Saturday, February 12, 2011

10வது உலகக்கோப்பை யாருக்கு?

          10வது உலகக்கோப்பை கிரிக்கெட் வரும் 19ம் தேதி துவங்குகிறது. எந்த அணி கோப்பையை வெல்லும் என்று நான் சில அணிகளின் பலம் மற்றும் பலவீனங்களை பட்டியலிட்டுள்ளேன்.
         முதலில் நான் கோப்பையை வெல்லும் நாடாக கணித்திருப்பது தென்னாப்ரிக்கா, இந்த அணியில் சிறந்த BATTING, BOWLING, சிறந்த ALLROUNDERS மற்றும் சிறந்த FIELDERS என்று அனைத்து தரப்பிலும் மிகவும் பலமாக உள்ளது. பலவீனம் என்று பார்த்தால் அணிக்கு முறையான WICKETKEEPER இல்லை, மற்றும் முக்கிய ஆட்டங்களில் ஒருவித பதட்டத்தை அடைவது, இவற்றை தவிர்த்தால் இந்த அணிக்கே வெற்றி நிச்சயம்.
        
          இரண்டாவது அணி நமது இந்திய அணி. உலகின் பலமான BATTING வரிசை, எந்த நேரமும் நிதானத்தை இழக்காத தலைமை(கேப்டன்), உள்ளூரிலேயே போட்டி நடப்பது என்று இவைகளே பலமாகும். பலவீனமாக ஹர்பஜன், ஜாகிர் இருவரை தவிர பந்துவீச்சில் நட்சத்திரங்கள் குறிப்பிடும்படி எவரும் இல்லை, கவலைக்குரிய FIELDING. இந்த பலவீனங்களை தவிர்த்தால் வெற்றி நிச்சயம்.

          இலங்கை. இந்திய அணியிடமுள்ள அனைத்து பலமும் இவர்களிடம் உள்ளது, மேலும் FIELDINGல் இவர்களின் பங்கு குறிப்பிடும் வகையில் உள்ளது. பலவீனம் பாதிக்கு மேல் 30 வயதிற்கு மேல் உள்ள வீரர்கள்.

           இங்கிலாந்து. T20 CHAMPIONகளின் சமீபத்திய ஆட்டம் பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. உலகின் பலமான மிடில் ஆர்டர், பந்துவீச்சில் SWAN, ANDRASON, BRAD என்று பலமாகவும், சிறந்த FIELDINGம் இந்த அணிக்கு சாதகமாக உள்ளன. பலவீனமாக நட்சத்திர வீரர்கள் இல்லாமலிருப்பதும், மூத்த வீரர்களிடம் ஒற்றுமை இல்லாமை. இவைகளை திருத்தவேண்டும்.

           ஆஸ்திரேலியா. அதிக முறை உலகக்கோப்பையை வென்றுள்ள அணி. மூத்த அனுபவம் வாய்ந்த தலைமை, பந்து வீச்சில் உலகின் பலமான அணி, இவைகளே இவற்றின் முக்கிய பலம். பலவீனமாக அநாகரீக நடத்தை, தான் என்ற அகந்தை இவை இருக்கிற வரை கோப்பையை ஜெயிப்பது மிகவும் கடினம்.

1 comment: