Friday, April 8, 2011

முட்டாள் மக்களுக்கு!!!

          நம் மக்கள் தேர்தலைப்பற்றியும் முடிந்துப்போன உலகக்கோப்பையை பற்றியும் இன்னும் வீண்பேச்சு பேசிக்கொண்டுள்ளனர். ஆனால் நமக்காக ஒருவர் ஊழலை ஒழிக்க சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கின்றார். அவர் தான் ANNA HAZARE. இவரைப் பற்றி எவரேனும் பேசுகின்றனரா? அல்லது நினைக்கின்றனரா? அவர் என்ன அவரின் கோரிக்கைகள் நிறைவேரவா உண்ணாவிரதம் இருக்கிறார்? அவருக்கு ஏதேனும் பதவிகள் வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறாரா?



          சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான், அனுபம்கேர், அமீர்கான் இன்னும் பெரிய சமூக ஆர்வலர்கள் இந்தப் பெரியவரையும் அவரது கோரிக்கைகளையும் பெரிதும் மதிக்கின்றனர் மற்றும் ஆதரிக்கின்றனர். உழலை எதிர்க்கும் மற்றும் கடுமையாக தண்டிக்கும் LOKPAL BILLஐ உடனடியாக சட்டமாக வலியுறுத்தி இந்தப் பெரியவர் செய்யும் தியாகத்திற்கு நாமும் ஆதரவு அளிப்போம். 

Tuesday, April 5, 2011

திருமாவளவன்- நீங்க நல்லவரா கெட்டவரா?

          தமிழக அரசியலில் ஆவேச பேச்சாகட்டும், கதறி அழுவதாகட்டும் அல்லது முக்கிய இலங்கை தமிழர்களுக்கு உதவுவதாக நடிப்பதாகட்டும் இவருக்கு இணை இவரே. இவரைப்பற்றி எனக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வரை நல்ல அபிப்ராயமே இருந்தது. ஆனால் நேற்று எனக்குக் கிடைத்த உண்மை தகவலைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன், அந்த தகவலை பின்புப்பார்போம்.

          தலித்இனத்தை காக்க வந்த தலைவன் நான்தான் என்று கூறிக்கொள்ளும் திருமா, இன்று வரை அவர்களுக்கு என்ன நன்மைகள் செய்துள்ளார்? இவர் இவரின் இலக்கிலிருந்து வழுக்கி கருணாநிதிக்கு துதிப்பாடுவதே தொழிலாக செய்துக்கொண்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது.

          தலித்துகளின் நீண்ட நாள் பிரச்சனைகளான இரட்டை குவளை முறை இன்னும் சில இடங்களில் நடைமுறையில் இருக்கிறது. இவர்களின் இடஒதிக்கீட்டில் உள்ள குளறுபடிகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. தலித்துகள் கல்வியில் முன்னேற்றம் அடைய செய்ய மிகப்பெரிய நடவடிக்கைகள் அல்லது சலுகைகள் எதுவும் தரப்படவில்லை. தலித்துகள் செய்யும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது குறித்து விழிப்புணர்வு பிரசாரமோ அல்லது இதை தடுக்க மிகப்பெரிய நடவடிக்கைகளோ உங்களிடம் இல்லையே? உங்கள் இனத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது இதை தீர்க்க யோகியதை உங்களுக்கில்லை, இலங்கை தமிழர்களைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லை ஆனால் தீவிரவாதிகளான விடுதலைப்புலிகளைப்பற்றி மிகவும் கவலைப்படுகிறீர்கள்.

          கடைசியாக நீங்கள் பெற்ற 10 சட்டசபை தொகுதிகளில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பார்வேந்தன் என்ற ரவுடி வக்கீல். அவரின் தொழிலே கட்டப்பஞ்சாயத்து செய்வது, அப்பாவிகளின் சொத்துக்களை அபகரிப்பதே ஆகும். இவரைப்போய் செய்யூர் வேட்பாளராக ஆக்கியுள்ளீர்களே ஏன்? உங்கள் கட்சியில் மிகவும் நல்லவர் குறைவோ? இதற்கு அவரிடமிருந்து மூன்றுகோடிகளை பெற்றுள்ளீர்களே இது ஞாயமா? மேலும் விசாரித்தப்போது உங்களின் அனைத்து வேட்பாளர்களிடமும் தலா மூன்று கோடி ரூபாய்களை பெற்றீர்கள் என்ற உண்மை செய்தி என்நெஞ்சை ஈட்டி என குத்திக் கிழித்தது.

          இதற்கு மேல் உங்களை உங்கள் ஜாதிக்காரர்களோ அல்லது தமிழர்களோ நம்பினால் அவர்கள் முட்டாள்.

Monday, April 4, 2011

இந்த தேர்தலில் எந்த கூட்டணி வெற்றிபெறும்!!

          இந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறும் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்? ஆனால் என்னால் சரியாக கணிக்கமுடியவில்லை காரணம், திமுக மற்றும் அதிமுக இந்த இரு கூட்டணிகளுமே சமபலம் கொண்டதாகவே தெரிகின்றன. மேலும் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் எதிர்ப்பு அலையோ அல்லது எந்த கட்சிக்கும் ஆதரவு அலையோ பெரியதாக இருப்பதாக இதுவரை தெரியவில்லை. 

          2G SPECTRUM மற்றும் திமுகவின் மற்ற ஊழல்களை எடுத்துக்கொண்டாலும், மக்கள் ஊழலை ஒரு அளவுகோலாக இதுவரை பார்த்து ஓட்டளிக்கவில்லை என்பது கடந்த காலங்களை உற்றுப்பார்த்தால் நன்கு தெரியும். பிறகு இலவசங்களை ஒரு அளவுகோலாக எடுத்துக்கொண்டாலும் இரு கட்சிகளுமே சம அளவுகளிலேயே இலவசங்களை அறிவித்துள்ளன. முதல்வர் வேட்பாளர் என்ற முறையில் பார்த்தாலும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவருக்கும் சம அளவிலேயே ஆதரவு உள்ளதாக தெரிகிறது. குடும்ப அரசியல் என்பதை பார்த்தால் திமுகவின் பலம் சற்று குறைகிறது. எனினும் இது எந்த அளவிற்கு இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்று தெரியவில்லை?

          விலைவாசி உயர்வு மக்களிடையே நன்கு பிரதிபலித்தாலும், அரசாங்க ஊழியர்களின் ஓட்டு அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் திமுக அணிக்கே செல்லும் என்பதில் எந்த மாற்றம் இல்லை. இதுபோல் ஒவ்வொரு கூட்டணிக்கும் ஒவ்வொரு பலம் மற்றும் பலவீனம் உள்ளன. மொத்தத்தில் இன்னும் மக்கள் எவருக்கு ஓட்டளிக்கவேண்டும் என்பதை முடிவுசெய்யவில்லை என்றே தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் இந்தத் தேர்தலில் போட்டி மிகவும் கடுமையாகவே இருக்கும் என்று தெரிகிறது.

          இந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டளிக்கவே நான் விரும்புகிறேன்.  என்னிடம் கேட்பவர்களுக்கும் அதிமுகவிற்கே ஓட்டளிக்க சொல்கிறேன், பொறுத்திருந்து என்ன நடக்கிறது என்று பார்போம்.

தயவுசெய்து இந்த குறும்படத்தை பாருங்கள்!!!

Sunday, April 3, 2011

இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை வென்றது இந்தியா!

          எதிர்ப்பார்த்தது போலவே ஸ்ரீலங்காவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றுவிட்டது இந்தியா. பரபரப்பான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. டோனி மற்றும் காம்பிர் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர். இந்த உலகக்கோப்பையில் இந்திய சார்பில் அதிகபட்சமாக சச்சின் 482 ரன்கள் குவித்ததும், ஜாகிர்கான் 21 விக்கெட் வீழ்த்தியதும், யுவராஜ் 377 ரன்களும் 15 விக்கெட் வீழ்த்தியதும் இந்தியா கோப்பையை கைப்பற்ற பெரிதும் உதவியுள்ளது. 


Saturday, April 2, 2011

இன்று உலகக்கோப்பை இறுதிப்போட்டி!!!

          இன்று அனைவராலும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. சமபலம் கொண்ட இந்தியாவும் இலங்கையும் மோதஉள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றியடையும் அணி உலகக்கோப்பையையும் உலக சாம்பியன் பட்டதையும் வெல்லும். இந்தப்போட்டியை காண இலங்கையின் அதிபர் ராஜபக்சே மற்றும் இந்திய ஜனாதிபதி பிரதிபா படீல் போன்றோர் வருகை தர உள்ளனர். இதைமுன்னிட்டு 8 அடுக்கு பாதுகாப்பு தரப்படுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள்.
         மும்பை வாங்கடே மைதான PITCH முதல் ஆடுபவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் 280க்கு மேல் சேர்க்கும் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆட்டத்தில் TOSS ஒரு முக்கிய பங்குவகிக்கும்.

Friday, April 1, 2011

கருணாநிதி அரசின் சாதனைகள்!!!

          இந்த தேர்தலில் கருணாநிதி அவர்கள் மிக அதிகமாக இலவசங்களை அறிவித்துள்ளார் தமிழகமக்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று திமுக கூட்டணிக்கட்சிகள் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர் மக்களிடம் பிரசாரம் செய்கின்றனர் அவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் திமுக அமைச்சர்கள் அவர்களின் துறைகளில் என்ன சாதனைகள் செய்துள்ளனர்? அதை ஏன் இந்தப் பிரசாரத்தில் எவரும் சொல்லவில்லை? அதை நாம் கீழே பார்ப்போம்.
வீரப்பாண்டியார் (விவசாயத்துறை)
          கடந்த ஐந்து வருடங்களில் விவசாயிகள் பட்ட துன்பத்தைப் போல் வேறு எப்பொழுதும் அவர்கள் அடையவில்லை. தேவையான மின்சாரம் கிடைக்காமை, விளைநிலங்கள் விலைநிலங்கலானது, விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிக்க இந்தத் துறையிலிருந்து எந்த ஆகப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, விவசாயிகளுக்கு உரிய விலைக்கிடைக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அற்காடு வீராசாமி (மின்சாரத்துறை)
          நான் பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன், அங்கெல்லாம் மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், நம் தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவோ மேல் என்று சொல்லி மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்தார் வீராசாமியின் மனைவி. இந்த ஆட்சியில் தான் மின்வெட்டை ஒருநாளுக்கு இரண்டு மணிமுதல் மூன்று மணிவரை என்று தைரியமாக அறிவித்தார்கள். இந்தத்துறையின் சாதனை இதுவே. ஒரு மின்சாரத்தை தடையில்லாமல் வழங்க இயலவில்லை ஆனால் வரும் தேர்தலிலும் ஓட்டளியுங்கள் என்று மானமே இல்லாமல் கேட்கிறார்கள், இவர்களை என்ன சொல்ல?
வேலு (உணவுத்துறை)

          இந்தத்துறையில் ஒரு ரூபாய் அரிசி கொடுக்கப்பட்டதை சாதனையாக சொல்கிறார்கள். உண்மையில் கடந்த ஆட்சியில் 3.50 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரிசி மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுது விலை தான் இறங்கியுள்ளதே தவிர தரம் மிகவும் மட்டமாக உள்ளது. அதுமட்டுமா வெளிமாநிலங்களுக்கு அதிகமாக கடத்தப்படுகிறது மற்றும் இந்தத்துறை ஊழலை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இவைகளே இந்தத்துறை சாதனைகள்.

நேரு (போக்குவரத்துத்துறை)

           இந்தத்துறையில் புது பேருந்துகளே மிகவும் குறைவு, மற்றும் பழைய பேருந்துகள் பழுதுபார்க்கப்படுவதில்லை காரணம் மிகவும் நஷ்டத்தில் ஓடுகிறது. பேருந்துகளுக்கு டிசல் வாங்கக்கூட பணமில்லாமல் ஊழலில் கொழுதுக்கொண்டுள்ளது இந்தத் துறை. நேருவோ இன்ஜினியரிங் காலேஜ்கள் திறந்துக்கொண்டே உள்ளார்.

அன்பழகன் (நிதித்துறை)

          கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து தரப்பினர்களாலும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி தமிழகஅரசின் கடன் ஒரு லட்சம் கோடியை தாண்டியது என்பது. நிர்வாகத்திரனே இல்லாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே இதற்குக்  காரணம். இதை இந்தத் தேர்தலில் சொல்லி ஓட்டுக்கேட்பார்களா?

துரைமுருகன் (சட்டத்துறை) 

          இந்த ஆட்சியில்தான் முதல் முதலில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டார்கள், திமுகவினர்களால் மிக அதிகமுறையில் சட்டங்கள் மீரப்பபட்டன. இவைகளே இந்த துரையின் சாதனை.

M.R.K.பன்னிர்செல்வம் (சுகாதாரத்துறை)

          போலி மருந்துகள் உட்கொள்வதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படாது!! என்று தமிழக முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார். ஆனால் திமுக கட்சியை சேர்ந்த பல புள்ளிகளுக்கு இதில் தொடர்புள்ளது என்ற செய்தி அப்பொழுது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அரசு மருத்துவமனைகளின் நிலைமை மிகவும் தரம்கெட்டுப் போனது இந்த ஆட்சியில்தான்.

          இன்னும் நிறைய துறைகள் இருந்தாலும் முக்கியமான துறைகளில் நடந்த ஊழல் மற்றும் அத்துமீறல்களை மேலே சொல்லியுள்ளேன். கருணாநிதி உண்மையிலேயே தமிழகமக்களின் மீது பற்றுக்கொண்டுள்ளார் என்பதற்கு மேல் சொல்லியுள்ளவைகளே ஆதாரம் மேலும் இவைகளையெல்லாம் மறைக்கவே இலவசங்களை அள்ளி விடுகிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடவேண்டாம். 
                            மிகவும் கவனத்துடன் வாக்களியுங்கள்