Friday, February 25, 2011

உத்தமரின் வாழ்க்கை வரலாறு


சபாஷ் சரியான போட்டி!!!

          அதிமுக  கூட்டணியில் தேமுதிக வந்ததை அடுத்து வரும் சட்டசபை தேர்தல் மிகவும் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு கடும் போட்டி நிச்சயம்.

Tuesday, February 22, 2011

அனைத்து சீமான்களுக்கும் ஒரு வேண்டுகோள்!!!

          தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி எவரும் பேசுவதில்லை மற்றும் சிந்திப்பதில்லை, மாறாக இலங்கையில் ஏதேனும் சிறு குண்டூசி கீழே விழுந்துவிட்டாலும் அதைப்பற்றியும் இலங்கை அரசைப் பற்றியும் பேசி எழுதி பணம் பார்க்க நினைப்பவர்களே அதிகமாக உள்ளனர். உதாரணமாக மாவீரர் சீமான் அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றியோ அல்லது தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களைப்பற்றியோ அக்கறை இல்லை, மக்களும் இவர் பேசுவதை ஒரு வேடிக்கையாகவும், தமாஷாகவும் மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர் என்பதற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலே சாட்சி. சீமான் காங்கிரஸ் மற்றும் திமுகவை எதிர்த்து மிகவும் ஆவேசமாக பிரசாரம் செய்தும் அந்த கூட்டணிக்கு மிகப்பெரும் வெற்றியை கொடுத்தனர். அதன் பிறகும் தற்பொழுது வரை சீமான் தமிழ்நாட்டு மக்கள்களின் மின் வசதி, விலைவாசி உயர்வு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட இவர் மூச்சு கூட விடவில்லை. இலங்கையில் ஏதேனும் சிறிய விஷயமென்றால் உடனே தனது ரவுடிகள் (நாம் தமிழர்) கட்சியுடன் சேர்ந்து ஆவேசமாக பேசுவதை எந்த தமிழனும் விரும்பவில்லை என்பதை இங்கு சொல்ல விரும்புகிறேன்.

          இறுதியாக வன்முறையை கையிலெடுத்த எந்த நபரும் ஹிட்லரில் இருந்து பிரபாகரன் வரையில் வென்றதாக சரித்திரம் இல்லை. இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த இம்சைகளை விட விடுதலைப்புலிகள் கொடுத்த இம்சைகளே அதிகம். அது இப்பொழுது ஒய்ந்துவிட்டது, இனியாவது அவர்களை நிம்மதியாக வாழவிடுமாறு அனைத்து தமிழ்நாட்டு சீமான்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

நடுநிசி நாய்கள்

          இந்தப் படத்தை விமர்சனம் செய்யவே முடியாது. தயவுசெய்து இந்தப் படத்தை பார்க்க நினைப்பவர்கள் ஒரு BLUE FILM காசெட் வாங்கிப் பார்க்கலாம், படம் அவ்வளவு மோசம். வக்கிர புத்தியுடைய கவுதம் வாசுதேவ் மேனனின் மிக மோசமான படம் இது, மற்றும் அவரின் மனதை படம் பிடிப்பதாகவே இந்தப் படம் உள்ளது.



Monday, February 21, 2011

இந்தியருக்கு தெரியாததெல்லாம் அமெரிக்கர்களுக்கு தெரிகிறது!!!

          ரொனால்ட் ரீகனின் நூற்றாண்டு விழாவையொட்டி அமெரிக்காவின் TIME பத்திரிகை, உலகம் முழுவதிலிருந்து 25 சிறந்த அரசியல் தலைவர்களை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் நமது நாட்டின் தந்தை மகாத்மா காந்தி.  வன்முறையற்ற பாதையின் மூலம் சாதனை புரிய முடியும் என்று இந்த உலகிற்கு உணர்த்தியதால் தான் இந்த முதலிடம் கிடைத்திருக்கிறது காந்திக்கு. அமெரிக்காவில் சிவில் உரிமைகளுக்காக இயங்கும் இயக்கங்களுக்கு உந்துதலாக காந்தியக் கொள்கைகள் இருக்கின்றன என்றும் TIME பத்திரிகை பாராட்டுகிறது.

          முதல் 25 இடங்களுக்குள் இந்தியாவிலிருந்து இடம் பிடித்த மற்றொருவர், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த மொஹலாய பேரரசர் அக்பர். பன்முகத்தன்மை கொண்ட பல சிற்றரசுகளை கட்டிக்காத்து பேரரசராக ஆட்சி செய்து, இன்றைய இந்தியா என்கிற நாட்டின் உருவாக்கத்தின் முன்மாதிரியாக மொஹலாயப் பேரரசை 40 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்ததை பெருமையுடன் நினைவுகூர்கிறது TIME பத்திரிகை.

          தலாய்லாமா, நெல்சன் மண்டேலா, ஆபிரகாம் லிங்கன், ஹிட்லர், முசோலினி, கிளியோபாட்ரா, ஆகியோரும் இப்பட்டியலில் அணிவகுக்கிறார்கள்.

Friday, February 18, 2011

உலககோப்பையில் இந்தியாவின் போட்டிகள்

          உலககோப்பையில் இந்தியாவின் போட்டிகள் மற்றும் தேதிகளை காணலாம்.

19/02/2011  வங்கதேசத்துடன் டாக்கா           பிற்பகல் 2 மணி 
27/02/2011  இங்கிலாந்துடன்   பெங்களூர்   பிற்பகல் 2.30 மணி 

06/03/2011  அயர்லாந்துடன்    பெங்களூர்    பிற்பகல் 2.30 மணி 

09/03/2011  நெதர்லாந்து            டெல்லி         பிற்பகல் 2.30 மணி
12/03/2011  தென்னாப்ரிக்கா     நாக்பூர்          பிற்பகல் 2.30 மணி 

20/03/2011 வெஸ்ட்இண்டீஸ்  சென்னை    பிற்பகல் 2.30 மணி