Tuesday, February 14, 2012

ஈனப்பிறவி ஜெயலலிதா

           அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மின்வெட்டு நேரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு, தற்போதைய நிலவரப்படி 8 மணிநேரத்தை தொட்டுள்ளது. மின்வெட்டின் கோர விளைவுகள் ஒருபுறம் என்றால், மின்வெட்டு நேரத்தை அதிகரிப்பதற்கான நிர்ப்பந்தம் என்ன? என்பதை கூட விளக்க மறுக்கும் மாநில ஆட்சியாளர்களின் அலட் சியமும், அகம்பாவமும் சகிக்கக்கூடியதாக இல்லை.

இந்த லட்சணத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து மாநிலம் முழுவதும் மக்களிடம் ஆலோசனை கேட்கும் அலங்கோல மும் நடந்துவருகிறது.

மின்வெட்டை எதிர்த்து வீதிக்கு வந்து போராடும் தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிமுக அரசு இந்த மக்கள் எழுச்சியை ஒடுக்கிவிட முயல்கிறது.

சட்டமன்றத்தில் கைநீட்டி பேசியதற்காக எதிர்க்கட்சி தலைவர் மீது உரிமைமீறல் பிரச்சனை கொண்டுவரப்பட்டு, உடனடியாக தீர்ப்பு எழுதப்பட்டு 10 நாள் சஸ்பெண்ட் செய் யப்பட்டார்.

மின்வெட்டினால் பாசன வசதியை இழந்த விவசாயிகளும், தொழிலை இழந்த தொழி லதிபர்களும், வேலையிழந்த தொழிலா ளர்களும், தறி இயக்கம் இழந்த நெசவாளர்களும், வெப் பத்தில் புழுங்கித் தவிக்கும் பொதுமக்களும், கொசுவின் கோரத்தாக்குதலுக்கு ஆளாகும் குழந்தைகளும், மூச்சுத் திணறும் முதியோர் களும் யார் மீது உரிமைமீறல் கொண்டுவருவது என்று தெரியவில்லை.

எல்லா இடத்திலும் பரம்பொருள் நிறைந் திருப்பதாக ஆத்திகர்கள் நம்புகின்றனர். ஆனால் பெட்டிக்கடையில் இருக்கும் ஜெராக்ஸ் முதல் துவங்கி, மிகப்பெரும் ஆலைகளின் எந்திரங்கள் வரை மின்சாரம் இன்றி இங்கு எதுவும் இயங் காது என்பது கண்முன்னால் தெரிகிற நிதர்சனம். கண்கட்டும் மின்வெட்டால் தமிழகத்தில் அன்றாட இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்கிறது.

உடனடியாக மின்சாரம் தரும் மந்திரக்கோல் எதுவும் அரசிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மின்வெட்டை தவிர்க்க அரசு செய்யும் தற்காலிக ஏற்பாடுகள் என்ன? நீண்டகால தொலைநோக்குத் திட்டங்கள் என்ன? என வாக்களித்த மக்களுக்கு விளக்கவேண்டியது ஒரு ஜனநாயகப்பூர்வ அரசின் கடமையாகும்.

Wednesday, October 26, 2011

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

          நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள.

Thursday, September 15, 2011

சபாஷ் முதல்வர்கள் மோடி மற்றும் நிதிஷ்

          வாஷிங்டன்: நாட்டின் பொருளாதாரத்திற்காக பல்வேறு துறைகளில் உள்கட்ட‌மைப்புப்பணிகளுக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்பதில் சிறந்த நிர்வாகத்திறமை உள்ளவர் என இந்தியாவின் குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடிக்கு அ‌மெரிக்க பாராளுமன்ற ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதியன்று அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸில் , சி.ஆர்.எஸ் என்ற காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆய்வுக்குழு 94 பக்க அறிக்கையினை தாக்கல் செய்துள்ளது. இதில் இந்தியாவின் குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியின் நிர்வாகத்திறமையினையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும்,தொழில்துறையின் வளர்ச்சிக்கும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிறந்த அரசு நிர்வாகம் நடத்துகிறார் நரேந்திரமோடி என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவரைத்தொடர்ந்து பீகார் முதல்வர் நிதீஷகுமாரின் நிர்வாகத்திறமையினையும் அக்குழு பாராட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

                                                                                       நன்றி தினமலர்

Wednesday, September 14, 2011

அமெரிக்காவில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

           நியூயார்க்: அமெரி்க்காவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீ்ழ் வசித்து வருவதாக அந்நாட்டு மக்கள் தொகை ஆய்வு மையம் வெளியிட்டு்ள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2009-ம் ஆண்டு 43.6மில்லியன் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வசித்து வந்தனர். கடந்த ஆண்டு (2010-ம் ஆண்டு) 46.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது 14.3 சதவீதத்திலிருந்து 15.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம் வாங்கும் சக்தி அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அமெரிக்காவில் ஆண்டு வருமானம் 11,139 டாலர் ரூ. 5லட்சம் உள்ளவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் எனவும், ஆண்டு வருமானம் 22,314 டாலர்( ரூ. 10 லட்சம்) மேல் என அமெரிக்கர்களின் ஆண்டு வருமானம் உள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் செல்லும் நிலைமை 6.4 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சுகாதாரம், ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் இன்றி கடந்த ஆண்டு (2009) 49. மில்லியன் மக்களும், 2010-ம் ஆண்டு 49.09 மில்லியன் மக்களும் உள்ளனர். இது 16.03 சதவீதம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

                                                                    நன்றி தினமலர் 

Thursday, August 18, 2011

எண்ணும் எழுத்தும் "கண்'ணெனத் தகும்!

          சென்னை: பல்லாவரம் அரசு பள்ளியில் கண் பார்வையற்ற ஆசிரியர் ஒருவர், தாம் எடுக்கும் பாடத்தில், மாணவர்களை நூறு சதவீத தேர்ச்சி அடைய வைத்து சாதனை செய்து வருகிறார். பல்லாவரம் மறைமலையடிகளார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த பத்தாண்டுகளாக சமூக அறிவியல் ஆசிரியராகப் பணி யாற்றி வருபவர் கோவில் பிள்ளை, 52. கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவரிடம் பயிலும் 9,10 ஆம் வகுப்பு மாணவர்கள், இதுவரை தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சி அடைந்து வருகின்றனர். இவரிடம் அன்பாகவும் நடந்து கொள்கின்றனர். குறைபாடற்ற ஆசிரியர்களை யே கிண்டலடித்து, கீழ்படியாமல் போகும் மாணவர்கள் மத்தியில் இது எப்படி சாத்தியமானது? திருநெல்வேலி யாக்கோபுரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கோவில்பிள்ளை. பார்வையற்ற பிள்ளை என்பதால், அனைவரிடமும் செல்லம் அதிகம். எட்டாம் வகுப்பு வரை மற்ற பிள்ளைகளைப் போலவே பள்ளி சென்று, அங்கு "வாய்மொழி' கல்வி மட்டும் கற்றிருக்கிறார். "படித்து என்ன செய்யப் போகிறோம், வீட்டில் தான் நம்மை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்களே' என்கிற எண்ணம் வர படிப்புக்கு, "குட்பை' சொல்லிவிட்டு, பாய் முடையவும், பிளாஸ்டிக் ஒயர்களில் நாற்காலிகள் பின்னவும் கற்றுக்கொண்டிருக்கிறார். சில வருடங்கள் கழித்து படிப்பு தான் முக்கி
யம் எனப்பட, மார்த்தாண்டம் அருகில் ஐரேனிபுரத்திலுள்ள பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில், ஏழாம் வகுப்பு சேர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட பள்ளிப் படிப்பு முடிக்கவேண்டிய வயதில், கோவில்பிள்ளையின் கல்வி பயணம் மறுபடியும் தொடர்ந்தது. அதற்கடுத்து கல்வியின் ருசி பிடித்துப்போய் விட, ஒன்பதாம் வகுப்பை பூந்தமல்லியிலும், கல்லூரிப்படிப்பை மாநிலக் கல்லூரியிலும் முடித்திருக்கிறார். இவரது தற்போதைய கல்வித்
தகுதி எம்.ஏ.,எம்.எட்., ராமேசுவரத்தில் தன் ஆசிரியப் பணியை துவக்கிய கோவில்பிள்ளை, அதன் பின் கல்பாக்கம் கூவத்தூரிலும் தற்போது பல்லாவரத்திலுமாக 17 வருடங்களாகப் பணியாற்றிவருகிறார். மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு முன், தன் கதையை முதல் பாடமாக எடுத்து வைக்கிறார். "ஏழைக்குடும்பத்தில், பார்வையில்லாமல் பிறந்து, முறையற்ற வயதில் கல்வி கற்ற நானே ஆசிரியராக, உயர முடியுமென்றால், எந்த அங்கஹீனமும் இல்லாமல், தன் பிள்ளையை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணும் பெற்றோருக்கு குழந்தையாய்ப் பிறந்து, சரியான வயதில் கல்வி கற்கும் உங்களால் எவ்வளவு சாதிக்க முடியும்?' எனக் கேட்டவுடன், ஒவ்வொருமாணவ இதயமும் முறுக்கேறிக் கொள்கிறது. இத்தோடு, ஆதரவற்ற குழந்தைகளுக்கான அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார் கோயில் பிள்ளை. இதற்கான தேவைகளை நன்கொடைகள் மூலமாக சமாளிக்கின்றனர். இதில் மாற்றுத் திறனாளிகளும், பெற்றோரை இழந்த குழந்தைகளுமாக 15 பேர் உள்ளனர். இதை நிர்வகித்து வருபவர் கோவில்பிள்ளையின் மனைவி
நவமணி. இவர் எம்.ஏ.,பி.எட்., பட்டதாரியும் கூட. கோயில்பிள்ளையின் மாணவியாயிருந்து, பின் அவர்பால் ஈர்க்க ப்பட்டு, குடும்பத்தை எதிர்த்து அவரது மனைவியானவர். இத்தம்பதிக்கு பிளஸிங், 10, பிளஸி ஜெபராணி, 7, என இரண்டு குழந்தைகள் உள்ளனர். "எல்லா மாணவர்களுக்கும் அரசு புத்தகம் கொடுக்கும் போது, கண் பார்வையற்ற மாணவர்களுக்கும் "பிரெய்லி' புத்தகங்களை வழங்கினால், அவர்களாகவே, படித்துக் கொள்வார்கள்தானே?' என்று எதார்த்தமாக கேட்ட கோயில்பிள்ளையின் வார்த்தைகளில் ஆதங்கம் எதிரொலித்தது.



எப்படி பாடம் நடத்துகிறார்? : கோயில் பிள்ளையின் மனைவி நவமணி அவருக்கு மனைவியாக மட்டும் சேவை செய்யவில்லை. ஒரு தாயாகவும், வழிகாட்டியாகவும், பாடங்களை படித்துக்காட்டும் ஆசிரியராகவும் விளங்குகின்றார். நவமணி ஒருமுறை பாடங்களைப் படித்துக் காட்ட அவற்றை மனனம் செய்து விட்டு, பின் மாணவர்களுக்கு நடத்துகிறார். தின, "டெஸ்டுகளை' நன்றாகப் படிக்கும் மாணவியர் திருத்திவிட, மற்ற தேர்வுத்தாள்களை திருத்துவது நவமணியே. சமச்சீர்க் கல்வி புத்தகத்தை படித்துக் காட்டிய போது, "நல்லா இருக்கில்ல... ஆனா, "கொஸ்டின் ஸ்டைல்' தான் மாறல' என்று அலுத்துக் கொண்டார் என்கிறார் நவமணி. 
                                                                                                  நன்றி தினமலர் 

Friday, July 1, 2011

என் அருமை 25 பைசாவே!!!

          இன்று முதல் 25 பைசாக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பார்த்தவுடன் ஏனோ என் இளமை கால நினைவுகள் என் கண்முன்னே நிழலாடியது. 1985 வாக்கில் 25 பைசாவை கடைக்கு கொண்டுசென்றால் வத்தல், முறுக்கு, காரம், மாங்காய் போன்ற தின்பண்டங்களை கை நிறைய வாங்கி சாப்பிடலாம். நான் என் தம்பி மற்றும் என் தங்கை இவற்றை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தோம். என் தந்தை, பாட்டி, வாத்தியார் தாத்தா இவர்கள் எங்களுக்கு 25 பைசாவே கைசெலவிற்கு கொடுப்பார்கள் 
           மேலும் ஒரு இட்லி, ஒரு முட்டை, 5 வடைகள் 25 பைசாவிற்கே கிடைக்கும். தற்பொழுது என் தங்கை மகன், என் தங்கையிடம் அம்மா நான் பள்ளிக்கு செல்லவேண்டும் எனக்கு 10 ரூபாய் கைசெலவிற்கு கொடுக்கவும் என்று கேட்கிறான். இவற்றை எல்லாம் ஒப்பிட்டு பார்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.


Thursday, June 23, 2011

மீண்டும் உயருது பெட்ரோல், டீசல் வாழ்க காங்கிரஸ் அரசாங்கம்!!!

          இப்பொழுது எந்த நாளேடை திருப்பினாலும் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருகிறது என்று எழுதுகிறார்கள். படிக்கும்பொழுதே தலை சுற்றுகிறது. நானும் இனி மோட்டார் சைக்கிள் தவிர்த்து சிறு வேலைகளுக்கு சைக்கிள் ஓட்டிப்பழக வேண்டும் என்று என் மனதில் கூறிக்கொண்டே இருந்தேன், நேற்று சைக்கிளை எடுத்துக்கொண்டு மார்கெட் வரையில் சென்று காய்கறிகள் வாங்கி வந்தேன். என் சட்டை முழுவதும் வேர்வையில் நனைத்து, நான் என்னவோ கொத்தனார் வேலையில் இருந்து வந்தது போல் காட்சியளித்தேன். என் கால்கள் இயங்க மறுத்தன, பிறகு மெத்தையில் விழுந்து ACயின் நனைந்ததும் தான் பழைய நிலைக்கு வந்தேன். இப்பொழுது தான் தெரிகிறது சைக்கிள் ஒட்டுவது எவ்வளவு கஷ்டம் மேலும் ஏன் இந்த மோட்டார் சைக்கிள்கள் இவ்வளவு அதிகமாக விற்பனை ஆகின்றன என்றும் தெரிந்தது.

          தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டிய மக்கள். மக்களின் நலனில் அக்கறையே இல்லாத மத்திய காங்கிரஸ் அரசிற்கும் முடிவு கட்டுவார்களா என்று எதிர்ப்பார்க்கிறேன். அதற்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் உள்ளது. அதுவரை விதியை நொந்தப்படி நான்.