வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படமான அங்காடிதெரு படத்தைப் பார்த்தேன், சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணாஸ்டோர்ஸ் கடையை மையமாகக் கொண்டு நகரும் கதையாகவே இது இருக்கிறது. சரவணாஸ்டோர்ஸ் கடையில் நடப்பதாக காட்டியுள்ள மனித உரிமை மீறல்களை அளவுக்கு அதிகமாக படமாக்கியுள்ளனர். சரவணாஸ்டோர்ஸ் கடையானது 10000க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலையை கொடுத்துள்ள ஒரு நேர்மையான நிறுவனம். பொது மக்களுக்கு மற்ற கடைகளை விட குறைந்த விலையில் பொருட்களை விற்கும் ஒரு உன்னத நிறுவனமும் கூட, இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தும் அதை விடுத்தது அங்கு வேலை பார்பவர்களை கொத்தடிமை போல் நடத்துவதாக காட்டியுள்ளார் வசந்தபாலன், அதாவது இந்தப் படத்தில் வில்லனாக சரவணாஸ்டோர்ஸ் அதிபரையே காட்டியுள்ளது மிகவும் கொடுமை. வசனகர்த்தா ஜெயாமோகன் பிச்சைகாரர்கள் மற்றும் அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதியே நல்ல பணம் பார்க்கத் தெரிந்த ஒரு திறமையான எழுத்தாளர். படத்தில் பாடல்கள் கேட்கும் படி உள்ளது. லிங்கமாக புது முகம் (மகேஷ்), கனியாக (அஞ்சலி) பாத்திரதிற்கு ஏற்றார் போல் நடித்துள்ளனர். மற்றபடி இந்தப் படம் நன்றாக இல்லை.
இந்த BLOGல் பொது, அரசியல், சினிமா, விளையாட்டு, மற்றும் அனைத்துவிதமான நிகழ்வுகளை பற்றி விமர்சனம் மற்றும் செய்திகளை காணலாம்.
Thursday, April 1, 2010
Saturday, March 13, 2010
பாரத் ரத்னா சச்சின்
சச்சினைப் போல் ஒரு பிள்ளை எனக்கு வேண்டும், என் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான நாள் சச்சின் என் TEST CRICKET சாதனையான 400 ரன்களை கடப்பதுதான் இவ்வாறு பத்திரிகை சந்திப்பின் போது பிரைன்லாரா சொல்லியுள்ளார். உன் காலை தொட்டு வணங்க துடிக்கிறேன்- கவாஸ்கர், சச்சினுக்கு பாரத் ரத்னா பட்டத்தை வழங்க இதை விட சிறந்த தருணம் வேறு இல்லை- கபில்தேவ், என் சாதனையை என் நண்பர் சச்சின் முறியடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி- அன்வர், மூர்த்தி சிறியது கீர்த்தி பெரியது இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சச்சின். திறமையானவர்கள், பரந்தமனமுடையவர்களால் மட்டுமே பிறரை வாழ்த்தமுடியும். இதுவே சச்சினுக்கு பாரதரத்னா கொடுக்க சரியான தருணம். நம் அரசாங்கம் கொடுக்கிறதோ இல்லையோ நான் என் அன்புசச்சினுக்கு பாரத ரத்னா பட்டதை கொடுத்துவிட்டேன்.
Thursday, March 4, 2010
Tuesday, March 2, 2010
கதவை திற ரஞ்சிதா வரட்டும்
முன்னாள் நித்தியானந்த சுவாமிகள் காம லீலை VIDEOல் நமக்கு இரண்டு சந்தேகங்கள் வருகின்றன. ஒன்று SUNNEWSல் ஒளிபரப்பிய வீடியோவில் ரஞ்சிதாவின் முகம் ஏன் மறைக்கப்பட்டுள்ளது? அவளின் முகம் மறைக்கப்பட்டுள்ளதின் காரணம் என்ன? அவளே இந்த CDஐ ஒளிபரப்பும் நோக்குடன் SUNNEWS தொலைக்காட்சிக்கு அனுப்பினாளா? அல்லது சுவாமியுடன் தொடர்பில் உள்ள வேறு பெண்கள் போட்டியின் காரணமாக அனுப்பினார்களா?
எப்படி இருப்பினும் அவரின் மீது வழக்கு தொடுத்து அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. ஒரு மருத்துவர் தவறான சிகிச்சையளித்து நோயாளி இறந்தால் அந்த மருத்துவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுகிறது இந்த சமூகம். ஆனால் போலிச்சாமியார்கள் பிடிபட்டால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. இந்த விசயத்தில் என்ன நடக்கிறது என்று போரிதிருந்து பார்போம். வாழ்க SUNNEWS. உங்களுக்காக இந்த வீடியோ DOWNLOAD செய்யும் LINKஐ கொடுத்துள்ளேன்.
http://www.youtube.com/watch?v=DLdn_1ip6PI
எப்படி இருப்பினும் அவரின் மீது வழக்கு தொடுத்து அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. ஒரு மருத்துவர் தவறான சிகிச்சையளித்து நோயாளி இறந்தால் அந்த மருத்துவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுகிறது இந்த சமூகம். ஆனால் போலிச்சாமியார்கள் பிடிபட்டால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. இந்த விசயத்தில் என்ன நடக்கிறது என்று போரிதிருந்து பார்போம். வாழ்க SUNNEWS. உங்களுக்காக இந்த வீடியோ DOWNLOAD செய்யும் LINKஐ கொடுத்துள்ளேன்.
http://www.youtube.com/watch?v=DLdn_1ip6PI
கதவை திற பெண்கள் வரட்டும்
பிரபல சாமியார் நித்தியானந்தர் தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் ஒரு அறையில் உள்ளனர். அது ஆசிரமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த அறையில் புடவையுடன் இருக்கும் நடிகை ரஞ்சிதா சாமியாருடன் நெருக்கமாக படுக்கையில் புரளும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. பின்னர் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
இதேபோல் அடுத்தக் காட்சியில் நடிகை ரஞ்சிதா சுடிதாரில், சாமியார் இருக்கும் அறைக்கு வருகிறார். அப்போது ரஞ்சிதா மாத்திரை கொடுக்கிறார், காபி கொடுக்கிறார். பின்னர் பழையபடி விளக்குகள் அணைக்கப்படுகின்றன. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது நடிகைக்கும், சாமியாருக்கும் பல வருடங்களாகவே தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது.
திருவண்ணாமலையில் பிறந்த ராஜசேகரன் என்ற நித்தியானந்த சாமியார், திருவண்ணாமலை, பெங்களூர் போன்ற இடங்களில் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோ காட்சிகள் இவரது ஆசிரமத்துக்கு சென்று வரும் பக்தர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் மக்களுக்கு சொல்வது கடவுளை நம்புங்கள் இதுபோல் சாமியார்களை ஒருபோதும் நம்பாதீர்கள். இன்று ஒரு நித்யானந்தம் நாளை வேறு ஒருவர் என்று வந்துக்கொண்டே தான் இருப்பர், நாம் தான் விழிப்புடன் இருக்கவேண்டும்.(நன்றி நக்கீரன் வாரஇதழ்)
Sunday, February 28, 2010
சாதனை நாயகன் சச்சின்
சச்சினின் சாதனைகளை கம்ப்யூட்டரில் அடக்குவது கடினம். அவரது ஒருதின சாதனைகளில் முக்கிய சாதனைகளை இங்கே காண்போம். ஒருதின போட்டிகளில் அதிக ரன்கள் (17558), அதிக சதங்கள் (46), அதிக அரைசதங்கள் (93), ஒருபோட்டியில் அதிக ரன்கள் (200*), அதிக ஆட்டநாயகன் விருது (61), அதிக தொடர் நாயகன் விருது (15), உலககோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் (1796), உலக கோப்பை போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருது பெற்றவர், ஒரு உலக கோப்பை போட்டியில் அதிக ரன்கள் (523), ஒரு ஆண்டில் அதிக சதங்களை 1998ம் ஆண்டு (9 சதங்கள்), ஒருநாள் போட்டியில் அதிக முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்தவர் (5), ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர், ஒரு தினப்போட்டியில் ஒரு வருடத்தில் 1000 ரன்களை அதிக முறை எடுத்தவர் (7), அதிக 4S அடித்துள்ளவர் (1927), தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டியில் விளையாடியவர் (185 போட்டிகள் 1990 முதல் 1998 வரை) நான் இங்கே கொடுத்துள்ளது சச்சினின் ஒருதின சாதனைகளில் சில இன்னும் டெஸ்ட் போட்டிகளில் சாதனைகளான அதிக டெஸ்ட் ரன்கள் (13447), அதிக டெஸ்ட் சதங்கள் (47) இன்னும் பல சாதனைகளின் சொந்தக்காரராக உள்ளார் LITTLE MASTER சச்சின். அவர் மேலும் பல சாதனைகளை செய்ய வேண்டும் அதற்கு அவரில் உடல் நிலையும் ஒத்துழைக்கவேண்டும் என்று இறைவனை வணங்குவோமாக.
Saturday, February 27, 2010
24/02/2010 உலக ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த நாள். ஒருநாள் கிரிக்கெட் ஒரு INNINGSல் 200 ரன்களை அடித்த முதல் ஆட்டக்காரர் என்ற சாதனையை LITTLE MASTER சச்சின் டெண்டுல்கர் செய்தார். 1971 வருடம் முதல் ஒருதின கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன, பற்பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், பல ஜாம்பவான்களால் நிகழ்த்த முடியாத சாதனையாகவே இந்த சாதனை இருந்துவந்துள்ளது. இந்த சாதனை செய்ய கிரிகெட்டின் மீது சச்சினுக்கு இருக்கும் அதீத ஆர்வம் (PASSION) முக்கிய காரணம். சிலர் அவரின் வயதை சுட்டிக்காட்டி பலவாறு விமர்சனம் செய்து வந்தனர். அதற்கும் இந்த இரட்டைசதம் மூலம் அவர்களின் வாயை மிகப்பெரிய பூட்டு கொண்டு பூட்டிவிட்டார் சச்சின். சச்சின் இதுவரை தன் மீது எழும் விமர்சனத்திற்கு தனது BAT மூலம் மட்டுமே பதில் அளித்துவந்துள்ளார். அவர் நல்ல உடல்நிலையுடன் இருந்து மேலும் பல சாதனைகள் செய்யவேண்டும் என்று கடவுளை வேண்டுவோம்.
Subscribe to:
Posts (Atom)








