Sunday, February 28, 2010

சாதனை நாயகன் சச்சின்


          சச்சினின் சாதனைகளை கம்ப்யூட்டரில் அடக்குவது கடினம். அவரது ஒருதின சாதனைகளில் முக்கிய சாதனைகளை இங்கே காண்போம். ஒருதின போட்டிகளில் அதிக ரன்கள் (17558), அதிக சதங்கள் (46), அதிக அரைசதங்கள் (93), ஒருபோட்டியில் அதிக ரன்கள் (200*), அதிக ஆட்டநாயகன் விருது (61), அதிக தொடர் நாயகன் விருது (15), உலககோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் (1796), உலக கோப்பை போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருது பெற்றவர், ஒரு உலக கோப்பை போட்டியில் அதிக ரன்கள் (523), ஒரு ஆண்டில் அதிக சதங்களை 1998ம் ஆண்டு (9 சதங்கள்), ஒருநாள் போட்டியில் அதிக முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்தவர் (5), ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர், ஒரு தினப்போட்டியில் ஒரு வருடத்தில் 1000 ரன்களை அதிக முறை எடுத்தவர் (7), அதிக 4S அடித்துள்ளவர் (1927), தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டியில் விளையாடியவர் (185 போட்டிகள் 1990 முதல் 1998 வரை) நான் இங்கே கொடுத்துள்ளது சச்சினின் ஒருதின சாதனைகளில் சில இன்னும் டெஸ்ட் போட்டிகளில் சாதனைகளான அதிக டெஸ்ட் ரன்கள் (13447), அதிக டெஸ்ட் சதங்கள் (47) இன்னும் பல சாதனைகளின் சொந்தக்காரராக உள்ளார் LITTLE MASTER சச்சின். அவர் மேலும் பல சாதனைகளை செய்ய வேண்டும் அதற்கு அவரில் உடல் நிலையும் ஒத்துழைக்கவேண்டும் என்று இறைவனை வணங்குவோமாக.
 

Saturday, February 27, 2010

        
          24/02/2010 உலக ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த நாள். ஒருநாள் கிரிக்கெட் ஒரு INNINGSல் 200 ரன்களை அடித்த முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையை LITTLE MASTER சச்சின் டெண்டுல்கர் செய்தார். 1971 வருடம் முதல் ஒருதின கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன, பற்பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், பல ஜாம்பவான்களால் நிகழ்த்த முடியாத சாதனையாகவே இந்த சாதனை இருந்துவந்துள்ளது. இந்த சாதனை செய்ய கிரிகெட்டின் மீது சச்சினுக்கு இருக்கும் அதீத ஆர்வம் (PASSION) முக்கிய காரணம். சிலர் அவரின் வயதை சுட்டிக்காட்டி பலவாறு விமர்சனம் செய்து வந்தனர். அதற்கும் இந்த இரட்டைசதம் மூலம் அவர்களின் வாயை மிகப்பெரிய பூட்டு கொண்டு பூட்டிவிட்டார் சச்சின். சச்சின் இதுவரை தன் மீது எழும் விமர்சனத்திற்கு தனது BAT மூலம் மட்டுமே பதில் அளித்துவந்துள்ளார். அவர் நல்ல உடல்நிலையுடன் இருந்து மேலும் பல சாதனைகள் செய்யவேண்டும் என்று கடவுளை வேண்டுவோம்.
Tamilish

Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா

   
          நிஜக் காதலுக்கும், சினிமாக் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை அற்புதமாக காண்பித்து தான் ஒரு சிறந்த DIRECTOR என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் GOUTHAM VASUDEV MENON. காதலர்கள் சிம்பு, திரிஷா காதலில் நடக்கும் போராட்டங்களை அற்புதமாக காட்டியுள்ளார். கார்த்திக்காக சிம்புவும், ஜெர்சியாக திர்ஷாவும் காதலிக்கின்றனர், வழக்கம் போல் ஜெர்சியின் தந்தை வேற்று மதத்தை சேர்ந்த சிம்புவை ஒற்றுக்கொள்ள மறுக்கிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பது கதை. A.R.RAHMAN இசை வழக்கம் போல் மிகவும் நன்றாக உள்ளது. சிம்பு தனது விரல்களை மற்றும் அதிரடி பேச்சு போன்றவற்றை தவிர்த்து நன்றாக நடித்துள்ளார். திரிஷாவும் நன்றாக நடித்துள்ளார். ஆங்கிலத்தில் பேசும் அசிங்கமான வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். விண்ணைத் தாண்டி வருவாயா யதார்த்தமான, உண்மையில் நடக்கின்ற கதை. சிலர் நன்றாக இல்லை என்று கூறினாலும், பலர் நன்றாக இருக்கிறது என்று சொல்வர்.

Sunday, February 14, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை

          எல்லாவற்றிலும் BEST என்று எதிர்பார்க்கும் நாயகனாக விஷால், வருங்கால மனைவியும் BESTஆக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு 3 பெண்களை தேர்ந்தெடுத்து காதலிப்பது போல் நடித்து அதில் BEST பெண்ணை தேர்ந்தெடுக்கிறார். நான் சொல்லிய இந்த கதையிலிருந்தே இந்தப் படம் எவ்வளவு மொக்கை என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். சந்தானம் COMEDY மட்டும் இல்லையென்றால் நான் இடைவெளியிலேயே எழுந்து வந்துவிட்டிருப்பேன். இந்தப்படத்தை பார்ப்பதை விட 100 ரூபாயை யாருக்காவது தானம் கொடுப்பது நல்லது.

Saturday, February 13, 2010

அசல்

         தமிழ் திரைப்பட உலகை மிகவும் பின் நோக்கி அழைத்து செல்வதில் VIJAY, AJIT முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அதை மீண்டும் தன் அசல் மூலம் அழுத்தம் திருத்தமாக நிருபித்துள்ளார் AJIT.

 யார் முட்டாள்?

       சமிபத்தில் என் நண்பர்களுடன் அஜீத் நடித்து வெளிவந்துள்ள அசல் திரைப்படத்திற்கு சென்றிருந்தேன். முதல் நாள் ஆதலால் கூட்டம் அலை மோதும் என்று நினைத்த எங்களுக்கு பெரும் அதிர்ச்சி காரணம் திரையரங்கில் கூட்டமே இல்லை. முதல் காரணம் ஒரு டிக்கெட் 100 என்று விற்கப்பட்டது, இரண்டாவது காரணம் நாங்கள் படத்தை பார்த்ததும் தான் தெரிந்தது, இதைபோல ஒரு மட்டமான திரைப்படத்தை இதுவரை பார்த்ததும் இல்லை இனிமேலும் பார்க்கப்போவதும் இல்லை. இதில் யாரை குறை சொல்வது? மட்டமான கதை மற்றும் திரைக்கதை அமைபிற்காக இயக்குநரையா? இந்த மட்டமான படத்தை தயாரித்த பிரபுவையா? அல்லது இந்தப்படத்தில் மிக மிக மட்டமாகவும், நடிபபுதிறமையே இல்லாமலும் ஆனால் வாய் கொழுப்பு அதிகமாகவும் உள்ள அஜீத் குமாரையா? அல்லது இந்த மட்டமான படத்தை 100 ரூபாய் கொடுத்து பார்த்த நாமா? யார் முட்டாள் ? தயவு செய்து சொல்லுங்கள்

MY NAME IS KHAN

         AMITHAPBHACHAN, KAMAL HASSAN, AMEERKHAN, SHARUHKHAN போன்றோர் இந்திய திரைப்படங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கின்றனர் என்பது என் ஆழமான கருத்து. அது மீண்டும் MY NAME IS KHAN படம் மூலம் நிரூபித்துள்ளார் SHARUHKHAN.


          9/11 பிறகு AMERICAவில் முஸ்லீம்கள் படும் இடர்பாடுகளை மிகவும் தெளிவாகவும் விறுவிறுப்பாகவும் காண்பித்துள்ளார். அவரது நடிப்பில் ஒரு மைல்கல்லாகவும் உள்ளது இந்தப்படம். KAJOLலும் தனது நடிப்பில் அசத்தியுள்ளார். அனைவரும் நிச்சயம் காண வேண்டிய படம் MY NAME IS KHAN