Tuesday, February 14, 2012

ஈனப்பிறவி ஜெயலலிதா

           அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மின்வெட்டு நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு, தற்போதைய நிலவரப்படி 8 மணிநேரத்தை தொட்டுள்ளது. மின்வெட்டின் கோர விளைவுகள் ஒருபுறம் என்றால், மின்வெட்டு நேரத்தை அதிகரிப்பதற்கான நிர்ப்பந்தம் என்ன? என்பதை கூட விளக்க மறுக்கும் மாநில ஆட்சியாளர்களின் அலட் சியமும், அகம்பாவமும் சகிக்கக்கூடியதாக இல்லை.

இந்த லட்சணத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து மாநிலம் முழுவதும் மக்களிடம் ஆலோசனை கேட்கும் அலங்கோல மும் நடந்துவருகிறது.

மின்வெட்டை எதிர்த்து வீதிக்கு வந்து போராடும் தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிமுக அரசு இந்த மக்கள் எழுச்சியை ஒடுக்கிவிட முயல்கிறது.

சட்டமன்றத்தில் கைநீட்டி பேசியதற்காக எதிர்க்கட்சி தலைவர் மீது உரிமைமீறல் பிரச்சனை கொண்டுவரப்பட்டு, உடனடியாக தீர்ப்பு எழுதப்பட்டு 10 நாள் சஸ்பெண்ட் செய் யப்பட்டார்.

மின்வெட்டினால் பாசன வசதியை இழந்த விவசாயிகளும், தொழிலை இழந்த தொழி லதிபர்களும், வேலையிழந்த தொழிலா ளர்களும், தறி இயக்கம் இழந்த நெசவாளர்களும், வெப் பத்தில் புழுங்கித் தவிக்கும் பொதுமக்களும், கொசுவின் கோரத்தாக்குதலுக்கு ஆளாகும் குழந்தைகளும், மூச்சுத் திணறும் முதியோர் களும் யார் மீது உரிமைமீறல் கொண்டுவருவது என்று தெரியவில்லை.

எல்லா இடத்திலும் பரம்பொருள் நிறைந் திருப்பதாக ஆத்திகர்கள் நம்புகின்றனர். ஆனால் பெட்டிக்கடையில் இருக்கும் ஜெராக்ஸ் முதல் துவங்கி, மிகப்பெரும் ஆலைகளின் எந்திரங்கள் வரை மின்சாரம் இன்றி இங்கு எதுவும் இயங் காது என்பது கண்முன்னால் தெரிகிற நிதர்சனம். கண்கட்டும் மின்வெட்டால் தமிழகத்தில் அன்றாட இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்கிறது.

உடனடியாக மின்சாரம் தரும் மந்திரக்கோல் எதுவும் அரசிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மின்வெட்டை தவிர்க்க அரசு செய்யும் தற்காலிக ஏற்பாடுகள் என்ன? நீண்டகால தொலைநோக்குத் திட்டங்கள் என்ன? என வாக்களித்த மக்களுக்கு விளக்கவேண்டியது ஒரு ஜனநாயகப்பூர்வ அரசின் கடமையாகும்.