Friday, April 22, 2011

மின் வெட்டு!!!

           கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மின் வாரியம் விடுத்த அறிக்கையில் தவிர்க்க முடியாத காரணத்தால் தமிழகம் முழுவதும் மூன்று மணிநேரமும் சென்னையில் ஒருமணிநேரமும் மின்தடையை அறிவித்துள்ளது.
           தற்பொழுது தமிழகம் மட்டும்மல்ல இந்தியா முழுவதும் (குஜராத் மாநிலம் மட்டும் இதற்கு விதிவிலக்கு) மின் தடை அதிகமாக உள்ளது. அதற்கு மூன்று காரணங்கள் உள்ளதாக தெரிகிறது ஒன்று உற்பத்தி குறைவு இரண்டு இந்தியா முழுவதும் இலவசங்களாக கொடுக்கப்படும் விவசாயிகளின் மின்சாரத்தை மாநில அரசுகள் தவறாக பயன்படுத்துதல் மூன்று மின்சாரம் கொடுக்கும் நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் உரிய பணத்தை கொடுப்பதில்லை.


          மேற்சொன்ன அனைத்து காரணங்களும் நமது மாநிலத்திலும் உண்டு என்றாலும் கடந்த ஐந்து ஆண்டு காலமாக பதவியிலிருந்த திமுக அரசு மின் உற்பத்திக்கு எந்த புதிய திட்டங்களை செய்யவில்லை, மேலும் வசூலாகும் வரிகள் அனைத்தையும் இலவசங்களுக்கு செலவழிக்கவே சரியாக இருக்கிறது. 
            கருணாநிதி கடந்த ஐந்து ஆண்டுகளாக பாராட்டு விழாக்களில் செலவழித்த நேரங்களை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் போன்றவற்றில் செலவழித்திருந்தால் தமிழகம் மின் உபரி மாநிலமாக நிச்சயம் மாறிஇருக்கும். மாறாக தற்பொழுது இரண்டு மணிநேரம் மின்தடை மூன்று மணிநேரமானது தான் மிச்சம். என் ஒரே ஆறுதல் அடுத்த ஐந்து ஆண்டுகாலம் தமிழக மக்கள் கருணாநிதியை அவரது வீட்டிலேயே ஓய்வெடுக்க விட்டுவிடுவர் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment