Tuesday, March 22, 2011

ராமதாஸ், திருமா, வைகோ- ஒற்றுமைகள்!!!

          அதிமுக கூட்டணியில் 8 முதல் 12 தொகுதிகள் கொடுப்பதாக சொல்லியும் தேர்தலை புறக்கணிப்பதாகவும், ஜெயலலிதா பேய் பிசாசு, திமிர் பிடித்தவர் என்று தற்பொழுது குலைக்கும் வைகோ சிறிதேனும் யோசிக்கவேண்டும். அவரின் மதிமுகவிற்கு ஓட்டு வங்கி என்று ஒன்று தமிழகத்தில் இல்லவே இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த நிலையில் மேற்சொன்ன தொகுதிகளே அதிகம். நாஞ்சில் சம்பத் எமது தலைவர் வைகோ சிறந்த பேச்சாளர் அவர் இல்லாமல் எந்த கூட்டணியும் வெற்றிபெறாது என்று காமெடி செய்துள்ளது நடிகர் வடிவேல் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பேசியதை விட காமெடி. 

          வைகோ, ராமதாஸ், திருமா இவர்கள் மூன்று கட்சிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு, எவருக்கும் தமிழகத்தில் ஓட்டு வங்கி என்பதே கிடையாது, மாறாக வாய்சவடால் வீரர்கள். ஒவ்வொரு முறையும் இதை வைத்தே கூட்டணி தொகுதிகளை பெற்றுவருகின்றனர் இவர்கள். இவர்களின் மிரட்டலுக்கு எப்பொழுதுமே பயப்படுபவர் கருணாநிதி மட்டுமே. அதை தெரிந்தே அங்கு சென்று ராமதாஸ் மற்றும் திருமா ஒட்டிக்கொண்டனர். வைகோ வழக்கம் போல் ஏமாந்துவிட்டார்.

          திருமாவளவன் மேடைகளில் ஏறினால் அவர் மிகவும் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு இலங்கை தமிழர்களைப் பற்றியும் அவர்கள் துயரத்தையும் பேசுவது வாடிக்கை. ஆனால் உண்மையில் இவரும் சக MPக்களும் இலங்கைக்கு சென்றிருந்தப்பொழுது இலங்கை அரசை எதிர்த்து பேச நல்ல வாய்ப்பிருந்தும் அதை வேண்டுமென்றே தவிர்த்து மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்தவுடன் வாய்ப்பேச்சை தொடங்கிவிட்டார். இவர் தலித்துகளும் ஒன்றும் செய்யவில்லை செய்யப்போவதும் இல்லை, இலங்கை தமிழர்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை. தற்பொழுது ஒரு MLA SEAT இரண்டு கோடி முதல் ஐந்து கோடி வரை விற்றுக்கொண்டுள்ளார். இதை என்ன என்று சொல்வது??


          அடுத்து ராமதாஸ் இவரைப் பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. மூளை என்று ஒன்றில்லாமல் முன்னுக்குப்பின் முரணாக பேசுவதே இவரின் கொள்கை. இவருக்கும் கடந்த பலவருடங்களாக ஓட்டு வங்கி தேய்ந்துக்கொண்டே வந்துள்ளது எனினும் இதை பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால் அவர்களை ஜெயாடிவியா? தினமலரா? என்றெல்லாம் வசைப்பாடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். முக்கியமாக கடந்த சில வருடங்களாக இவர் உள்ள கூட்டணி தோல்வியையே கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களின் செயல்பாடுகளை இந்தத் தேர்தல்களில் பொறுத்திருந்து பார்போம்.

1 comment:

  1. வை.கோபால்சாமி,தென் மாவட்டங்களில் 10 15 தொகுதிகளில் கணிசமான் வாக்கு வங்கியை வைத்துள்ளார்.நடுநிலையாளர்கள் மத்தியில் வை.கோபால்சாமிவிற்கு நல்ல மரியாதை உள்ளது.ஆகையால் கூட்டணி குளறுபடி,எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கு எதிர்கட்சியை பதம் பார்க்கும்

    ReplyDelete