட்டது. விளைவு? விமானம் வாங்கினார், வேகமாகப் பறந்தார், பற்பல உயிர்களைப் பிழைக்கச் செய்தார்.

          1917ஆம் ஆண்டு, பர்காம்பூரிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தார். எழும்பூர் பெண்கள் மருத்துவமனையின் உதவி சுபரின்டென்டெண்ட் பதவியேற்றார். அப்போது சர்ஜன் ஜெனரலாக இருந்த கர்னல் கிப்போர்ட், இந்தப் பதவி உயர்வுக்குக் காரணமானவர். முதலிலிருந்தே ரங்காச்சாரியை சரியாக அடையாளம் கண்டவர் அவர். 1919ல், ஜெனரல் ஆஸ்பத்திரியில் இரண்டாம் சர்ஜனாகவும் துறைமுக மருத்துவராகவும் பணி செய்யும் உயர்வு கிட்டியது. அப்பொழுது, மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியராகவும் பொறுப்பு வந்தது. ஆனாலும், பொறாமையும் பொசாப்பையும் அவர் சந்திக்காமல் இல்லை. இந்தியர் ஒருவர் இரண்டாம் சர்ஜனாக இருக்கலாமா? என்னும் முகச் சுளிப்புகளுக்கிடையே, மூன்றாம் சர்ஜனாக இறக்கப்பட்டார். ரங்காச்சாரிக்கு கூடிய புகழையும் பெருமையும் கண்ட பிற மருத்துவர்கள் (ஆங்கிலேயர்களும் ஒரு சில இந்தியர்களும் இதில் அடங்குவர்),  அவரின் முறைகளை விமர்சித்தார்கள் அவதூறு கிளப்பினார்கள். அந்தக் கர்மயோகியிடத்தில், எதுவும் எடுபடவில்லை, தான் கடமையென்று எண்ணியதை தொடர்ந்து செய்தார். எதிரியாக நினைத்து விமர்சித்தவர்களுக்கு சிக்கல்கள் வந்தபோது உதவியும் செய்தார்.

          சுதந்திரப் போராட்ட காலத்தில், தம்புச்செட்டி தெருவில், ரகசியமாக வைத்துக் காப்பாற்றப்பட்ட போராட்ட வீரர்களுக்கு சிகிச்சை செய்தார். வேண்டிய பொருட்களை வாங்கியும் கொடுத்தார். அரசு பதவியின் நடைமுறைகள் அவருக்கு ஒப்பாதபோது, அதிலிருந்து விலகிக்கொண்டு, சுயமாகச் செய்த சேவையை இன்னும் பெரியதாகத் தொடர்ந்தார்.

          டைபாய்டு நோய் கண்டு, சுயநினைவு நழுவிக்கொண்டிருந்த வேளையில், மருத்துவரீதியாக மதுவை அவருக்குக் கொடுப்பதற்காக பிறர் எடுத்த முயற்சியை, அந்த நிலையிலும் வீசிப்போட்ட மன உறுதி. அந்த மாமனிதரின் ஆதாரம். அவரே ஓடிய ரோல்ஸ்ராய்ஸ் கார். அவருடைய வசதி என்று சொல்லமுடியாது. உணவைக்கூட காரிலேயே முடித்துக்கொண்டு, சந்து பொந்துகளுக்கும் பட்டிதொட்டிக்கும் சென்று பிணிதீர்க்கும் பணியில் உதவியது. ஊருக்கும் உலகுக்கும் நோய் தீர்க்கப் போராடிய ரங்காச்சாரியை, டைபாய்ட் என்னும் எமன், எந்தச் சிகிச்சைக்கும் கட்டுப்படாமல் அழிந்தான். 1934, ஏப்ரல் 24ஆம் தேதி அப்பொழுதைய மவுண்ட் சாலையில் தேனாம்பேட்டையில் அந்த மருத்துவப் போராளி மண்ணுலகை நீத்தப்போது, சென்னை என்ன, தமிழகம் என்ன, இந்திய திருநாடே அழுதது.

          1939, நவம்பர் 6ம் நாள்-- நிறம், மொழி, குலம், சாதி, பணம் என்று எத்தகைய வேறுபாடும் காணாமல் சேவைபுரிந்த அந்தப் பெருமகனாரின் சிலையை, சென்னை பொது மருத்துவமனையின் வாயிலில், ஆங்கிலேய கவர்னர் எர்ஸ்கின் திறந்துவைத்தார். இன்றளவும், அங்கேயே, வருங்காலத்திற்கான வழிகாட்டியாக ரங்காச்சாரி நிற்கிறார்.                     

Saturday, August 7, 2010

எந்திரன்- TRAILER

          எந்திரன்- TRAILERஐ காண கீழே உள்ள LINKஐ CLICK செய்யவும்.


http://www.youtube.com/watch?v=xvEELXqLU_U