Friday, April 22, 2011

வெள்ளி- தங்கம் ஏற்றம் தொடருமா?

          கடந்த சில வருடங்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஏறுமுகமாகவே இருந்து வருகின்றன. அனைத்து தொலைக்காட்சிகளும், நாளிதழ்களும் இவற்றின் விலைகளை தினமும் அறிவித்து மக்களை மிரளவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. தங்கம் மற்றும் வெள்ளி கடந்த 10 வருடங்களாக வாங்குபவர்களுக்கு லாபத்தையே கொடுத்துக்கொண்டுள்ளது, அதாவது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. இதற்கு காரணமாக உற்பத்தி குறைவு தேவைப்பாடு அதிகம் இன்று சொல்லப்படுவதே ஆகும். கடந்த ஒருவருடத்தில் வெள்ளி 150%, தங்கம் 35% உயர்ந்துள்ளன.

          வெள்ளியை பொறுத்தவரை தற்பொழுது பல்வேறு துறை சார்ந்த தொழிற்சாலைகளில் தேவைப்பாடு அதிகமாகியுள்ளதால் ஏற்றத்தின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. ONLINE துறையில் சம்மந்தமுடைய என் நண்பரை விசாரித்ததில் வெள்ளி தீபாவளிக்குள் 75000 (பார் வெள்ளி) வரை செல்ல வாய்ப்புள்ளது மேலும் இருவருடங்களில் 100000 வரை செல்ல வாய்ப்புள்ளது என்றும் தங்கம் தீபாவளிக்குள் ஒரு கிராம் 2500 (24 காரட்) செல்லவும் இருவருடங்களில் 4000 செல்லவும் வாய்ப்புள்ளதாக சொன்னார். மேலும் ONLINE வர்த்தகம் மூலம் மட்டும் இவற்றின் விலை ஏறவில்லை என்று கூறினார் அதற்கு காரணமாக ONLINE வர்த்தகம் இல்லாத 30 வருடங்களுக்கு முன் தங்கம் மற்றும் வெள்ளி திபீரென்று பலமடங்கு அதிகரித்ததை சுட்டிக்காட்டினார், மேலும் ONLINE வர்த்தகத்திலிருந்து வெள்ளி மற்றும் தங்கத்தை நீக்கமுடியாது என்றும் நீக்க அவசியம் இல்லை என்றும் கூறினார். கடந்த ஒருஆண்டில் இவற்றின் விலையேற்றத்தை கீழ் மட்டும் மேலே CHARTல் காணலாம்.

மின் வெட்டு!!!

           கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மின் வாரியம் விடுத்த அறிக்கையில் தவிர்க்க முடியாத காரணத்தால் தமிழகம் முழுவதும் மூன்று மணிநேரமும் சென்னையில் ஒருமணிநேரமும் மின்தடையை அறிவித்துள்ளது.
           தற்பொழுது தமிழகம் மட்டும்மல்ல இந்தியா முழுவதும் (குஜராத் மாநிலம் மட்டும் இதற்கு விதிவிலக்கு) மின் தடை அதிகமாக உள்ளது. அதற்கு மூன்று காரணங்கள் உள்ளதாக தெரிகிறது ஒன்று உற்பத்தி குறைவு இரண்டு இந்தியா முழுவதும் இலவசங்களாக கொடுக்கப்படும் விவசாயிகளின் மின்சாரத்தை மாநில அரசுகள் தவறாக பயன்படுத்துதல் மூன்று மின்சாரம் கொடுக்கும் நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் உரிய பணத்தை கொடுப்பதில்லை.


          மேற்சொன்ன அனைத்து காரணங்களும் நமது மாநிலத்திலும் உண்டு என்றாலும் கடந்த ஐந்து ஆண்டு காலமாக பதவியிலிருந்த திமுக அரசு மின் உற்பத்திக்கு எந்த புதிய திட்டங்களை செய்யவில்லை, மேலும் வசூலாகும் வரிகள் அனைத்தையும் இலவசங்களுக்கு செலவழிக்கவே சரியாக இருக்கிறது. 
            கருணாநிதி கடந்த ஐந்து ஆண்டுகளாக பாராட்டு விழாக்களில் செலவழித்த நேரங்களை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் போன்றவற்றில் செலவழித்திருந்தால் தமிழகம் மின் உபரி மாநிலமாக நிச்சயம் மாறிஇருக்கும். மாறாக தற்பொழுது இரண்டு மணிநேரம் மின்தடை மூன்று மணிநேரமானது தான் மிச்சம். என் ஒரே ஆறுதல் அடுத்த ஐந்து ஆண்டுகாலம் தமிழக மக்கள் கருணாநிதியை அவரது வீட்டிலேயே ஓய்வெடுக்க விட்டுவிடுவர் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கிறேன்.

Sunday, April 17, 2011

வருடத்திற்கு ஒரு முறை!!!

          எங்கள் வீட்டில் எத்தனையோ மரங்கள் செடிகள் மற்றும் கொடிகள் இருந்தாலும், இந்த செடிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்போம். உண்மையில் எங்களுக்கு அந்த செடியின் பெயர் கூட தெரியாது. அதன் சிறப்பு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பூக்கள் பூத்துக்குலுங்கும்.
           உங்கள் எவருக்கேனும் இந்த செடியின் பெயர் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கவும். மிகவும் உபயோகமாக இருக்கும்.

Saturday, April 16, 2011

வனங்களை அழிப்போம் நாடு வளம்பெறும்!!!

          கடந்த வாரம் என் நண்பர் ஒருவர் எனக்கு போன் செய்து ஏப்ரல் 10 ஞாயிற்றுக்கிழமை HINDU நியூஸ்பேப்பரில் 22ம் பக்கத்திலுள்ள செய்தியை படிக்கச்சொன்னார். அதைப்பற்றி,

          மகாராஷ்டிரா மாநிலம் KHED மற்றும் MAVALதாலுக்காவை சுற்றியுள்ள மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள 194.66 HECTARES பரப்பளவு கொண்ட வனப்பகுதியில், இங்கிருந்து 3.5கிமி தொலைவில் பீமாஷங்கர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இதன் அருகில் ANDHRA LAKE WIND POWER PROJECT என்ற திட்டம் வரையறுக்கப்பட்டு INDO-GERMAN ENTERPRISE ENERCON INDIA என்ற நிறுவனத்திடம் அந்த பணிகளை செய்ய அனுமதியை வழங்கியுள்ளது மகாராஷ்டிரா அரசு. மேலும் இந்த PROJECT நடைபெறும் இடம் அடர்ந்த (RESERVE) காடுகள் ஆதலால், இந்த PROJECT இடத்திற்கு செல்ல வழி அமைக்க 26615 தேர்ந்தெடுத்த மரங்களை வெட்டி சாலை அமைக்க ENERCON INDIA நிறுவனத்திற்கு கோர்ட் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் இதுவரை கிட்டத்தட்ட மூன்று லட்சம் மரங்களை வெட்டியுள்ளது ENERCON INDIA நிறுவனம். இதை அறிந்த சமூக ஆர்வலர்களான KALE மற்றும் VISHWAMBAR CHOUDHARI BOMBAY HIGH COURTல் DEC 2010ல் வழக்கு தொடர்ந்தனர். மேலும் மார்ச் 31ல் COURT உத்திரவின் பேரில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய சென்றபொழுது அங்கு மரம் வெட்டுதலும், வெடி வைத்துத்தகர்தலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்துள்ளது. ENERCON INDIA நிறுவனத்திற்கு வெடிவைக்க அனுமதி இல்லை என்பது புனே COLLECTOR கொடுத்த கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று KALE தெரிவித்துள்ளார். KALE மேலும் தெரிவிக்கையில் அரசு விதிப்படி தேசிய வனவிலங்கு சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதியை சுற்றி 10 கிலோமீட்டர் தொலைவிற்கு எந்த திட்டமும் தொடங்க மத்திய மற்றும் மாநில அரசாங்கம் NOC கொடுக்கவேண்டும், அதை எவ்வாறு ஆய்வு செய்யாமல் கொடுத்துள்ளார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


           மேற்சொன்ன காட்டில் இந்தியன் ஜெயின்ட் அணில்கள் (SHEKRUஇனம், படத்திற்கு மேலே பாருங்கள்), மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அதிக மரங்களை வெட்டுவதாலும் மற்றும் வெடி வைப்பதாலும் இந்த அணில்கள் இனம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வகை அணில்கள் அடர்ந்த மரங்களுடன் கூடிய காட்டுப்பகுதியில் மட்டுமே வசிக்கும். இது குறித்து எந்த மகாராஷ்டிரா அரசியல் கட்சியும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்பது ஆச்சரியத்திற்கு உரியது. கேள்வி எழுப்பிய ஒரே சிவசேனா MPயான SHIVAJI ADHALRAO PATILலும்,  ENERCON INDIA இவருக்கு எழுதிய கடிதத்தில் காடுகளை அழிக்காமல் இந்தத் திட்டத்தை சரியாக முடிப்போம் என்று கூறியதைத் தொடர்ந்து வாய்மூடிக்கொண்டுவிட்டார். மத்திய அரசும் வாங்கவேண்டியத்தை வாங்கிக் கொண்டு அனுமதி அளித்துவிட்டனர்.


          சமீபகாலமாக செய்திகள் மற்றும் நாட்டில் நடக்கும் விஷயங்கள் என் தூக்கத்தை கெடுத்துக்கொண்டுள்ளன மற்றும் என் ரத்தஅழுத்தத்தை அதிகரித்துக்கொண்டும் உள்ளன. இவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொண்டால் என் மனம் சிறிது சாந்தமடையும் என்று திடமாக நம்புகிறேன்.  

          BHISMASHANKAR WILDLIFE SANCTUARY படங்களைப் பார்க்க கீழே உள்ள LINKஐ CLICK செய்யவும்.

Wednesday, April 13, 2011

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

          என் நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.


Tuesday, April 12, 2011

இன்று வாக்குப்பதிவு நாள்!!!

          இன்று வாக்குப்பதிவு நாள், எனவே ஓட்டளிக்க மறக்கவேண்டாம்.

Saturday, April 9, 2011

தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே!!!

          கடந்த சில நாட்களாக என் மனதை உறுத்திக்கொண்டுள்ள விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். நான் சந்திக்கும் மனிதர்கள் மற்றும் என் நண்பர்கள் அனைவரும் என்னை முதலில் கேட்கும் கேள்வி இந்த தேர்தலில் திமுக நம் தொகுதியில் வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறது என்று உனக்கு தெரியுமா? ஒரு ஓட்டுக்கு 1000 கொடுக்கப்போகிறார்கள் என்று சொல்கிறார்களே அது உண்மையா? உனக்கு இதைப்பற்றி ஏதேனும் தகவல் தெரியுமா? என்றே என்னை கேட்கிறார்கள்.

          தேர்தல் பிரசாரத்தில் திமுக கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் போன்றோர் மக்களை இலவசங்கள் மூலம் மட்டும் சந்திக்கவில்லை. அவர்கள் மிகவும் அதிகமாக நம்பியுள்ளது ஓட்டுக்குப் பணம் மட்டுமே. மற்ற கட்சிகள் பணம் கொடுத்து ஒட்டு வாங்க நினைத்தாலும் இதில் முதலில் உள்ளது திமுக மட்டுமே. திமுக போன்ற மட்டமான கட்சிகளால் மக்களின் மனநிலையே மாறிவிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எந்த அடிப்படைவசதிகளையும் செய்யாமலே இலவசங்கள் மற்றும் ஓட்டுக்குப் பணம் இவை இரண்டை வைத்தே மக்களை கவரநினைக்கிறார் இந்த கருணாநிதி & சன்ஸ் நிறுவனம். மக்களும் பணத்தை மிகவும் ஆவலோடு எதிர்பார்கின்றனர். 

          இதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்பது இந்த மக்களுக்கு தெரியவில்லையே என்று மிகவும் கஷ்டமாக உள்ளது. பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் தமிழகம் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருந்தது. இந்த மானங்கெட்ட மக்கள் அவரை தோற்கடித்தனர் விளைவு? இதோ இன்று வரை நாம் அனுபவித்துக்கொண்டுள்ளோம். இப்பொழுது முதல் மாநிலமாக குஜராத் உள்ளது. கருணாநிதியை முதல்வராக்கினால் இனி எப்பொழுதும் எந்தத்துறைகளிலும் தமிழகம் தன்னிறைவு அடையாது என்பது உண்மை. இதையெல்லாம் நினைக்கும் பொழுது ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.

                    தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே.  

          தவறான தலைவன் என்று தெரிந்தும் கருணாநிதியை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஈனமே இல்லாமல் கருணாநிதி & சன்ஸ் மக்களிடம் ஒட்டுக்கேட்கின்றனர். மானமில்லாத தமிழகமக்களும் அவர்களை வரவேற்கின்றனர். இதை என்ன என்று சொல்ல? இப்படிக்கு 

                                   இந்த தேர்தல் முடிவுகளை நினைத்து பயப்படும் நான்    

Friday, April 8, 2011

முட்டாள் மக்களுக்கு!!!

          நம் மக்கள் தேர்தலைப்பற்றியும் முடிந்துப்போன உலகக்கோப்பையை பற்றியும் இன்னும் வீண்பேச்சு பேசிக்கொண்டுள்ளனர். ஆனால் நமக்காக ஒருவர் ஊழலை ஒழிக்க சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கின்றார். அவர் தான் ANNA HAZARE. இவரைப் பற்றி எவரேனும் பேசுகின்றனரா? அல்லது நினைக்கின்றனரா? அவர் என்ன அவரின் கோரிக்கைகள் நிறைவேரவா உண்ணாவிரதம் இருக்கிறார்? அவருக்கு ஏதேனும் பதவிகள் வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறாரா?



          சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான், அனுபம்கேர், அமீர்கான் இன்னும் பெரிய சமூக ஆர்வலர்கள் இந்தப் பெரியவரையும் அவரது கோரிக்கைகளையும் பெரிதும் மதிக்கின்றனர் மற்றும் ஆதரிக்கின்றனர். உழலை எதிர்க்கும் மற்றும் கடுமையாக தண்டிக்கும் LOKPAL BILLஐ உடனடியாக சட்டமாக வலியுறுத்தி இந்தப் பெரியவர் செய்யும் தியாகத்திற்கு நாமும் ஆதரவு அளிப்போம். 

Tuesday, April 5, 2011

திருமாவளவன்- நீங்க நல்லவரா கெட்டவரா?

          தமிழக அரசியலில் ஆவேச பேச்சாகட்டும், கதறி அழுவதாகட்டும் அல்லது முக்கிய இலங்கை தமிழர்களுக்கு உதவுவதாக நடிப்பதாகட்டும் இவருக்கு இணை இவரே. இவரைப்பற்றி எனக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வரை நல்ல அபிப்ராயமே இருந்தது. ஆனால் நேற்று எனக்குக் கிடைத்த உண்மை தகவலைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன், அந்த தகவலை பின்புப்பார்போம்.

          தலித்இனத்தை காக்க வந்த தலைவன் நான்தான் என்று கூறிக்கொள்ளும் திருமா, இன்று வரை அவர்களுக்கு என்ன நன்மைகள் செய்துள்ளார்? இவர் இவரின் இலக்கிலிருந்து வழுக்கி கருணாநிதிக்கு துதிப்பாடுவதே தொழிலாக செய்துக்கொண்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது.

          தலித்துகளின் நீண்ட நாள் பிரச்சனைகளான இரட்டை குவளை முறை இன்னும் சில இடங்களில் நடைமுறையில் இருக்கிறது. இவர்களின் இடஒதிக்கீட்டில் உள்ள குளறுபடிகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. தலித்துகள் கல்வியில் முன்னேற்றம் அடைய செய்ய மிகப்பெரிய நடவடிக்கைகள் அல்லது சலுகைகள் எதுவும் தரப்படவில்லை. தலித்துகள் செய்யும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது குறித்து விழிப்புணர்வு பிரசாரமோ அல்லது இதை தடுக்க மிகப்பெரிய நடவடிக்கைகளோ உங்களிடம் இல்லையே? உங்கள் இனத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது இதை தீர்க்க யோகியதை உங்களுக்கில்லை, இலங்கை தமிழர்களைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லை ஆனால் தீவிரவாதிகளான விடுதலைப்புலிகளைப்பற்றி மிகவும் கவலைப்படுகிறீர்கள்.

          கடைசியாக நீங்கள் பெற்ற 10 சட்டசபை தொகுதிகளில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பார்வேந்தன் என்ற ரவுடி வக்கீல். அவரின் தொழிலே கட்டப்பஞ்சாயத்து செய்வது, அப்பாவிகளின் சொத்துக்களை அபகரிப்பதே ஆகும். இவரைப்போய் செய்யூர் வேட்பாளராக ஆக்கியுள்ளீர்களே ஏன்? உங்கள் கட்சியில் மிகவும் நல்லவர் குறைவோ? இதற்கு அவரிடமிருந்து மூன்றுகோடிகளை பெற்றுள்ளீர்களே இது ஞாயமா? மேலும் விசாரித்தப்போது உங்களின் அனைத்து வேட்பாளர்களிடமும் தலா மூன்று கோடி ரூபாய்களை பெற்றீர்கள் என்ற உண்மை செய்தி என்நெஞ்சை ஈட்டி என குத்திக் கிழித்தது.

          இதற்கு மேல் உங்களை உங்கள் ஜாதிக்காரர்களோ அல்லது தமிழர்களோ நம்பினால் அவர்கள் முட்டாள்.

Monday, April 4, 2011

இந்த தேர்தலில் எந்த கூட்டணி வெற்றிபெறும்!!

          இந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறும் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்? ஆனால் என்னால் சரியாக கணிக்கமுடியவில்லை காரணம், திமுக மற்றும் அதிமுக இந்த இரு கூட்டணிகளுமே சமபலம் கொண்டதாகவே தெரிகின்றன. மேலும் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் எதிர்ப்பு அலையோ அல்லது எந்த கட்சிக்கும் ஆதரவு அலையோ பெரியதாக இருப்பதாக இதுவரை தெரியவில்லை. 

          2G SPECTRUM மற்றும் திமுகவின் மற்ற ஊழல்களை எடுத்துக்கொண்டாலும், மக்கள் ஊழலை ஒரு அளவுகோலாக இதுவரை பார்த்து ஓட்டளிக்கவில்லை என்பது கடந்த காலங்களை உற்றுப்பார்த்தால் நன்கு தெரியும். பிறகு இலவசங்களை ஒரு அளவுகோலாக எடுத்துக்கொண்டாலும் இரு கட்சிகளுமே சம அளவுகளிலேயே இலவசங்களை அறிவித்துள்ளன. முதல்வர் வேட்பாளர் என்ற முறையில் பார்த்தாலும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவருக்கும் சம அளவிலேயே ஆதரவு உள்ளதாக தெரிகிறது. குடும்ப அரசியல் என்பதை பார்த்தால் திமுகவின் பலம் சற்று குறைகிறது. எனினும் இது எந்த அளவிற்கு இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்று தெரியவில்லை?

          விலைவாசி உயர்வு மக்களிடையே நன்கு பிரதிபலித்தாலும், அரசாங்க ஊழியர்களின் ஓட்டு அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் திமுக அணிக்கே செல்லும் என்பதில் எந்த மாற்றம் இல்லை. இதுபோல் ஒவ்வொரு கூட்டணிக்கும் ஒவ்வொரு பலம் மற்றும் பலவீனம் உள்ளன. மொத்தத்தில் இன்னும் மக்கள் எவருக்கு ஓட்டளிக்கவேண்டும் என்பதை முடிவுசெய்யவில்லை என்றே தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் இந்தத் தேர்தலில் போட்டி மிகவும் கடுமையாகவே இருக்கும் என்று தெரிகிறது.

          இந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டளிக்கவே நான் விரும்புகிறேன்.  என்னிடம் கேட்பவர்களுக்கும் அதிமுகவிற்கே ஓட்டளிக்க சொல்கிறேன், பொறுத்திருந்து என்ன நடக்கிறது என்று பார்போம்.

தயவுசெய்து இந்த குறும்படத்தை பாருங்கள்!!!

Sunday, April 3, 2011

இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை வென்றது இந்தியா!

          எதிர்ப்பார்த்தது போலவே ஸ்ரீலங்காவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றுவிட்டது இந்தியா. பரபரப்பான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. டோனி மற்றும் காம்பிர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். இந்த உலகக்கோப்பையில் இந்திய சார்பில் அதிகபட்சமாக சச்சின் 482 ரன்கள் குவித்ததும், ஜாகிர்கான் 21 விக்கெட் வீழ்த்தியதும், யுவராஜ் 377 ரன்களும் 15 விக்கெட் வீழ்த்தியதும் இந்தியா கோப்பையை கைப்பற்ற பெரிதும் உதவியுள்ளது. 


Saturday, April 2, 2011

இன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டி!!!

          இன்று அனைவராலும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. சமபலம் கொண்ட இந்தியாவும் இலங்கையும் மோதஉள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றியடையும் அணி உலகக்கோப்பையையும் உலக சாம்பியன் பட்டதையும் வெல்லும். இந்தப்போட்டியை காண இலங்கையின் அதிபர் ராஜபக்சே மற்றும் இந்திய ஜனாதிபதி பிரதிபா படீல் போன்றோர் வருகை தர உள்ளனர். இதைமுன்னிட்டு 8 அடுக்கு பாதுகாப்பு தரப்படுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள்.
         மும்பை வாங்கடே மைதான PITCH முதல் ஆடுபவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் 280க்கு மேல் சேர்க்கும் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆட்டத்தில் TOSS ஒரு முக்கிய பங்குவகிக்கும்.

Friday, April 1, 2011

கருணாநிதி அரசின் சாதனைகள்!!!

          இந்த தேர்தலில் கருணாநிதி அவர்கள் மிக அதிகமாக இலவசங்களை அறிவித்துள்ளார் தமிழகமக்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று திமுக கூட்டணிக்கட்சிகள் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர் மக்களிடம் பிரசாரம் செய்கின்றனர் அவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் திமுக அமைச்சர்கள் அவர்களின் துறைகளில் என்ன சாதனைகள் செய்துள்ளனர்? அதை ஏன் இந்தப் பிரசாரத்தில் எவரும் சொல்லவில்லை? அதை நாம் கீழே பார்ப்போம்.
வீரப்பாண்டியார் (விவசாயத்துறை)
          கடந்த ஐந்து வருடங்களில் விவசாயிகள் பட்ட துன்பத்தைப் போல் வேறு எப்பொழுதும் அவர்கள் அடையவில்லை. தேவையான மின்சாரம் கிடைக்காமை, விளைநிலங்கள் விலைநிலங்கலானது, விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிக்க இந்தத் துறையிலிருந்து எந்த ஆகப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, விவசாயிகளுக்கு உரிய விலைக்கிடைக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அற்காடு வீராசாமி (மின்சாரத்துறை)
          நான் பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன், அங்கெல்லாம் மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், நம் தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவோ மேல் என்று சொல்லி மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்தார் வீராசாமியின் மனைவி. இந்த ஆட்சியில் தான் மின்வெட்டை ஒருநாளுக்கு இரண்டு மணிமுதல் மூன்று மணிவரை என்று தைரியமாக அறிவித்தார்கள். இந்தத்துறையின் சாதனை இதுவே. ஒரு மின்சாரத்தை தடையில்லாமல் வழங்க இயலவில்லை ஆனால் வரும் தேர்தலிலும் ஓட்டளியுங்கள் என்று மானமே இல்லாமல் கேட்கிறார்கள், இவர்களை என்ன சொல்ல?
வேலு (உணவுத்துறை)

          இந்தத்துறையில் ஒரு ரூபாய் அரிசி கொடுக்கப்பட்டதை சாதனையாக சொல்கிறார்கள். உண்மையில் கடந்த ஆட்சியில் 3.50 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசி மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுது விலை தான் இறங்கியுள்ளதே தவிர தரம் மிகவும் மட்டமாக உள்ளது. அதுமட்டுமா வெளிமாநிலங்களுக்கு அதிகமாக கடத்தப்படுகிறது மற்றும் இந்தத்துறை ஊழலை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இவைகளே இந்தத்துறை சாதனைகள்.

நேரு (போக்குவரத்துத்துறை)

           இந்தத்துறையில் புது பேருந்துகளே மிகவும் குறைவு, மற்றும் பழைய பேருந்துகள் பழுதுபார்க்கப்படுவதில்லை காரணம் மிகவும் நஷ்டத்தில் ஓடுகிறது. பேருந்துகளுக்கு டிசல் வாங்கக்கூட பணமில்லாமல் ஊழலில் கொழுதுக்கொண்டுள்ளது இந்தத் துறை. நேருவோ இன்ஜினியரிங் காலேஜ்கள் திறந்துக்கொண்டே உள்ளார்.

அன்பழகன் (நிதித்துறை)

          கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து தரப்பினர்களாலும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி தமிழகஅரசின் கடன் ஒரு லட்சம் கோடியை தாண்டியது என்பது. நிர்வாகத்திரனே இல்லாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இதற்குக்  காரணம். இதை இந்தத் தேர்தலில் சொல்லி ஓட்டுக்கேட்பார்களா?

துரைமுருகன் (சட்டத்துறை) 

          இந்த ஆட்சியில்தான் முதல் முதலில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டார்கள், திமுகவினர்களால் மிக அதிகமுறையில் சட்டங்கள் மீரப்பபட்டன. இவைகளே இந்த துரையின் சாதனை.

M.R.K.பன்னிர்செல்வம் (சுகாதாரத்துறை)

          போலி மருந்துகள் உட்கொள்வதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படாது!! என்று தமிழக முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார். ஆனால் திமுக கட்சியை சேர்ந்த பல புள்ளிகளுக்கு இதில் தொடர்புள்ளது என்ற செய்தி அப்பொழுது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அரசு மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் தரம்கெட்டுப் போனது இந்த ஆட்சியில்தான்.

          இன்னும் நிறைய துறைகள் இருந்தாலும் முக்கியமான துறைகளில் நடந்த ஊழல் மற்றும் அத்துமீறல்களை மேலே சொல்லியுள்ளேன். கருணாநிதி உண்மையிலேயே தமிழகமக்களின் மீது பற்றுக்கொண்டுள்ளார் என்பதற்கு மேல் சொல்லியுள்ளவைகளே ஆதாரம் மேலும் இவைகளையெல்லாம் மறைக்கவே இலவசங்களை அள்ளி விடுகிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடவேண்டாம். 
                            மிகவும் கவனத்துடன் வாக்களியுங்கள்