Thursday, April 1, 2010

அங்காடி தெரு

          வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படமான அங்காடிதெரு படத்தைப் பார்த்தேன், சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணாஸ்டோர்ஸ் கடையை மையமாகக் கொண்டு நகரும் கதையாகவே இது இருக்கிறது. சரவணாஸ்டோர்ஸ் கடையில் நடப்பதாக காட்டியுள்ள மனித உரிமை மீறல்களை அளவுக்கு அதிகமாக படமாக்கியுள்ளனர். சரவணாஸ்டோர்ஸ் கடையானது 10000க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலையை கொடுத்துள்ள ஒரு நேர்மையான நிறுவனம். பொது மக்களுக்கு மற்ற கடைகளை விட குறைந்த விலையில் பொருட்களை விற்கும் ஒரு உன்னத நிறுவனமும் கூட, இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தும் அதை விடுத்தது அங்கு வேலை பார்பவர்களை கொத்தடிமை போல் நடத்துவதாக காட்டியுள்ளார் வசந்தபாலன், அதாவது இந்தப் படத்தில் வில்லனாக சரவணாஸ்டோர்ஸ் அதிபரையே காட்டியுள்ளது மிகவும் கொடுமை. வசனகர்த்தா ஜெயாமோகன் பிச்சைகாரர்கள் மற்றும் அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதியே நல்ல பணம் பார்க்கத் தெரிந்த ஒரு திறமையான எழுத்தாளர். படத்தில் பாடல்கள் கேட்கும் படி உள்ளது.  லிங்கமாக புது முகம் (மகேஷ்), கனியாக (அஞ்சலி) பாத்திரதிற்கு ஏற்றார் போல் நடித்துள்ளனர். மற்றபடி இந்தப் படம் நன்றாக இல்லை.


 

1 comment:

  1. மனிதர்களிடம் உள்ள குருரம் அ.தெரு வின் விமர்சனங்களில் தெரிகிறது.இது ஒரு சமுகத்தின் மிக முக்கிய பிரச்சனைய,வெயிலில் வெந்து எடுத்து அ.தெரு மழையில் நனைய வைக்கிறார். 20 ஆண்டுகள் எனக்கு தி.நகர் பரிச்சயம் உண்டு.ஏறக்குறைய 25000 பேர் இப்பகுதியில் பணிபுரிகின்றனர். ச.ச ஊழியர்கள் தினசரி கடையில் வீணாக்கும் பொருட்கள் பல ஆயிரங்களை தாண்டும். மேலும் பாத்ரூம் அதிக நேரம் இருக்கும் பெண்களையும் பார்த்ருக்கிறேன்.No Vacancy போர்டுகள் மாட்டப்பட்ட பழைய படங்களை நாம் பார்த்திருப்போம். இன்று இப்பகுதியில் உள்ள வேலை வாய்ப்புகள் அதிகம். ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் பணிபரியும் ஊழியர் எண்ணிக்கை எவ்வளவு? ஒரு கொடி நட முடியவில்லை அங்கு.மேன்சன்களில் மெய்ந்து நள்ளிரவில் திரும்பும் குடி மன்னர்களாகிய இயக்குனர்களின் மூளையில் உதித்ததுதான் அ.தெரு. சாருவின் விமர்சனம். மற்றும் இந்த விமர்சனம் நன்று.கொஞ்சம் மார்க்சியம், கொஞ்சம் பார்ப்பனிய எதிர்ப்பு,கொஞ்சம் அழகியல்,வலிந்து திணிக்கப்படுதல். போன் மிக்சிங் சினிமா தற்போது அதிக அளவில் வந்து கொண்டுருக்கின்றன. சினிமாவில் வாய்ப்பை தேடி அலையும் வ.கர்த்தாக்களூக்கு இது ஒரு சாட்டையடி.

    ReplyDelete