Saturday, July 31, 2010

பாரத்ரத்னா சச்சின்

          சச்சினுக்கு பாரத்ரத்னா விருது கொடுக்கவேண்டும், அதற்கு அவர் மிகத்தகுதியானவர் தான் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சொல்லியுள்ளார் ஆஷா போன்ஸ்லே.

நான் பார்த்ததில் எனக்கு பிடித்தது

          நான் பார்த்ததில் எனக்கு பிடித்த படத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

Thursday, July 29, 2010

நன்றி நன்றி நன்றி!!!

          பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் கொண்டுவருவது பற்றி யோசித்துக்கொண்டுள்ளேன், விரைவில் நல்லசெய்தி வரும் என்று தெரிவித்துள்ள முதல்வருக்கு என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் நல்ல முடிவு எடுக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, July 28, 2010

சச்சின் 48!!!

          சச்சின் தனது 48வது டெஸ்ட் சதத்தை ஸ்ரீலங்காவிற்கு எதிராக பூர்த்திசெய்தார். அணியையும் தோல்வியிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.
 

Monday, July 12, 2010

CHAMPION SPAIN


          நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின் அணி நெதர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையேயான ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இரண்டு பாதியிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை, அளிக்கப்பட்ட முதல் எக்ஸ்ட்ரா நேரத்தில் கோல் எதுவும் விழவில்லை. இரண்டாவது எக்ஸ்ட்ரா நேரத்தில் ANDRU INIESTA அற்புதமான கோலால் ஸ்பெயின் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். ஜெர்மனி அணியை சேர்ந்த தாமஸ் முல்லர் தங்கக் காலணி பரிசை பெற்றார்.  

Saturday, July 10, 2010

ஸ்பெயின் VS நெதர்லாந்து இரவு 12 மணிக்கு ESPN தொலைக்காட்சியில்

          உலகமே மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 12 மணிக்கு ESPN தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பை காணலாம். முன்னதாக நேற்றிரவு நடந்த 3ம் இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி உருகுவே அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

Friday, July 9, 2010

SPAIN VS NETHERLANDS

         
          உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அரையிறுதியில் நெதர்லாந்து அணி உருகுவே அணியையும், ஸ்பெயின் ஜெர்மனியையும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. வரும் ஞாயற்றுக்கிழமையன்று இரவு 12 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறுகிறது. 

Saturday, July 3, 2010

உலகக்கோப்பை கால்பந்து-2010

          கடந்த சில வாரங்களாகவே உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. தற்பொழுது அது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட அணிகளான பிரேசில், அர்ஜென்டினா போன்ற அணிகள் வெளியேற்றப்பட்டுவிட்டன. முதல் காலிறுதியில் (02/07/2010) பிரேசிலும் நெதர்லாந்து அணிகள் மோதின விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வென்று அதிர்ச்சி அளித்தது நெதர்லாந்து. பிரேசிலின் முரட்டு ஆட்டம் நெதர்லாந்து அணியிடம் எடுபடவில்லை. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் உருகுவே அணி கானா அணிகள் மோதின இதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும்  தலா ஒரு கோல் போட்டன, எனவே வெற்றியை நிர்ணயிக்க டைபிரேகர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் உருகுவே 4-2 என்ற கோல் கணக்கில் வென்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. மூன்றாவது காலிறுதியில் அர்ஜென்டினா மற்றும் ஜெர்மனி ஆகிய பலம் பொறுந்திய அணிகள் மோதின மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. கடைசி காலிறுதியில் பராகுவே மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின கோப்பையை வெல்லும் என்று பெரும்பான்மையினரால் கணிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் அணி எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் பராகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஸ்பெயின் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டேவிட் வில்லா வெற்றிக்கான கோலை அற்புதமாக அடித்தார்.


          06/07/2010 அன்று நடைபெறும் முதல் அரைஇறுதியில் நெதர்லாந்து அணி உருகுவே அணியையும், 07/07/2010 அன்று இரண்டாவது அரையிறுதியில் ஜெர்மனி அணி பலம்பொருந்திய ஸ்பெயின் அணியை சந்திக்கிறது.