Thursday, June 23, 2011

மீண்டும் உயருது பெட்ரோல், டீசல் வாழ்க காங்கிரஸ் அரசாங்கம்!!!

          இப்பொழுது எந்த நாளேடை திருப்பினாலும் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருகிறது என்று எழுதுகிறார்கள். படிக்கும்பொழுதே தலை சுற்றுகிறது. நானும் இனி மோட்டார் சைக்கிள் தவிர்த்து சிறு வேலைகளுக்கு சைக்கிள் ஓட்டிப்பழக வேண்டும் என்று என் மனதில் கூறிக்கொண்டே இருந்தேன், நேற்று சைக்கிளை எடுத்துக்கொண்டு மார்கெட் வரையில் சென்று காய்கறிகள் வாங்கி வந்தேன். என் சட்டை முழுவதும் வேர்வையில் நனைத்து, நான் என்னவோ கொத்தனார் வேலையில் இருந்து வந்தது போல் காட்சியளித்தேன். என் கால்கள் இயங்க மறுத்தன, பிறகு மெத்தையில் விழுந்து ACயின் நனைந்ததும் தான் பழைய நிலைக்கு வந்தேன். இப்பொழுது தான் தெரிகிறது சைக்கிள் ஒட்டுவது எவ்வளவு கஷ்டம் மேலும் ஏன் இந்த மோட்டார் சைக்கிள்கள் இவ்வளவு அதிகமாக விற்பனை ஆகின்றன என்றும் தெரிந்தது.

          தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டிய மக்கள். மக்களின் நலனில் அக்கறையே இல்லாத மத்திய காங்கிரஸ் அரசிற்கும் முடிவு கட்டுவார்களா என்று எதிர்ப்பார்க்கிறேன். அதற்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் உள்ளது. அதுவரை விதியை நொந்தப்படி நான்.

Saturday, June 4, 2011

தயாநிதிக்கும் களி தின்ன ஆசை!!!

          கனிமொழியை தொடர்ந்து தயாநிதிமாறனுக்கு திகார் ஜெயில் களி தின்பதற்கு ஆசை வந்துவிட்டது, விரைவில் அவரது ஆசை நிறைவேறும் என்று நம்புவோமாக. கருணாநிதி கூடா நட்பு கேடு என்று மீண்டும் தனது பழைய பஞ்சாங்க பேச்சை பேச தொடங்கிவிட்டார். ஊழல் செய்யும் தனது குடும்பத்தை தடுக்க யோகியதை இல்லாத முதுகெலும்பில்லாத கிழவர் என்பதை மீண்டும் நிருபித்துவிட்டார். தனது குடும்பத்திற்கு அளித்த முக்கியத்துவம் தான் கடந்த தேர்தலில் தான் பெற்ற படுதோல்விக்கு காரணம் என்று தெரிந்து வைத்துக்கொண்டே காங்கிரஸ் கட்சியை குறை சொல்லிக்கொண்டுள்ளார். அவரது மகன் அஞ்சாநெஞ்சன் அழகிரி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை, ஆனால் தேர்தல் முடிவுக்கு முன் என்ன வாய்சவடால் பேச்சை பேசிக்கொண்டிருந்தார் இந்த மனிதர். அனைத்திற்கும் தமிழக மக்கள் பதில் சொல்லிவிட்டார்கள். இன்னும் எங்கள் கட்சியை சேர்ந்த எவரும் தவறு செய்யவில்லை என்று கூரிக்கொண்டுள்ளது மிகவும் நகைப்பிற்குரியது.

Saturday, May 21, 2011

காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் தேர் திருவிழா!!!

          இன்று காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் தேர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் படத்தை நீங்களும் கண்டுகளியுங்கள்.



Friday, May 20, 2011

நிஜ ஹீரோக்கள் ஷைனி மற்றும் பூஷன்!!!

          எதிர்ப்பார்த்தது போலவே கவிஞர் கனிமொழி களி தின்பதற்கு திகார் சிறைக்கு சென்றுவிட்டார். இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டுள்ள நீதிபதிகளான ஷைனி மற்றும் பூஷன் இவர்களையே அனைத்து பெருமைகளும் சாரும், மேலும் இவர்களின் கடமை தொடரவும் என் வாழ்த்துக்கள். இனி ஊழல் மற்றும் முறைகேடு செய்பவர்கள் எவரையும் நீதியின் முன் நிறுத்தவும் மற்றும் நீதியை நிலைநாட்டவும் இந்த வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு முன்னுதாரணமாகவும் தவறு செய்பவர்கள் எவராயினும் தயவு தாட்சண்யம் இல்லாமல் கடுமையான தண்டனை கிடைக்க செய்யும் வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு அமையவேண்டும்.

          மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர்கள் மற்றும் தங்களுக்கு SPECTRUM கிடைப்பதற்காக லாபி செய்த அனைவரும் கைதுசெய்வது மட்டுமின்றி அவ்வாறு கிடைக்கப்பெற்ற SPECTRUM LICENCE ரத்து செய்யப்படவேண்டும். இந்த நீதிபதிகள் தற்பொழுது பாதி கிணற்றை தாண்டிவிட்டனர் என்றே தெரிகிறது, இவர்கள் தொடர்ந்து இந்தவழக்கில் அக்கறை எடுத்து நல்ல முறையில் வழக்கை முடிக்கவேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

Saturday, May 14, 2011

மீண்டும் அம்மா ஆட்சி!!

          எதிர்பார்த்தது போலவே ஆதிமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் வீண் வாய்சவடால் செய்துகொண்டிருந்த திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைசிறுத்தை போன்றக் கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.


          இந்தத் தேர்தலில் ஜெயலலிதா மகிழ்ச்சி அடைகிறாரோ இல்லையோ, கேப்டன் விஜயகாந்த் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருப்பார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கருணாநிதி & சன்ஸ் மற்றும் கருணாநிதி & கோ போன்றவர்கள் வாலை சுருட்டிக்கொண்டு இருந்தாகவேண்டும்.

Friday, April 22, 2011

வெள்ளி- தங்கம் ஏற்றம் தொடருமா?

          கடந்த சில வருடங்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஏறுமுகமாகவே இருந்து வருகின்றன. அனைத்து தொலைக்காட்சிகளும், நாளிதழ்களும் இவற்றின் விலைகளை தினமும் அறிவித்து மக்களை மிரளவைப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. தங்கம் மற்றும் வெள்ளி கடந்த 10 வருடங்களாக வாங்குபவர்களுக்கு லாபத்தையே கொடுத்துக்கொண்டுள்ளது, அதாவது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. இதற்கு காரணமாக உற்பத்தி குறைவு தேவைப்பாடு அதிகம் இன்று சொல்லப்படுவதே ஆகும். கடந்த ஒருவருடத்தில் வெள்ளி 150%, தங்கம் 35% உயர்ந்துள்ளன.

          வெள்ளியை பொறுத்தவரை தற்பொழுது பல்வேறு துறை சார்ந்த தொழிற்சாலைகளில் தேவைப்பாடு அதிகமாகியுள்ளதால் ஏற்றத்தின் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. ONLINE துறையில் சம்மந்தமுடைய என் நண்பரை விசாரித்ததில் வெள்ளி தீபாவளிக்குள் 75000 (பார் வெள்ளி) வரை செல்ல வாய்ப்புள்ளது மேலும் இருவருடங்களில் 100000 வரை செல்ல வாய்ப்புள்ளது என்றும் தங்கம் தீபாவளிக்குள் ஒரு கிராம் 2500 (24 காரட்) செல்லவும் இருவருடங்களில் 4000 செல்லவும் வாய்ப்புள்ளதாக சொன்னார். மேலும் ONLINE வர்த்தகம் மூலம் மட்டும் இவற்றின் விலை ஏறவில்லை என்று கூறினார் அதற்கு காரணமாக ONLINE வர்த்தகம் இல்லாத 30 வருடங்களுக்கு முன் தங்கம் மற்றும் வெள்ளி திபீரென்று பலமடங்கு அதிகரித்ததை சுட்டிக்காட்டினார், மேலும் ONLINE வர்த்தகத்திலிருந்து வெள்ளி மற்றும் தங்கத்தை நீக்கமுடியாது என்றும் நீக்க அவசியம் இல்லை என்றும் கூறினார். கடந்த ஒருஆண்டில் இவற்றின் விலையேற்றத்தை கீழ் மட்டும் மேலே CHARTல் காணலாம்.

மின் வெட்டு!!!

           கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மின் வாரியம் விடுத்த அறிக்கையில் தவிர்க்க முடியாத காரணத்தால் தமிழகம் முழுவதும் மூன்று மணிநேரமும் சென்னையில் ஒருமணிநேரமும் மின்தடையை அறிவித்துள்ளது.
           தற்பொழுது தமிழகம் மட்டும்மல்ல இந்தியா முழுவதும் (குஜராத் மாநிலம் மட்டும் இதற்கு விதிவிலக்கு) மின் தடை அதிகமாக உள்ளது. அதற்கு மூன்று காரணங்கள் உள்ளதாக தெரிகிறது ஒன்று உற்பத்தி குறைவு இரண்டு இந்தியா முழுவதும் இலவசங்களாக கொடுக்கப்படும் விவசாயிகளின் மின்சாரத்தை மாநில அரசுகள் தவறாக பயன்படுத்துதல் மூன்று மின்சாரம் கொடுக்கும் நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் உரிய பணத்தை கொடுப்பதில்லை.


          மேற்சொன்ன அனைத்து காரணங்களும் நமது மாநிலத்திலும் உண்டு என்றாலும் கடந்த ஐந்து ஆண்டு காலமாக பதவியிலிருந்த திமுக அரசு மின் உற்பத்திக்கு எந்த புதிய திட்டங்களை செய்யவில்லை, மேலும் வசூலாகும் வரிகள் அனைத்தையும் இலவசங்களுக்கு செலவழிக்கவே சரியாக இருக்கிறது. 
            கருணாநிதி கடந்த ஐந்து ஆண்டுகளாக பாராட்டு விழாக்களில் செலவழித்த நேரங்களை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் போன்றவற்றில் செலவழித்திருந்தால் தமிழகம் மின் உபரி மாநிலமாக நிச்சயம் மாறிஇருக்கும். மாறாக தற்பொழுது இரண்டு மணிநேரம் மின்தடை மூன்று மணிநேரமானது தான் மிச்சம். என் ஒரே ஆறுதல் அடுத்த ஐந்து ஆண்டுகாலம் தமிழக மக்கள் கருணாநிதியை அவரது வீட்டிலேயே ஓய்வெடுக்க விட்டுவிடுவர் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கிறேன்.