Monday, February 21, 2011

இந்தியருக்கு தெரியாததெல்லாம் அமெரிக்கர்களுக்கு தெரிகிறது!!!

          ரொனால்ட் ரீகனின் நூற்றாண்டு விழாவையொட்டி அமெரிக்காவின் TIME பத்திரிகை, உலகம் முழுவதிலிருந்து 25 சிறந்த அரசியல் தலைவர்களை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் நமது நாட்டின் தந்தை மகாத்மா காந்தி.  வன்முறையற்ற பாதையின் மூலம் சாதனை புரிய முடியும் என்று இந்த உலகிற்கு உணர்த்தியதால் தான் இந்த முதலிடம் கிடைத்திருக்கிறது காந்திக்கு. அமெரிக்காவில் சிவில் உரிமைகளுக்காக இயங்கும் இயக்கங்களுக்கு உந்துதலாக காந்தியக் கொள்கைகள் இருக்கின்றன என்றும் TIME பத்திரிகை பாராட்டுகிறது.

          முதல் 25 இடங்களுக்குள் இந்தியாவிலிருந்து இடம் பிடித்த மற்றொருவர், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த மொஹலாய பேரரசர் அக்பர். பன்முகத்தன்மை கொண்ட பல சிற்றரசுகளை கட்டிக்காத்து பேரரசராக ஆட்சி செய்து, இன்றைய இந்தியா என்கிற நாட்டின் உருவாக்கத்தின் முன்மாதிரியாக மொஹலாயப் பேரரசை 40 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்ததை பெருமையுடன் நினைவுகூர்கிறது TIME பத்திரிகை.

          தலாய்லாமா, நெல்சன் மண்டேலா, ஆபிரகாம் லிங்கன், ஹிட்லர், முசோலினி, கிளியோபாட்ரா, ஆகியோரும் இப்பட்டியலில் அணிவகுக்கிறார்கள்.

No comments:

Post a Comment