Saturday, May 29, 2010

அசிங்கம்

          நடிகர் சூர்யா நடித்து வெளிவந்துள்ள படம் சிங்கம். நேர்மையான காவல்துறை அதிகாரியாக சூர்யா (துரைசிங்கம்), அநியாயம் மட்டுமே செய்யும் வில்லனாக பிரகாஷ்ராஜ். சூர்யாவின் காதலியாக அனுஷ்கா, தேவையே இல்லாத சிரிப்பு நடிகராக விவேக் ஆகியோர் அடங்கிய கூட்டணி சேர்ந்து இந்த படத்தை நாசம் செய்துள்ளனர். படம் முழுக்க தேவை இல்லாத அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் சிரிப்பு காட்சிகள் என படம் நகர்கிறது. அனுஷ்கா பார்ப்பதற்கு நன்றாக உள்ளார். நல்ல படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த சூர்யாவிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை கடந்த இரண்டு படங்களாக போறாத நேரம் என்று எண்ண தோன்றுகிறது. SUNPICTURES தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்துக்கொண்டுள்ள போதிலும் தொடர்ந்து படங்களை எப்படி வாங்கி வெளியிடுகின்றனர் என்பது MILLION DOLLER கேள்வியாக உள்ளது. சிங்கம் சூர்யாவிற்கு மட்டுமல்ல விவேக் SUNPICTURES போன்றோருக்கு மிகப்பெரிய அசிங்கம்.

Wednesday, May 12, 2010

விஸ்வநாதன் ஆனந்த

          நேற்று பல்கேரியாவில் நடந்த உலக செஸ் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் நமது நாட்டை சேர்ந்த  விஸ்வநாதன் ஆனந்த பல்கேரியாவை சேர்ந்த தபலோவை வென்று மீண்டும் உலக சாம்பியன் பட்டதை வென்றார். இதே நமது கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் வென்றால் (ஆனால் ஜெயிக்காது) நாடே அதிரும் ஆனால் ஏனோ விஸ்வநாதன் ஆனந்த ஜெயித்ததை பத்திரிகைகள் ஒரு வரி கூட எழுத மறுக்கின்றன . அரசியல் தலைவர்கள் யாரும் கூட வாயை திறக்கவில்லை போகட்டும், நாம் பாராட்டுவோம் இந்த உண்மை இந்தியனை.

Saturday, May 8, 2010

நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையா இல்லையா?

          நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா? தெரிந்து கொள்ள கீழ்கண்ட கேள்விகளுக்கு உண்மையான பதில் அளியுங்கள்:

1) உங்களது குடிப்பழக்கத்தால் உங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிஇழந்து விட்டதா?
2) குடிப்பதால் உங்கள் பணி நேரம் குறைந்துவிட்டதா?
3) உங்களது குடிப்பழக்கம் உங்கள் பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தயுள்ளதா?
4) குடிப்பழக்கத்தால் பணகஷ்டங்கள் ஏற்பட்டுள்ளனவா?
5) மோசமான சுற்றுச் சூழலில் உங்களை விட தகுதி குறைந்த நபர்களோடு சேர்ந்து குடிக்குமளவிற்கு மாறி மாறிவிட்டீர்களா?
6) நீங்கள் குடிப்பதால் குடும்ப நலனை கவனிக்க, பராமரிக்கமுடியவில்லையா? 
7)  கவலைகள், பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்காக குடிக்கிறீர்களா?
8) தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடிக்கவேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுகிறதா?
9) குடிப்பழக்கம் காரணமாக, தூங்குவதில் சிரமம் உள்ளதா?
10) குடிப்பழக்கத்தால் உங்கள் திறமைகளும், இலட்சியங்களும், ஆர்வங்களும் குறைந்து வருகிறதா?



           மேற்கண்ட 10 கேள்விகளில் ஒரேவொரு கேள்விக்கு மட்டும் ஆம் என்று நீங்கள் பதிலளித்தால், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் அல்லது மிக விரைவில் அடிமையாகி விடுவீர்கள். இரண்டும் கேள்விகளுக்கு ஆம் என்ற பதிலளித்தால் நீங்கள் குடிப்பழக்க அடிமை.

          மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ஆம் என்று பதிலளித்தால் எவ்வித சந்தேகமும் இன்றி நிச்சயமாக நீங்கள் குடிப்பழக்க அடிமை தான். இந்தப் பத்து கேள்விகளில் எந்த கேள்வியும் உங்களுக்கு பொருந்தவில்லை எனில் நீங்கள் குடிப்பழக்க அடிமையில்லை, ஆனால் அடிமையாகிவிடாமல் உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். நன்றி வாரமலர்.