Saturday, April 16, 2011

வனங்களை அழிப்போம் நாடு வளம்பெறும்!!!

          கடந்த வாரம் என் நண்பர் ஒருவர் எனக்கு போன் செய்து ஏப்ரல் 10 ஞாயிற்றுக்கிழமை HINDU நியூஸ்பேப்பரில் 22ம் பக்கத்திலுள்ள செய்தியை படிக்கச்சொன்னார். அதைப்பற்றி,

          மகாராஷ்டிரா மாநிலம் KHED மற்றும் MAVALதாலுக்காவை சுற்றியுள்ள மேற்கு மலைத்தொடரில் அமைந்துள்ள 194.66 HECTARES பரப்பளவு கொண்ட வனப்பகுதியில், இங்கிருந்து 3.5கிமி தொலைவில் பீமாஷங்கர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இதன் அருகில் ANDHRA LAKE WIND POWER PROJECT என்ற திட்டம் வரையறுக்கப்பட்டு INDO-GERMAN ENTERPRISE ENERCON INDIA என்ற நிறுவனத்திடம் அந்த பணிகளை செய்ய அனுமதியை வழங்கியுள்ளது மகாராஷ்டிரா அரசு. மேலும் இந்த PROJECT நடைபெறும் இடம் அடர்ந்த (RESERVE) காடுகள் ஆதலால், இந்த PROJECT இடத்திற்கு செல்ல வழி அமைக்க 26615 தேர்ந்தெடுத்த மரங்களை வெட்டி சாலை அமைக்க ENERCON INDIA நிறுவனத்திற்கு கோர்ட் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் இதுவரை கிட்டத்தட்ட மூன்று லட்சம் மரங்களை வெட்டியுள்ளது ENERCON INDIA நிறுவனம். இதை அறிந்த சமூக ஆர்வலர்களான KALE மற்றும் VISHWAMBAR CHOUDHARI BOMBAY HIGH COURTல் DEC 2010ல் வழக்கு தொடர்ந்தனர். மேலும் மார்ச் 31ல் COURT உத்திரவின் பேரில் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய சென்றபொழுது அங்கு மரம் வெட்டுதலும், வெடி வைத்துத்தகர்தலும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்துள்ளது. ENERCON INDIA நிறுவனத்திற்கு வெடிவைக்க அனுமதி இல்லை என்பது புனே COLLECTOR கொடுத்த கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று KALE தெரிவித்துள்ளார். KALE மேலும் தெரிவிக்கையில் அரசு விதிப்படி தேசிய வனவிலங்கு சரணாலயங்கள் அமைந்துள்ள பகுதியை சுற்றி 10 கிலோமீட்டர் தொலைவிற்கு எந்த திட்டமும் தொடங்க மத்திய மற்றும் மாநில அரசாங்கம் NOC கொடுக்கவேண்டும், அதை எவ்வாறு ஆய்வு செய்யாமல் கொடுத்துள்ளார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


           மேற்சொன்ன காட்டில் இந்தியன் ஜெயின்ட் அணில்கள் (SHEKRUஇனம், படத்திற்கு மேலே பாருங்கள்), மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அதிக மரங்களை வெட்டுவதாலும் மற்றும் வெடி வைப்பதாலும் இந்த அணில்கள் இனம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வகை அணில்கள் அடர்ந்த மரங்களுடன் கூடிய காட்டுப்பகுதியில் மட்டுமே வசிக்கும். இது குறித்து எந்த மகாராஷ்டிரா அரசியல் கட்சியும் எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்பது ஆச்சரியத்திற்கு உரியது. கேள்வி எழுப்பிய ஒரே சிவசேனா MPயான SHIVAJI ADHALRAO PATILலும்,  ENERCON INDIA இவருக்கு எழுதிய கடிதத்தில் காடுகளை அழிக்காமல் இந்தத் திட்டத்தை சரியாக முடிப்போம் என்று கூறியதைத் தொடர்ந்து வாய்மூடிக்கொண்டுவிட்டார். மத்திய அரசும் வாங்கவேண்டியத்தை வாங்கிக் கொண்டு அனுமதி அளித்துவிட்டனர்.


          சமீபகாலமாக செய்திகள் மற்றும் நாட்டில் நடக்கும் விஷயங்கள் என் தூக்கத்தை கெடுத்துக்கொண்டுள்ளன மற்றும் என் ரத்தஅழுத்தத்தை அதிகரித்துக்கொண்டும் உள்ளன. இவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொண்டால் என் மனம் சிறிது சாந்தமடையும் என்று திடமாக நம்புகிறேன்.  

          BHISMASHANKAR WILDLIFE SANCTUARY படங்களைப் பார்க்க கீழே உள்ள LINKஐ CLICK செய்யவும்.

No comments:

Post a Comment