Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா

   
          நிஜக் காதலுக்கும், சினிமாக் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை அற்புதமாக காண்பித்து தான் ஒரு சிறந்த DIRECTOR என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் GOUTHAM VASUDEV MENON. காதலர்கள் சிம்பு, திரிஷா காதலில் நடக்கும் போராட்டங்களை அற்புதமாக காட்டியுள்ளார். கார்த்திக்காக சிம்புவும், ஜெர்சியாக திர்ஷாவும் காதலிக்கின்றனர், வழக்கம் போல் ஜெர்சியின் தந்தை வேற்று மதத்தை சேர்ந்த சிம்புவை ஒற்றுக்கொள்ள மறுக்கிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பது கதை. A.R.RAHMAN இசை வழக்கம் போல் மிகவும் நன்றாக உள்ளது. சிம்பு தனது விரல்களை மற்றும் அதிரடி பேச்சு போன்றவற்றை தவிர்த்து நன்றாக நடித்துள்ளார். திரிஷாவும் நன்றாக நடித்துள்ளார். ஆங்கிலத்தில் பேசும் அசிங்கமான வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். விண்ணைத் தாண்டி வருவாயா யதார்த்தமான, உண்மையில் நடக்கின்ற கதை. சிலர் நன்றாக இல்லை என்று கூறினாலும், பலர் நன்றாக இருக்கிறது என்று சொல்வர்.

No comments:

Post a Comment