Saturday, April 24, 2010

நான் மும்பை சென்ற கதை

          நான் இதற்கு முன்பு பல முறை மும்பை சென்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் மும்பை எனக்கு  புது அனுபவத்தையே கொடுத்துள்ளது.

மும்பையும் E.K.சாமியும்

          என் தாத்தா பாட்டி மும்பையில் வசிக்கிறார்கள். அவர்களை காணவே அங்கு நான் வருடத்திற்கு ஒருமுறை செல்வது வழக்கம். அவர்களும் அடிக்கடி போனில் தொடர்புகொண்டு மும்பைக்கு வா என்று அழைப்பு விடுவார்கள். நான் செய்யும் லொள்ளுகளையும் சேட்டைகளையும் பொறுத்துக்கொண்டு என்னை கனிவுடன் கவனிப்பார்கள் மற்றும் அவர்களது மகன் ராஜ் நான் எங்கு செல்லவேண்டுமென்றாலும்  தனது வேலைகளை விடுத்து தனது காரிலேயே அழைத்துச்சென்று பொறுமையுடன் இருந்து கவனிப்பார். இந்த முறையும் அவ்வாறே கவனித்து எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது காரணம் நான் இந்த முறை மும்பை சென்றது என் தாத்தா E.K.சாமி மரணத்திற்காக! நான் அவரை எபோழுதும் OLD என்று தான் அழைப்பேன் என் தாத்தா E.K.சாமிக்கு 80 வயது முடிந்த மறுநாள் உயிர் இழந்ததாக எனக்கு தகவல் வந்தது, பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.  அவர் பாபா அணுசக்தி நிறுவனத்தில் வேலை செய்து ஒய்வு பெற்றவர். கடுமையான உழைப்பாளி. அவரது நினைவு எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும், கடந்த வருடம் நான் அவரை கடைசியாக பார்க்கும்பொழுது   நான் கேட்டேன் OLD HOW ARE YOU? என்று அதற்கு அவர் ONEDAY OLD GOING TO BOLD என்றார் இதை என் பாட்டியிடம் சொன்னேன் அவர் கண்ணீர் வடித்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது பின் 45 வருட திருமண வாழ்க்கை ஆயிற்றே!

என் மும்பை ரயில் பயணம் 


          நான் எபொழுது மும்பை சென்றாலும் ரயிலில் 3 TIER AC COACHல் முன்பதிவு செய்வது வழக்கம், ஆனால் இந்த முறை என் தாத்தா திடீரென்று இறந்ததால் என்னால் AC COACHல் பதிவு செய்ய முடியவில்லை 2ND CLASS  SLEEPER தான் கிடைத்தது அதுவும் WAITING. கடைசியில் CONFIRM ஆகியது என் அதிர்ஷ்டம். இந்த ஏப்ரல் மாத வெயிலை தாங்கமுடியவில்லை இதை நினைக்கும் போது எனக்கு ஒரு VODAFONE விளம்பரத்தில் வரும் ZOO பொம்மைதான் ஞாபகம் வருகிறது. ஒரு ஜூ பொம்மையை மூன்று ஜூ பொம்மைகள் ஒரு அண்டாவில் வைத்து கீழே கொதியுட்டிவிடும், பிறகு அதற்கு ஒரு SMS வரும் அதை பார்த்ததும் அண்டாவில் உள்ள ஜூ பொம்மை கல கல என்று சிரிக்கும். அதே போல் தான் எங்கள் ரயிலும் கொதித்தது. இந்த முறை ரயிலில் பிச்சைகாரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் நான் பிச்சை போடவேண்டுமென்றால் சுமார் 5000 ரூபாயை நான் சிலரை மாற்றி வைத்திருந்தாலும் போதாது, அவளவு வசதி இல்லாததால் நான் அவர்களை தவிர்த்துவிட்டேன். என் ஒவ்வொரு பயணத்திலும் நான் நிறைய மனிதர்களை சந்தித்துள்ளேன் இந்த முறை ஒரு மாற்றுதிறனாளி (PYSICALLY CHALLENGED PERSON) ஒருவரை சந்தித்தேன். அவரும் அவரது மனைவியும் மும்பை TO சென்னை பயணசீட்டு பதிவு செய்திருந்தனர், ஆனால் இருவருக்கும் தனிதனி COMPARTMENTல் இடம் ஒதுக்கியிருந்தனர். அவர்களுக்கு தங்கள் இடங்களை பரிமாற்றம் செய்ய எவருமே முன்வராதது அவரது மனைவிக்கு மிகவும் வருத்தம் அளித்தது அவர் அழுதேவிட்டார். பிறகு நான் என் இடத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அடுத்த COMPARTMENTல் தனியாக பயணம் செய்தேன். அவர்கள் எனக்கு மிகுந்த நன்றி தெரிவித்தனர் அவர்களுடன் மிக நீண்ட நேரம் பேசிகொண்டிருந்தது எனக்கு மிகுந்த மனநிறைவை கொடுத்தது.

ரயிலில் திருநங்கைகள் 

          நான் எபோழுதும் திருநங்கைகளுக்கு ஆதரவான மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கருத்துடையவன். ஆனால் இந்த முறை மும்பை ரயிலில் செல்லும்போதும் சரி திரும்பும்போதும் சரி இவர்களின் அட்டகாசம் மிகவும் அதிகமாக இருந்தது. நானும் ஒரு திருநங்கையிடம் நன்றாக மாட்டிக்கொண்டேன். என்னை பணம் கேட்டு நான் இல்லை என்றவுடன் ஒரு திருநங்கை என் அருகில் வந்து அதன் மார்பகத்தை காண்பித்து இபொழுது 10 ருபாய் கொடுப்பாயா என்றும் மிகவும் மட்டமான முறையில் திட்டியும்விட்டது, நான் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தேன் பிறகு அந்த திருநங்கை கன்னத்தில் லேசாக அடித்துவிட்டு சென்றது. என் COMPARTMENTல் இருந்தவர்கள் அனைவரும் அந்த திருநங்கையை திட்டிதீர்த்தார்கள். திருநங்கையாக பிறந்தது அவர்களின் தவறா?, அவர்களை அம்போ என்று விட்டுவிட்ட இவர்களின் குடும்பத்தின் தவறா?, அல்லது அவர்களுக்காக எந்த துரும்பையும் கிள்ளி போடாத இந்த அரசாங்கத்தின் தவறா?

மும்பையும் புதுமையும் 

          ஒவ்வொரு முறை மும்பை செல்லும்போதும் நான் உன்னிப்பாக அதன் வளர்ச்சியை ஆராய்வேன் இந்த முறையும் அதை கவனித்தேன் உண்மையில் மும்பை உள்கட்டமைப்பு (INFRASTRUCTURE) துறையில் மிகவும் வேகமாக முன்னேரிகொண்டுவருகிறது. புதுமைகளை புகுத்துவதில் மிகவும் முனைப்புடன் இருப்பது நன்றாக தெரிகிறது. அதற்கு உதாரணமாக அங்கு வேலை நடைபெற்றுக்கொண்டுள்ள MONO மற்றும் METRO ரயில் திட்டங்கள், அதிவேக LOCAL ரயில்கள், அகன்ற 8  LANE கொண்ட அகன்ற சாலைகள் என்று இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். மும்பையுடன் ஒப்பிடும் போது சென்னை மெதுவான வளர்ச்சியே கொண்டுள்ளது என்பது என் கருத்து.

மும்பையில் என் PURCHASE 

          எப்பொழுது மும்பை சென்றாலும் நான் என் குடும்பத்திற்காக PURCHASE செய்வது வழக்கம். இந்த முறையும் நான் PURCHASE செய்த அனுபவம் மிகவும் வேடிக்கையாக அமைந்தது. முதலில் நான் ஷூ வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் அதற்கு மும்பையில் நல்ல வாய்ப்புகிடைத்தது நிறைய ஷூகளை PLATFORMல் வைத்து விற்றுக்கொண்டிருந்தனர் நான் அங்கு சென்று ஒரு ஜோடி ஷூவை அடுத்து விலையை கேட்டேன் கடைகாரர் 850 என்று பதிலளித்தார் நான் மிகவும் கெட்டிகாரத்தனமாக கேட்பதாக நினைத்து 250க்கு கேட்டேன் உடனே  கடைக்காரர் அதை PACK செய்து என்னிடம் கொடுத்துவிட்டார் நானும் அதை அசடுவழிய வாங்கிக்கொண்டு நடையை கட்டினேன், இதே போல சேலை CAR பொம்மைகளை நான் விரும்பிய விலைக்கு PURCHASE செய்து நடைகட்டினேன். எனக்கு ஒரு சந்தேகம் இவற்றின் உண்மையான விலைதான் என்ன? ஏமாந்தது கடைகாரர்களா அல்லது நானா?          

1 comment: