Sunday, March 6, 2011

காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஒரு கடிதம்!!!

          இன்று (7/3/2011) ஒரு முக்கியமான நாளாகும், இன்று CRUDE OIL புதிய இரண்டுவருட உச்சத்தை தொட்டுள்ளது (4822) மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. தங்கம் அதன் புது உச்சத்தையும், வெள்ளி அதன் புது உச்சத்தையும் இன்று அடைந்துள்ளன. மேலும் இந்த விலை உயர்வுகள் தொடரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

          காங்கிரஸ் அரசாங்கம் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இரண்டு முதல் மூன்று ரூபாய் அதிகரிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் என்னைப் போல் நடுத்தர வர்கத்தினர் மற்றும் ஏழைகள் சைக்கிள் பயணத்தை தொடர்வதை தவிர வேறு வழி இல்லை. அதைப் பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. CRUDE ஆயில் 6000 என்ற விலையில் இருந்தபொழுதே பெட்ரோல் மற்றும் டீசல் தற்பொழுதை விட குறைவாகவே இருந்தன. அப்பொழுது அந்தந்த பெட்ரோலிய கம்பெனிகள் சம்பாதிக்காத நஷ்டத்தை தற்பொழுது சம்பாதிக்கின்றனவா? இவற்றை விளக்க எவரும் இல்லை. தற்பொழுது நஷ்டம் ஏற்படுகின்றதென்றால் CRUDE 6000 விற்றபொழுது எவ்வாறு குறைவாக விலையை நிர்ணயிக்க முடிந்தது?

          மக்கள் அனைவரும் இங்கு வருந்தும்பொழுது யாரை திருப்பதிப்படுத்த இந்த தொடர் விலையேற்றம்? இவ்வளவு நாள் நீங்கள் கொள்ளையடித்தது போதாதா? மக்களின் நலனில் தற்பொழுதாவது சிறிது அக்கறை எடுத்தால் என்ன? திமுகவிடம் தொகுதிகள் வாங்குவதில் காட்டிய கண்டிப்பை நாட்டின் மிகமுக்கிய பிரச்னையான இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வில் காட்ட தயங்குவதேன்?

          இந்த விலை உயர்வால் மீண்டும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் அதிகமாக உயருமே? விவசாய உற்பத்தியும் மிகவும் குறைந்துள்ள தற்போதய நிலையில் மக்கள் எவ்வாறு இந்த உயர்வை தாங்குவர்? இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்?
                                                                                                                 வருத்ததுடன் நான்    

No comments:

Post a Comment