Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா

   
          நிஜக் காதலுக்கும், சினிமாக் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை அற்புதமாக காண்பித்து தான் ஒரு சிறந்த DIRECTOR என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் GOUTHAM VASUDEV MENON. காதலர்கள் சிம்பு, திரிஷா காதலில் நடக்கும் போராட்டங்களை அற்புதமாக காட்டியுள்ளார். கார்த்திக்காக சிம்புவும், ஜெர்சியாக திர்ஷாவும் காதலிக்கின்றனர், வழக்கம் போல் ஜெர்சியின் தந்தை வேற்று மதத்தை சேர்ந்த சிம்புவை ஒற்றுக்கொள்ள மறுக்கிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பது கதை. A.R.RAHMAN இசை வழக்கம் போல் மிகவும் நன்றாக உள்ளது. சிம்பு தனது விரல்களை மற்றும் அதிரடி பேச்சு போன்றவற்றை தவிர்த்து நன்றாக நடித்துள்ளார். திரிஷாவும் நன்றாக நடித்துள்ளார். ஆங்கிலத்தில் பேசும் அசிங்கமான வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். விண்ணைத் தாண்டி வருவாயா யதார்த்தமான, உண்மையில் நடக்கின்ற கதை. சிலர் நன்றாக இல்லை என்று கூறினாலும், பலர் நன்றாக இருக்கிறது என்று சொல்வர்.

Sunday, February 14, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை

          எல்லாவற்றிலும் BEST என்று எதிர்பார்க்கும் நாயகனாக விஷால், வருங்கால மனைவியும் BESTஆக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு 3 பெண்களை தேர்ந்தெடுத்து காதலிப்பது போல் நடித்து அதில் BEST பெண்ணை தேர்ந்தெடுக்கிறார். நான் சொல்லிய இந்த கதையிலிருந்தே இந்தப் படம் எவ்வளவு மொக்கை என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். சந்தானம் COMEDY மட்டும் இல்லையென்றால் நான் இடைவெளியிலேயே எழுந்து வந்துவிட்டிருப்பேன். இந்தப்படத்தை பார்ப்பதை விட 100 ரூபாயை யாருக்காவது தானம் கொடுப்பது நல்லது.

Saturday, February 13, 2010

அசல்

         தமிழ் திரைப்பட உலகை மிகவும் பின் நோக்கி அழைத்து செல்வதில் VIJAY, AJIT முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அதை மீண்டும் தன் அசல் மூலம் அழுத்தம் திருத்தமாக நிருபித்துள்ளார் AJIT.

 யார் முட்டாள்?

       சமிபத்தில் என் நண்பர்களுடன் அஜீத் நடித்து வெளிவந்துள்ள அசல் திரைப்படத்திற்கு சென்றிருந்தேன். முதல் நாள் ஆதலால் கூட்டம் அலை மோதும் என்று நினைத்த எங்களுக்கு பெரும் அதிர்ச்சி காரணம் திரையரங்கில் கூட்டமே இல்லை. முதல் காரணம் ஒரு டிக்கெட் 100 என்று விற்கப்பட்டது, இரண்டாவது காரணம் நாங்கள் படத்தை பார்த்ததும் தான் தெரிந்தது, இதைபோல ஒரு மட்டமான திரைப்படத்தை இதுவரை பார்த்ததும் இல்லை இனிமேலும் பார்க்கப்போவதும் இல்லை. இதில் யாரை குறை சொல்வது? மட்டமான கதை மற்றும் திரைக்கதை அமைபிற்காக இயக்குநரையா? இந்த மட்டமான படத்தை தயாரித்த பிரபுவையா? அல்லது இந்தப்படத்தில் மிக மிக மட்டமாகவும், நடிபபுதிறமையே இல்லாமலும் ஆனால் வாய் கொழுப்பு அதிகமாகவும் உள்ள அஜீத் குமாரையா? அல்லது இந்த மட்டமான படத்தை 100 ரூபாய் கொடுத்து பார்த்த நாமா? யார் முட்டாள் ? தயவு செய்து சொல்லுங்கள்

MY NAME IS KHAN

         AMITHAPBHACHAN, KAMAL HASSAN, AMEERKHAN, SHARUHKHAN போன்றோர் இந்திய திரைப்படங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கின்றனர் என்பது என் ஆழமான கருத்து. அது மீண்டும் MY NAME IS KHAN படம் மூலம் நிரூபித்துள்ளார் SHARUHKHAN.


          9/11 பிறகு AMERICAவில் முஸ்லீம்கள் படும் இடர்பாடுகளை மிகவும் தெளிவாகவும் விறுவிறுப்பாகவும் காண்பித்துள்ளார். அவரது நடிப்பில் ஒரு மைல்கல்லாகவும் உள்ளது இந்தப்படம். KAJOLலும் தனது நடிப்பில் அசத்தியுள்ளார். அனைவரும் நிச்சயம் காண வேண்டிய படம் MY NAME IS KHAN