Sunday, February 28, 2010

சாதனை நாயகன் சச்சின்


          சச்சினின் சாதனைகளை கம்ப்யூட்டரில் அடக்குவது கடினம். அவரது ஒருதின சாதனைகளில் முக்கிய சாதனைகளை இங்கே காண்போம். ஒருதின போட்டிகளில் அதிக ரன்கள் (17558), அதிக சதங்கள் (46), அதிக அரைசதங்கள் (93), ஒருபோட்டியில் அதிக ரன்கள் (200*), அதிக ஆட்டநாயகன் விருது (61), அதிக தொடர் நாயகன் விருது (15), உலககோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் (1796), உலக கோப்பை போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருது பெற்றவர், ஒரு உலக கோப்பை போட்டியில் அதிக ரன்கள் (523), ஒரு ஆண்டில் அதிக சதங்களை 1998ம் ஆண்டு (9 சதங்கள்), ஒருநாள் போட்டியில் அதிக முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்தவர் (5), ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர், ஒரு தினப்போட்டியில் ஒரு வருடத்தில் 1000 ரன்களை அதிக முறை எடுத்தவர் (7), அதிக 4S அடித்துள்ளவர் (1927), தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டியில் விளையாடியவர் (185 போட்டிகள் 1990 முதல் 1998 வரை) நான் இங்கே கொடுத்துள்ளது சச்சினின் ஒருதின சாதனைகளில் சில இன்னும் டெஸ்ட் போட்டிகளில் சாதனைகளான அதிக டெஸ்ட் ரன்கள் (13447), அதிக டெஸ்ட் சதங்கள் (47) இன்னும் பல சாதனைகளின் சொந்தக்காரராக உள்ளார் LITTLE MASTER சச்சின். அவர் மேலும் பல சாதனைகளை செய்ய வேண்டும் அதற்கு அவரில் உடல் நிலையும் ஒத்துழைக்கவேண்டும் என்று இறைவனை வணங்குவோமாக.
 

No comments:

Post a Comment