Thursday, September 15, 2011

சபாஷ் முதல்வர்கள் மோடி மற்றும் நிதிஷ்

          வாஷிங்டன்: நாட்டின் பொருளாதாரத்திற்காக பல்வேறு துறைகளில் உள்கட்ட‌மைப்புப்பணிகளுக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்பதில் சிறந்த நிர்வாகத்திறமை உள்ளவர் என இந்தியாவின் குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடிக்கு அ‌மெரிக்க பாராளுமன்ற ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதியன்று அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸில் , சி.ஆர்.எஸ் என்ற காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆய்வுக்குழு 94 பக்க அறிக்கையினை தாக்கல் செய்துள்ளது. இதில் இந்தியாவின் குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியின் நிர்வாகத்திறமையினையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும்,தொழில்துறையின் வளர்ச்சிக்கும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிறந்த அரசு நிர்வாகம் நடத்துகிறார் நரேந்திரமோடி என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவரைத்தொடர்ந்து பீகார் முதல்வர் நிதீஷகுமாரின் நிர்வாகத்திறமையினையும் அக்குழு பாராட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

                                                                                       நன்றி தினமலர்

Wednesday, September 14, 2011

அமெரிக்காவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

           நியூயார்க்: அமெரி்க்காவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீ்ழ் வசித்து வருவதாக அந்நாட்டு மக்கள் தொகை ஆய்வு மையம் வெளியிட்டு்ள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2009-ம் ஆண்டு 43.6மில்லியன் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு (2010-ம் ஆண்டு) 46.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது 14.3 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம் வாங்கும் சக்தி அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்காவில் ஆண்டு வருமானம் 11,139 டாலர் ரூ. 5லட்சம் உள்ளவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் எனவும், ஆண்டு வருமானம் 22,314 டாலர்( ரூ. 10 லட்சம்) மேல் என அமெரிக்கர்களின் ஆண்டு வருமானம் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் செல்லும் நிலைமை 6.4 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சுகாதாரம், ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் இன்றி கடந்த ஆண்டு (2009) 49. மில்லியன் மக்களும், 2010-ம் ஆண்டு 49.09 மில்லியன் மக்களும் உள்ளனர். இது 16.03 சதவீதம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

                                                                    நன்றி தினமலர்