Friday, April 30, 2010

சுறா-விஜய்க்கு ஒரு கடிதம்


          விஜய் நடித்து வெளிவந்துள்ள சுறா படத்தை பார்த்தேன்,  பெயரில் மட்டும் விஜய் என்று வைத்துக்கொண்டு மகா மட்டம்மான தோல்விப் படங்களையே கொடுத்துக்கொண்டுள்ளார் விஜய். தான் செல்லும் விழாக்களுக்கு அமைதியாகவும் தான் நடிக்கும் படங்களில் மிகவும் ஆக்ரோஷமாகவும் உள்ளது போல் காட்டிக்கொள்கிறார். இது அவரது 50வது படம், எனக்கு தெரிந்து அவர் நடித்து வெளிவந்துள்ள மட்டமான படம் சுறா தான் (51வது படம் வந்தால் சுறா நல்ல படமாகிவிடும் என்பது வேறு விஷயம்). விஜய்க்கு உண்மையிலேயே சூடு சொரணை இருந்தால் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், அமீர்கான், ஷாருக்கான் போன்றோரின் படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கசொல்லுங்கள். இவர் ஒரு படத்திற்கு 5 கோடி 10 கோடி என்று சம்பளம் வாங்கிக்கொண்டு சத்திரம், பண்ணைவீடு போன்றவைகளை வாங்கிக் குவித்துக்கொண்டுள்ளார் மேலும் நான் அரசியலுக்கு வருவேன் அடுத்த முதல்வர் நான் தான் போன்ற நகைச்சுவைகளையும் அடிக்கடி வெளியிடுகிறார். பாவம் அவரது ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் முதல் நாளே 100 முதல் 250 வரை ஒரு டிக்கெட் என்று கொடுத்து பார்க்கும் அவர்களுக்கு மிகவும் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. இந்த முறை நான் என் நண்பனிடம் (அவன் தீவிர விஜய் ரசிகன்) படம் எப்படி உள்ளது என்று கேட்டேன் ஒவ்வொரு முறையும் அற்புதம் என்று பொய் சொல்லும் அவன் இந்தமுறை மிக மிக மட்டம் தயவு செய்து படத்தை பார்க்காதே என்று எனக்கு அறிவுரை செய்தான். விஜய் உங்களுக்கு ஒரு அறிவுரை வழங்க விரும்புகிறேன், உங்களுக்கு கதையை தேர்வுசெய்து கொடுப்பவர் யார்? அவரை முதலில் நீக்குங்கள். உண்மையிலேயே நீங்கள் நல்ல நடிகனாக இருந்தால் அடுத்து ஒரு நல்ல படத்தை கொடுங்கள். உங்களுக்கு தேவையான பணத்திற்கு மேல் சேர்த்துவிட்டீர்கள் தயவுசெய்து படத்தில் நடிப்பதை சிறிது நாட்களுக்கு ஒத்திவையுங்கள். தயவுசெய்து உங்கள் ரசிகர்களுக்கு மொட்டை போடாதீர்கள்.               

Saturday, April 24, 2010

நான் மும்பை சென்ற கதை

          நான் இதற்கு முன்பு பல முறை மும்பை சென்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் மும்பை எனக்கு  புது அனுபவத்தையே கொடுத்துள்ளது.

மும்பையும் E.K.சாமியும்

          என் தாத்தா பாட்டி மும்பையில் வசிக்கிறார்கள். அவர்களை காணவே அங்கு நான் வருடத்திற்கு ஒருமுறை செல்வது வழக்கம். அவர்களும் அடிக்கடி போனில் தொடர்புகொண்டு மும்பைக்கு வா என்று அழைப்பு விடுவார்கள். நான் செய்யும் லொள்ளுகளையும் சேட்டைகளையும் பொறுத்துக்கொண்டு என்னை கனிவுடன் கவனிப்பார்கள் மற்றும் அவர்களது மகன் ராஜ் நான் எங்கு செல்லவேண்டுமென்றாலும்  தனது வேலைகளை விடுத்து தனது காரிலேயே அழைத்துச்சென்று பொறுமையுடன் இருந்து கவனிப்பார். இந்த முறையும் அவ்வாறே கவனித்து எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது காரணம் நான் இந்த முறை மும்பை சென்றது என் தாத்தா E.K.சாமி மரணத்திற்காக! நான் அவரை எபோழுதும் OLD என்று தான் அழைப்பேன் என் தாத்தா E.K.சாமிக்கு 80 வயது முடிந்த மறுநாள் உயிர் இழந்ததாக எனக்கு தகவல் வந்தது, பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.  அவர் பாபா அணுசக்தி நிறுவனத்தில் வேலை செய்து ஒய்வு பெற்றவர். கடுமையான உழைப்பாளி. அவரது நினைவு எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும், கடந்த வருடம் நான் அவரை கடைசியாக பார்க்கும்பொழுது   நான் கேட்டேன் OLD HOW ARE YOU? என்று அதற்கு அவர் ONEDAY OLD GOING TO BOLD என்றார் இதை என் பாட்டியிடம் சொன்னேன் அவர் கண்ணீர் வடித்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது பின் 45 வருட திருமண வாழ்க்கை ஆயிற்றே!

என் மும்பை ரயில் பயணம் 


          நான் எபொழுது மும்பை சென்றாலும் ரயிலில் 3 TIER AC COACHல் முன்பதிவு செய்வது வழக்கம், ஆனால் இந்த முறை என் தாத்தா திடீரென்று இறந்ததால் என்னால் AC COACHல் பதிவு செய்ய முடியவில்லை 2ND CLASS  SLEEPER தான் கிடைத்தது அதுவும் WAITING. கடைசியில் CONFIRM ஆகியது என் அதிர்ஷ்டம். இந்த ஏப்ரல் மாத வெயிலை தாங்கமுடியவில்லை இதை நினைக்கும் போது எனக்கு ஒரு VODAFONE விளம்பரத்தில் வரும் ZOO பொம்மைதான் ஞாபகம் வருகிறது. ஒரு ஜூ பொம்மையை மூன்று ஜூ பொம்மைகள் ஒரு அண்டாவில் வைத்து கீழே கொதியுட்டிவிடும், பிறகு அதற்கு ஒரு SMS வரும் அதை பார்த்ததும் அண்டாவில் உள்ள ஜூ பொம்மை கல கல என்று சிரிக்கும். அதே போல் தான் எங்கள் ரயிலும் கொதித்தது. இந்த முறை ரயிலில் பிச்சைகாரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் நான் பிச்சை போடவேண்டுமென்றால் சுமார் 5000 ரூபாயை நான் சிலரை மாற்றி வைத்திருந்தாலும் போதாது, அவளவு வசதி இல்லாததால் நான் அவர்களை தவிர்த்துவிட்டேன். என் ஒவ்வொரு பயணத்திலும் நான் நிறைய மனிதர்களை சந்தித்துள்ளேன் இந்த முறை ஒரு மாற்றுதிறனாளி (PYSICALLY CHALLENGED PERSON) ஒருவரை சந்தித்தேன். அவரும் அவரது மனைவியும் மும்பை TO சென்னை பயணசீட்டு பதிவு செய்திருந்தனர், ஆனால் இருவருக்கும் தனிதனி COMPARTMENTல் இடம் ஒதுக்கியிருந்தனர். அவர்களுக்கு தங்கள் இடங்களை பரிமாற்றம் செய்ய எவருமே முன்வராதது அவரது மனைவிக்கு மிகவும் வருத்தம் அளித்தது அவர் அழுதேவிட்டார். பிறகு நான் என் இடத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அடுத்த COMPARTMENTல் தனியாக பயணம் செய்தேன். அவர்கள் எனக்கு மிகுந்த நன்றி தெரிவித்தனர் அவர்களுடன் மிக நீண்ட நேரம் பேசிகொண்டிருந்தது எனக்கு மிகுந்த மனநிறைவை கொடுத்தது.

ரயிலில் திருநங்கைகள் 

          நான் எபோழுதும் திருநங்கைகளுக்கு ஆதரவான மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கருத்துடையவன். ஆனால் இந்த முறை மும்பை ரயிலில் செல்லும்போதும் சரி திரும்பும்போதும் சரி இவர்களின் அட்டகாசம் மிகவும் அதிகமாக இருந்தது. நானும் ஒரு திருநங்கையிடம் நன்றாக மாட்டிக்கொண்டேன். என்னை பணம் கேட்டு நான் இல்லை என்றவுடன் ஒரு திருநங்கை என் அருகில் வந்து அதன் மார்பகத்தை காண்பித்து இபொழுது 10 ருபாய் கொடுப்பாயா என்றும் மிகவும் மட்டமான முறையில் திட்டியும்விட்டது, நான் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தேன் பிறகு அந்த திருநங்கை கன்னத்தில் லேசாக அடித்துவிட்டு சென்றது. என் COMPARTMENTல் இருந்தவர்கள் அனைவரும் அந்த திருநங்கையை திட்டிதீர்த்தார்கள். திருநங்கையாக பிறந்தது அவர்களின் தவறா?, அவர்களை அம்போ என்று விட்டுவிட்ட இவர்களின் குடும்பத்தின் தவறா?, அல்லது அவர்களுக்காக எந்த துரும்பையும் கிள்ளி போடாத இந்த அரசாங்கத்தின் தவறா?

மும்பையும் புதுமையும் 

          ஒவ்வொரு முறை மும்பை செல்லும்போதும் நான் உன்னிப்பாக அதன் வளர்ச்சியை ஆராய்வேன் இந்த முறையும் அதை கவனித்தேன் உண்மையில் மும்பை உள்கட்டமைப்பு (INFRASTRUCTURE) துறையில் மிகவும் வேகமாக முன்னேரிகொண்டுவருகிறது. புதுமைகளை புகுத்துவதில் மிகவும் முனைப்புடன் இருப்பது நன்றாக தெரிகிறது. அதற்கு உதாரணமாக அங்கு வேலை நடைபெற்றுக்கொண்டுள்ள MONO மற்றும் METRO ரயில் திட்டங்கள், அதிவேக LOCAL ரயில்கள், அகன்ற 8  LANE கொண்ட அகன்ற சாலைகள் என்று இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். மும்பையுடன் ஒப்பிடும் போது சென்னை மெதுவான வளர்ச்சியே கொண்டுள்ளது என்பது என் கருத்து.

மும்பையில் என் PURCHASE 

          எப்பொழுது மும்பை சென்றாலும் நான் என் குடும்பத்திற்காக PURCHASE செய்வது வழக்கம். இந்த முறையும் நான் PURCHASE செய்த அனுபவம் மிகவும் வேடிக்கையாக அமைந்தது. முதலில் நான் ஷூ வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் அதற்கு மும்பையில் நல்ல வாய்ப்புகிடைத்தது நிறைய ஷூகளை PLATFORMல் வைத்து விற்றுக்கொண்டிருந்தனர் நான் அங்கு சென்று ஒரு ஜோடி ஷூவை அடுத்து விலையை கேட்டேன் கடைகாரர் 850 என்று பதிலளித்தார் நான் மிகவும் கெட்டிகாரத்தனமாக கேட்பதாக நினைத்து 250க்கு கேட்டேன் உடனே  கடைக்காரர் அதை PACK செய்து என்னிடம் கொடுத்துவிட்டார் நானும் அதை அசடுவழிய வாங்கிக்கொண்டு நடையை கட்டினேன், இதே போல சேலை CAR பொம்மைகளை நான் விரும்பிய விலைக்கு PURCHASE செய்து நடைகட்டினேன். எனக்கு ஒரு சந்தேகம் இவற்றின் உண்மையான விலைதான் என்ன? ஏமாந்தது கடைகாரர்களா அல்லது நானா?          

Saturday, April 17, 2010

உங்கள் குழந்தைகள் பார்க்கவேண்டிய 25 முக்கிய உலக சுற்றுலா இடங்கள்

          TRAVEL PLUS மாத இதழ் உங்கள் குழந்தைகள் வளர்வதற்குள் பார்க்கவேண்டிய உலகின் முக்கிய குழந்தைகள் சுற்றுலா தளங்களை கண்டறிந்து வெளியிட்டுள்ளது. அவற்றை நான் உங்களுக்காக கீழே கொடுத்துள்ளேன்.

1) முதலாவதாக தென்னாப்ரிக்காவில் SIMEN`S TOWN என்ற இடத்தில உள்ள PENGUIN சரணாலயம். உலகில் 20 இடங்களில் மட்டுமே PENGUINகள் காணப்படுகின்றன அவற்றில் மனிதர்கள் எளிதில் சென்று வரக்கூடிய இடமாக இந்த இடம் உள்ளது.

2) ஜெருசலேம் நகரிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக சென்று வரக்கூடிய இடமாக உள்ளது இந்த DEAD SEA என்றழைக்கப்படும் கடல். இந்தத் கடல் நீரில் உப்பு போன்ற கனிமங்கள் அதிகம், எனவே இந்தத் கடல் நீரின் அடர்த்தி அதிகம். எனவே இந்த கடல் நீரில் நாம் ஒருபோதும் முழுகமாட்டோம். மீன்களும் இந்த கடலில் வாழ்வதில்லை.

3) எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள், பழங்காலத்தில் அங்கு வாழ்ந்த மன்னர்களின் உடல்களை பாதுகாக்ககட்டப்பட்டது. இன்றும் அவர்களது உடல்களை நாம் எகிப்து MUSUEMகளில் காணலாம். அவற்றை MUMMYS என்று அழைக்கின்றனர்.

4) இங்கிலாந்து நாட்டில் பர்மிங்காம் நகரத்தில் உள்ள CADBURY WORLD என்றழைக்கப்படும் சாக்லேட் உலகம், இங்கு நீங்கள் சாக்லேட் ல் சிலைகள், வாகனங்கள் போன்றவற்றை இங்கே காணலாம் வேண்டிய அளவு சாக்லேட்களை சாப்பிடலாம்.

5) சாண்டியாகோ நகரில் உள்ள BALBOA PARK, மற்றும் குழந்தைகள் வனவிலங்கு சரனாளையம் இவை இரண்டையும் காணத் தவறாதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு மிகச்சிறந்த இடமாக இந்த இடம் அமையும்.

6) கென்யா நாட்டில் உள்ள மிகப் பெரிய மிருககாட்சி சாலை மற்றும் நகுறு தேசிய பூங்கா.

7) HOLLYWOODல் உள்ள UNIVERSAL STUDIO மற்றும் அங்குள்ள 4D JURASSIC PARK.

8) அமெரிக்காவில் உள்ள DISNEYLAND

9) ANNE FRANK HOUSE - AMSTERDAM இங்கு குழந்தைகள் MUSEUM உள்ளது.

10) NATIONAL AIR AND SPACE MUSEUM - வாஷிங்டன் DC

11) அமேசான் காட்டில் உள்ள RAIN FOREST

12) ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால்

13) IGLOO VILLAGE HOTEL - KAKSLAUTTANEN, FINLAND

14) GIANT`S CAUSEWAY, ANTRIM, IRELAND

15) HARRY POTTER TOUR - ENGLAND இங்கே HARRYPOTTER படத்தில் வந்த இடங்களை குழந்தைகளுக்கு சுற்றிக்காட்டலாம்.

16) MADAME TUSSAUD`S WAXWORK MUSEUM, LONDON இங்கே உள்ள பிரபலங்களின் மெழுகு சிலையை காணலாம்.

17) GREAT BARRIER REEF - QUEENSLAND இங்கே QUENNSLAND கடலில் குளித்து மகிழலாம்.

18) ஸ்ரீலங்காவில் உள்ள BENTOTA MANGROVES காடுகள்.

19) நெதர்லாந்தில் உள்ள MADURODAM, THE HAGUE

20) மவுண்ட் எவரெஸ்ட் - காத்மாண்டுவில் இருந்து வருடத்தில் (FEB-APRIL) மற்றும் (OCT-NOV) மாதங்களில் பிரத்தியேக விமானங்களில் கண்டு வரலாம்.

21) சபர்மதி ஆசிரமம் - AHMADABAD- INDIA மகாத்மா காந்தி வாழ்ந்த புனிய இடம்.

22) THE TERRACOTTA ARMY, X1`AN - சீனா. சீனாவை ஆண்ட முதல் மன்னன் QIN SHI HUANG சுமார் 2000 வருடங்களுக்கு முன் கடிய 8000 செராமிக் படைவீரர்களின் சிலைகளை இங்கே காணலாம்.

23) CORBETT NATIONAL PARK - மற்றும் ZOO இந்தியா

24) ZORB, ROTORUA - இந்தியா

25) NEK CHAND`S ROCK GARDEN, CHANDIGARH - இந்தியா

          மேல் சொன்ன இடங்களை உங்கள் குழந்தைகளுக்கு சுற்றிக் காட்டுங்கள் நண்பர்களே வாழ்த்துக்கள்.

Saturday, April 10, 2010

இந்தியா VS பாகிஸ்தான்

          உலக கோப்பை கபடிப் போட்டி இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டுள்ளது. இதன் அரை இறுதியில் இந்தியா கனடாவை வென்றும், பாகிஸ்தான் இத்தாலியை வென்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இறுதிப் போட்டி நாளை (12-4-2010) அன்று லூதியானாவில் உள்ள குருநானக் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

Friday, April 9, 2010

தேசதுரோகி- சானியா

          இந்திய மக்கள் மிகவும் தாராளமனம் கொண்டவர்கள், விளையாட்டில் சிறிய சாதனைகள் செய்தாலே மிகவும் பெரியதாக நினைத்து கொண்டாடுவார்கள். சானியா இந்திய டென்னிசில் இளம் புயல் என்று வர்ணிக்கப்படுபவர். உண்மையில் அவர் எந்த சாதனைகளையும் இதுவரை டென்னிசில் செய்ததில்லை செய்யப்போவதும் இல்லை. ஆனால் தினமும் நாளிதழ் அல்லது வாரஇதழ் போன்றவற்றில் இவரது பேட்டி அல்லது படம் இடம்பிடிப்பது நிச்சயம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களையே கண்டுக்கொள்வதில்லை. ஆனால் இங்கு சானியா ஒரு வெற்றிமங்கை, இளம் சாதனையாளர், மற்றும் ஒரு மிக சிறந்த BRAND. இவர் செய்த சாதனையாக நான் நினைப்பது குட்டை பாவாடை அணிந்து ஆபாசமாக ஆடி பரபரப்பை ஏற்படுத்தியது, பாம்பு தோல் உரிப்பது போல் புதுப் புது நபர்களுடன் கிசுகிசுக்கப்பட்டது போன்றவைகளே ஆகும். இதன் உச்சகட்டமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப்மாலிக்குடன் திருமணம். இதில் மிகவும் கொடுமை சில நாட்களுக்கு முன்பு தான் நமது இளம் புயலுக்கு வேறு ஒரு நபருடன் திருமணமென்று பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தனர் பிறகு அந்த நபருடன் என கருத்துவேறுபாடோ அல்லது புதுமாப்பிள்ளை சோயப் மாலிக் வந்த நேரமோ பழைய நபரை அப்படியே கழற்றி விட்டுவிட்டார். நான் மற்றும் நாட்டு மக்கள் விரும்புவது திருமணத்திற்கு பிறகு தயவுசெய்து பாகிஸ்தானுக்காகவே டென்னிஸ் விளையாடுங்கள், நீங்கள் செய்த இந்த சாதனைகளே எங்கள் நாட்டிற்க்கு போதும். முஸ்லிம்கள் தலாக் என்று சொல்லுவார்கள் என்று கேள்விபட்டுள்ளேன் விரைவில் அதை எதிர்பார்க்கிறேன்.

Thursday, April 1, 2010

அங்காடி தெரு

          வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படமான அங்காடிதெரு படத்தைப் பார்த்தேன், சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணாஸ்டோர்ஸ் கடையை மையமாகக் கொண்டு நகரும் கதையாகவே இது இருக்கிறது. சரவணாஸ்டோர்ஸ் கடையில் நடப்பதாக காட்டியுள்ள மனித உரிமை மீறல்களை அளவுக்கு அதிகமாக படமாக்கியுள்ளனர். சரவணாஸ்டோர்ஸ் கடையானது 10000க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலையை கொடுத்துள்ள ஒரு நேர்மையான நிறுவனம். பொது மக்களுக்கு மற்ற கடைகளை விட குறைந்த விலையில் பொருட்களை விற்கும் ஒரு உன்னத நிறுவனமும் கூட, இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தும் அதை விடுத்தது அங்கு வேலை பார்பவர்களை கொத்தடிமை போல் நடத்துவதாக காட்டியுள்ளார் வசந்தபாலன், அதாவது இந்தப் படத்தில் வில்லனாக சரவணாஸ்டோர்ஸ் அதிபரையே காட்டியுள்ளது மிகவும் கொடுமை. வசனகர்த்தா ஜெயாமோகன் பிச்சைகாரர்கள் மற்றும் அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதியே நல்ல பணம் பார்க்கத் தெரிந்த ஒரு திறமையான எழுத்தாளர். படத்தில் பாடல்கள் கேட்கும் படி உள்ளது.  லிங்கமாக புது முகம் (மகேஷ்), கனியாக (அஞ்சலி) பாத்திரதிற்கு ஏற்றார் போல் நடித்துள்ளனர். மற்றபடி இந்தப் படம் நன்றாக இல்லை.