Sunday, January 23, 2011

எங்கள் தோட்டம்!!!

          நான் கடந்த வாரம் என் நண்பனின் வீட்டிற்கு சென்றிருந்தேன் அவரின் மகளிடம் பேசும்பொழுது தோட்டத்தை பற்றியும் குருவிகள் பற்றியும் பேச்சு வந்தது, அப்பொழுது நண்பரின் குழந்தை தோட்டம் என்றால் என என்று என்னை கேட்டது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த குழந்தைக்கு இதை விளக்க எனக்கு அப்பொழுது நேரம் இல்லை, குழந்தையிடம் உன் தந்தையிடம் கேள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு எனக்கு எங்கள் வீட்டு தோட்டத்தை பற்றி நினைவுகள் வந்தது, அவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் வீட்டு தோட்டம் எனக்கு எப்பொழுதும் மிகவும் பிடித்த இடமாகும், அங்கு சென்று அமர்ந்து கொண்டால் கிளிகள் குருவிகள் அணில்கள் போன்றவற்றின் சப்தம் மற்றும் அவற்றின் விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்தால் நேரம் செல்வதே தெரியாது.

           இது எங்கள் வீட்டு கொய்யா மரம் இதை நான் 1998 வருடம் என்று நினைவு நானும் என் நண்பனும் குருவிமலை வரை சென்றிருந்தோம் அங்கு ஒரு தோட்டத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது, அங்கு இந்த கொய்யா மற்றும் எலுமிச்சை கன்றுகளை (அப்பொழுது மிகவும் சிறியதாக இருந்தன) வாங்கி வந்ததாக ஞாபகம்.

          தற்பொழுது கொய்யா காய்க்கிறது அதை கிளி மற்றும் அணில்களிடமிருந்து காக்க என் அம்மா ஒரு பிளாஸ்டிக் உறை போட்டு பாதுகாக்கிறார். எலுமிச்சை காய்க்கிறது, மற்றும் வெற்றிலை கொடி, ரோஜா செடிகள், துளசி செடி, வேப்பம்மரம், தேக்கு மரம், பன்னிர் மரம், செம்பருத்தி செடி, நாகலிங்க மரம் போன்றவை எங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ளன.
          குருவிகள், கிளிகள் மற்றும் அணில்கள் எப்பொழுதும் எங்கள் தோட்டத்தில் விளையாடிக்கொண்டுள்ளதை காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
          நீங்களும் மரங்களை வளர்த்து நமது நாட்டையும், சுற்றுச்சூழலையும் காப்பாற்றவேண்டும் என்றுக் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment