Sunday, January 23, 2011

எங்கள் தோட்டம்!!!

          நான் கடந்த வாரம் என் நண்பனின் வீட்டிற்கு சென்றிருந்தேன் அவரின் மகளிடம் பேசும்பொழுது தோட்டத்தை பற்றியும் குருவிகள் பற்றியும் பேச்சு வந்தது, அப்பொழுது நண்பரின் குழந்தை தோட்டம் என்றால் என என்று என்னை கேட்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த குழந்தைக்கு இதை விளக்க எனக்கு அப்பொழுது நேரம் இல்லை, குழந்தையிடம் உன் தந்தையிடம் கேள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு எனக்கு எங்கள் வீட்டு தோட்டத்தை பற்றி நினைவுகள் வந்தது, அவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் வீட்டு தோட்டம் எனக்கு எப்பொழுதும் மிகவும் பிடித்த இடமாகும், அங்கு சென்று அமர்ந்து கொண்டால் கிளிகள் குருவிகள் அணில்கள் போன்றவற்றின் சப்தம் மற்றும் அவற்றின் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் செல்வதே தெரியாது.

           இது எங்கள் வீட்டு கொய்யா மரம் இதை நான் 1998 வருடம் என்று நினைவு நானும் என் நண்பனும் குருவிமலை வரை சென்றிருந்தோம் அங்கு ஒரு தோட்டத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது, அங்கு இந்த கொய்யா மற்றும் எலுமிச்சை கன்றுகளை (அப்பொழுது மிகவும் சிறியதாக இருந்தன) வாங்கி வந்ததாக ஞாபகம்.

          தற்பொழுது கொய்யா காய்க்கிறது அதை கிளி மற்றும் அணில்களிடமிருந்து காக்க என் அம்மா ஒரு பிளாஸ்டிக் உறை போட்டு பாதுகாக்கிறார். எலுமிச்சை காய்க்கிறது, மற்றும் வெற்றிலை கொடி, ரோஜா செடிகள், துளசி செடி, வேப்பம்மரம், தேக்கு மரம், பன்னிர் மரம், செம்பருத்தி செடி, நாகலிங்க மரம் போன்றவை எங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ளன.
          குருவிகள், கிளிகள் மற்றும் அணில்கள் எப்பொழுதும் எங்கள் தோட்டத்தில் விளையாடிக்கொண்டுள்ளதை காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
          நீங்களும் மரங்களை வளர்த்து நமது நாட்டையும், சுற்றுச்சூழலையும் காப்பாற்றவேண்டும் என்றுக் கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, January 15, 2011

பெட்ரோல் என்னும் அரக்கன்!!!

          நமது காங்கிரஸ் அரசாங்கம் 10வது முறையாக பெட்ரோல் விலையை கடந்த ஒரு வருடத்தில் வெற்றிகரமாக உயர்த்தியுள்ளது. CRUDE ஆயில் 2008ம் 170 டாலர் விற்றப்பொழுதே பெட்ரோல் விலை 50க்கு கீழ் தான் இருந்தது, ஆனால் இன்று CRUDE ஆயில் 92 டாலர் மட்டுமே உள்ளது அனால் விலை? இனி அனைத்துப்பொருட்களின் விலை மீண்டும் உயரவிருக்கிறது. இதை கேட்கவேண்டிய கருணாநிதி இதற்கும் வாய்மூடி, 70 தொகுதி பட்டியலோடு காங்கிரஸ் கூட்டணிக்கு காத்துக்கொண்டுள்ளார். இந்த மானம்கெட்ட கூட்டணி இந்த முறை மீண்டும் வரவிடாமல் தடுப்பது நமது கையில், அனால் நாம் ஓட்டுக்குப் பணம், இலவசங்கள் போன்றவற்றை கண்டு மகிழ்ந்து    இதே மானம்கெட்ட கூட்டணியை ஆட்சியில் ஏற்ற துடிக்கிறோம். இறுதியில் வருந்துவது நாம் தான. வருத்ததுடன் நான்.

புத்தககண்காட்சி :-(

          நான் தவறாமல் வருடம்தோறும் புத்தக கண்காட்சிக்கு செல்பவன், இந்த வருடமும் 34வது சென்னை புத்தகக்கண்காட்சிக்கு சென்றேன். இந்தமுறையும் நல்ல கூட்டம் இருந்தது. ஆனால் நாள் பார்த்ததில் சமையல் புத்தககங்கள், சுயமுன்னேற்றப்புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு புத்தகங்கள்  இவைகள் மட்டுமே நிறைய விற்பதாக தெரிகிறது. ஒரு ஆராய்ச்சியை பற்றிய புத்தகங்களோ, வனவிலங்குகள், சுற்றுச்சூழல், பொருளாதாரம் போன்ற புத்தகங்களை சீண்டுவாரில்லை. ஆனால் ஒவ்வொரு கண்காட்சி முடிவிலும் 1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை என்று அனைத்துப் பத்திரிகைகளிலும் வருவதை பார்க்கலாம். நம் பிள்ளைகளுக்கு அவர்களின் ஆர்வம் மற்றும் நாட்டு நலன் போன்றவற்றை வளர்க்கும் நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்கள், அசிரியர்கள் உதவவேண்டும்.

Friday, January 7, 2011

SACHIN SUBBARAYAN!!!






எப்படி இருந்த நாங்கள் எப்படி ஆகிவிட்டோம்!!!






          மேற்சொன்ன விவேக்கின் வசனம் இரு அணிகளுக்குமே பொருந்தும், எனவே மேற்கொண்டு விமர்சனம் செய்யவிரும்பவில்லை.

Thursday, January 6, 2011

குன்றின் மீதிட்ட விளக்கு (சரணம் ஐயப்பா)

          என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு ஆங்கில WEBSITE முகவரியை கொடுத்து அதை படிக்க சொல்லியிருந்தார் அதில் இருந்த சுவாரசியமான தகவலை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தை பொங்கலன்று சபரிமலையில் பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் மகரவிளக்கு எவ்வாறு சபரிமலை நம்பூதிரிகளால் போலியாக ஏற்றப்படுகிறது என்பதனை அந்த WEBSITEல் விளக்கமாக புகைப்படம் மற்றும் VIDEO போன்ற ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். இனி அதைப்பற்றி




           சபரிமலையிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பொன்னம்பலமேடு. (மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்)இந்த இடத்தில் தான் மகரவிளக்கு ஏற்றப்படுகிறது இங்கே நிரந்தரமாக ஒரு CONCRETE பலகை உள்ளது. (கீழே உள்ள படத்தை பார்க்கவும்) இதன் மீது தேவஸ்தான நம்பூதிரிகளால் ஏற்றப்படுவதே மகரவிளக்கு.








          நான் படித்த அந்த வலைதளத்தில் இன்னும் விரிவாகவே உள்ளது. நான் அந்த வலைதள முகவரியையும் கொடுத்துள்ளேன். http://sinosh.wordpress.com/2008/08/26/makarajyothy/
இனி கடவுளின் பெயரால் ஏமாற்றப்படுவதையும், ஒருவருடத்தில் சபரிமலை செல்பவர்களில் குறைந்தபட்சம் 10 பேராவது விபத்தில் பலியாவதையும் தவிர்க்கவும். சுவாமியே சரணம் ஐயப்பா!!!