Monday, April 4, 2011

இந்த தேர்தலில் எந்த கூட்டணி வெற்றிபெறும்!!

          இந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறும் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்? ஆனால் என்னால் சரியாக கணிக்கமுடியவில்லை காரணம், திமுக மற்றும் அதிமுக இந்த இரு கூட்டணிகளுமே சமபலம் கொண்டதாகவே தெரிகின்றன. மேலும் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் எதிர்ப்பு அலையோ அல்லது எந்த கட்சிக்கும் ஆதரவு அலையோ பெரியதாக இருப்பதாக இதுவரை தெரியவில்லை. 

          2G SPECTRUM மற்றும் திமுகவின் மற்ற ஊழல்களை எடுத்துக்கொண்டாலும், மக்கள் ஊழலை ஒரு அளவுகோலாக இதுவரை பார்த்து ஓட்டளிக்கவில்லை என்பது கடந்த காலங்களை உற்றுப்பார்த்தால் நன்கு தெரியும். பிறகு இலவசங்களை ஒரு அளவுகோலாக எடுத்துக்கொண்டாலும் இரு கட்சிகளுமே சம அளவுகளிலேயே இலவசங்களை அறிவித்துள்ளன. முதல்வர் வேட்பாளர் என்ற முறையில் பார்த்தாலும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவருக்கும் சம அளவிலேயே ஆதரவு உள்ளதாக தெரிகிறது. குடும்ப அரசியல் என்பதை பார்த்தால் திமுகவின் பலம் சற்று குறைகிறது. எனினும் இது எந்த அளவிற்கு இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்று தெரியவில்லை?

          விலைவாசி உயர்வு மக்களிடையே நன்கு பிரதிபலித்தாலும், அரசாங்க ஊழியர்களின் ஓட்டு அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் திமுக அணிக்கே செல்லும் என்பதில் எந்த மாற்றம் இல்லை. இதுபோல் ஒவ்வொரு கூட்டணிக்கும் ஒவ்வொரு பலம் மற்றும் பலவீனம் உள்ளன. மொத்தத்தில் இன்னும் மக்கள் எவருக்கு ஓட்டளிக்கவேண்டும் என்பதை முடிவுசெய்யவில்லை என்றே தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் இந்தத் தேர்தலில் போட்டி மிகவும் கடுமையாகவே இருக்கும் என்று தெரிகிறது.

          இந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டளிக்கவே நான் விரும்புகிறேன்.  என்னிடம் கேட்பவர்களுக்கும் அதிமுகவிற்கே ஓட்டளிக்க சொல்கிறேன், பொறுத்திருந்து என்ன நடக்கிறது என்று பார்போம்.

1 comment: