Friday, April 30, 2010

சுறா-விஜய்க்கு ஒரு கடிதம்


          விஜய் நடித்து வெளிவந்துள்ள சுறா படத்தை பார்த்தேன்,  பெயரில் மட்டும் விஜய் என்று வைத்துக்கொண்டு மகா மட்டம்மான தோல்விப் படங்களையே கொடுத்துக்கொண்டுள்ளார் விஜய். தான் செல்லும் விழாக்களுக்கு அமைதியாகவும் தான் நடிக்கும் படங்களில் மிகவும் ஆக்ரோஷமாகவும் உள்ளது போல் காட்டிக்கொள்கிறார். இது அவரது 50வது படம், எனக்கு தெரிந்து அவர் நடித்து வெளிவந்துள்ள மட்டமான படம் சுறா தான் (51வது படம் வந்தால் சுறா நல்ல படமாகிவிடும் என்பது வேறு விஷயம்). விஜய்க்கு உண்மையிலேயே சூடு சொரணை இருந்தால் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், அமீர்கான், ஷாருக்கான் போன்றோரின் படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கசொல்லுங்கள். இவர் ஒரு படத்திற்கு 5 கோடி 10 கோடி என்று சம்பளம் வாங்கிக்கொண்டு சத்திரம், பண்ணைவீடு போன்றவைகளை வாங்கிக் குவித்துக்கொண்டுள்ளார் மேலும் நான் அரசியலுக்கு வருவேன் அடுத்த முதல்வர் நான் தான் போன்ற நகைச்சுவைகளையும் அடிக்கடி வெளியிடுகிறார். பாவம் அவரது ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் முதல் நாளே 100 முதல் 250 வரை ஒரு டிக்கெட் என்று கொடுத்து பார்க்கும் அவர்களுக்கு மிகவும் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. இந்த முறை நான் என் நண்பனிடம் (அவன் தீவிர விஜய் ரசிகன்) படம் எப்படி உள்ளது என்று கேட்டேன் ஒவ்வொரு முறையும் அற்புதம் என்று பொய் சொல்லும் அவன் இந்தமுறை மிக மிக மட்டம் தயவு செய்து படத்தை பார்க்காதே என்று எனக்கு அறிவுரை செய்தான். விஜய் உங்களுக்கு ஒரு அறிவுரை வழங்க விரும்புகிறேன், உங்களுக்கு கதையை தேர்வுசெய்து கொடுப்பவர் யார்? அவரை முதலில் நீக்குங்கள். உண்மையிலேயே நீங்கள் நல்ல நடிகனாக இருந்தால் அடுத்து ஒரு நல்ல படத்தை கொடுங்கள். உங்களுக்கு தேவையான பணத்திற்கு மேல் சேர்த்துவிட்டீர்கள் தயவுசெய்து படத்தில் நடிப்பதை சிறிது நாட்களுக்கு ஒத்திவையுங்கள். தயவுசெய்து உங்கள் ரசிகர்களுக்கு மொட்டை போடாதீர்கள்.               

1 comment: