Friday, April 1, 2011

கருணாநிதி அரசின் சாதனைகள்!!!

          இந்த தேர்தலில் கருணாநிதி அவர்கள் மிக அதிகமாக இலவசங்களை அறிவித்துள்ளார் தமிழகமக்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று திமுக கூட்டணிக்கட்சிகள் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர் மக்களிடம் பிரசாரம் செய்கின்றனர் அவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் திமுக அமைச்சர்கள் அவர்களின் துறைகளில் என்ன சாதனைகள் செய்துள்ளனர்? அதை ஏன் இந்தப் பிரசாரத்தில் எவரும் சொல்லவில்லை? அதை நாம் கீழே பார்ப்போம்.
வீரப்பாண்டியார் (விவசாயத்துறை)
          கடந்த ஐந்து வருடங்களில் விவசாயிகள் பட்ட துன்பத்தைப் போல் வேறு எப்பொழுதும் அவர்கள் அடையவில்லை. தேவையான மின்சாரம் கிடைக்காமை, விளைநிலங்கள் விலைநிலங்கலானது, விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிக்க இந்தத் துறையிலிருந்து எந்த ஆகப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, விவசாயிகளுக்கு உரிய விலைக்கிடைக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அற்காடு வீராசாமி (மின்சாரத்துறை)
          நான் பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன், அங்கெல்லாம் மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், நம் தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவோ மேல் என்று சொல்லி மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்தார் வீராசாமியின் மனைவி. இந்த ஆட்சியில் தான் மின்வெட்டை ஒருநாளுக்கு இரண்டு மணிமுதல் மூன்று மணிவரை என்று தைரியமாக அறிவித்தார்கள். இந்தத்துறையின் சாதனை இதுவே. ஒரு மின்சாரத்தை தடையில்லாமல் வழங்க இயலவில்லை ஆனால் வரும் தேர்தலிலும் ஓட்டளியுங்கள் என்று மானமே இல்லாமல் கேட்கிறார்கள், இவர்களை என்ன சொல்ல?
வேலு (உணவுத்துறை)

          இந்தத்துறையில் ஒரு ரூபாய் அரிசி கொடுக்கப்பட்டதை சாதனையாக சொல்கிறார்கள். உண்மையில் கடந்த ஆட்சியில் 3.50 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசி மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுது விலை தான் இறங்கியுள்ளதே தவிர தரம் மிகவும் மட்டமாக உள்ளது. அதுமட்டுமா வெளிமாநிலங்களுக்கு அதிகமாக கடத்தப்படுகிறது மற்றும் இந்தத்துறை ஊழலை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இவைகளே இந்தத்துறை சாதனைகள்.

நேரு (போக்குவரத்துத்துறை)

           இந்தத்துறையில் புது பேருந்துகளே மிகவும் குறைவு, மற்றும் பழைய பேருந்துகள் பழுதுபார்க்கப்படுவதில்லை காரணம் மிகவும் நஷ்டத்தில் ஓடுகிறது. பேருந்துகளுக்கு டிசல் வாங்கக்கூட பணமில்லாமல் ஊழலில் கொழுதுக்கொண்டுள்ளது இந்தத் துறை. நேருவோ இன்ஜினியரிங் காலேஜ்கள் திறந்துக்கொண்டே உள்ளார்.

அன்பழகன் (நிதித்துறை)

          கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து தரப்பினர்களாலும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி தமிழகஅரசின் கடன் ஒரு லட்சம் கோடியை தாண்டியது என்பது. நிர்வாகத்திரனே இல்லாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இதற்குக்  காரணம். இதை இந்தத் தேர்தலில் சொல்லி ஓட்டுக்கேட்பார்களா?

துரைமுருகன் (சட்டத்துறை) 

          இந்த ஆட்சியில்தான் முதல் முதலில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டார்கள், திமுகவினர்களால் மிக அதிகமுறையில் சட்டங்கள் மீரப்பபட்டன. இவைகளே இந்த துரையின் சாதனை.

M.R.K.பன்னிர்செல்வம் (சுகாதாரத்துறை)

          போலி மருந்துகள் உட்கொள்வதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படாது!! என்று தமிழக முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார். ஆனால் திமுக கட்சியை சேர்ந்த பல புள்ளிகளுக்கு இதில் தொடர்புள்ளது என்ற செய்தி அப்பொழுது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அரசு மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் தரம்கெட்டுப் போனது இந்த ஆட்சியில்தான்.

          இன்னும் நிறைய துறைகள் இருந்தாலும் முக்கியமான துறைகளில் நடந்த ஊழல் மற்றும் அத்துமீறல்களை மேலே சொல்லியுள்ளேன். கருணாநிதி உண்மையிலேயே தமிழகமக்களின் மீது பற்றுக்கொண்டுள்ளார் என்பதற்கு மேல் சொல்லியுள்ளவைகளே ஆதாரம் மேலும் இவைகளையெல்லாம் மறைக்கவே இலவசங்களை அள்ளி விடுகிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடவேண்டாம். 
                            மிகவும் கவனத்துடன் வாக்களியுங்கள்

No comments:

Post a Comment