இராவணன் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த மிகவும் மட்டமான படம் என்று தாராளமாக சொல்லலாம். கிழவி ஐஸ்வர்யா ராய், கிழவன் விக்ரம், மற்றும் நடிப்பே தெரியாத பிரித்திவிராஜ் போன்றோர் நடித்துள்ள படம். சுஹாசினியின் வசனம் மிக மிக மட்டம். இந்தப் படத்தை பற்றி விமர்சனம் எழுதி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, என் முதல் வரியை படித்துக்கொள்ளுங்கள். A.R.ரஹ்மான் இசை மிகவும் அற்புதமாக உள்ளது.பாட்டி ஐஸ்வர்யாராயின் சொந்த குரல் வசனங்கள் நன்றாக உள்ளது.
இந்த BLOGல் பொது, அரசியல், சினிமா, விளையாட்டு, மற்றும் அனைத்துவிதமான நிகழ்வுகளை பற்றி விமர்சனம் மற்றும் செய்திகளை காணலாம்.
Saturday, June 19, 2010
Friday, June 18, 2010
Wednesday, June 2, 2010
Saturday, May 29, 2010
அசிங்கம்
நடிகர் சூர்யா நடித்து வெளிவந்துள்ள படம் சிங்கம். நேர்மையான காவல்துறை அதிகாரியாக சூர்யா (துரைசிங்கம்), அநியாயம் மட்டுமே செய்யும் வில்லனாக பிரகாஷ்ராஜ். சூர்யாவின் காதலியாக அனுஷ்கா, தேவையே இல்லாத சிரிப்பு நடிகராக விவேக் ஆகியோர் அடங்கிய கூட்டணி சேர்ந்து இந்த படத்தை நாசம் செய்துள்ளனர். படம் முழுக்க தேவை இல்லாத அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் சிரிப்பு காட்சிகள் என படம் நகர்கிறது. அனுஷ்கா பார்ப்பதற்கு நன்றாக உள்ளார். நல்ல படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த சூர்யாவிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை கடந்த இரண்டு படங்களாக போறாத நேரம் என்று எண்ண தோன்றுகிறது. SUNPICTURES தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்துக்கொண்டுள்ள போதிலும் தொடர்ந்து படங்களை எப்படி வாங்கி வெளியிடுகின்றனர் என்பது MILLION DOLLER கேள்வியாக உள்ளது. சிங்கம் சூர்யாவிற்கு மட்டுமல்ல விவேக் SUNPICTURES போன்றோருக்கு மிகப்பெரிய அசிங்கம்.
Wednesday, May 12, 2010
விஸ்வநாதன் ஆனந்த
நேற்று பல்கேரியாவில் நடந்த உலக செஸ் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் நமது நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த பல்கேரியாவை சேர்ந்த தபலோவை வென்று மீண்டும் உலக சாம்பியன் பட்டதை வென்றார். இதே நமது கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் வென்றால் (ஆனால் ஜெயிக்காது) நாடே அதிரும் ஆனால் ஏனோ விஸ்வநாதன் ஆனந்த ஜெயித்ததை பத்திரிகைகள் ஒரு வரி கூட எழுத மறுக்கின்றன . அரசியல் தலைவர்கள் யாரும் கூட வாயை திறக்கவில்லை போகட்டும், நாம் பாராட்டுவோம் இந்த உண்மை இந்தியனை.
Saturday, May 8, 2010
நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையா இல்லையா?
நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா? தெரிந்து கொள்ள கீழ்கண்ட கேள்விகளுக்கு உண்மையான பதில் அளியுங்கள்:
1) உங்களது குடிப்பழக்கத்தால் உங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிஇழந்து விட்டதா?
2) குடிப்பதால் உங்கள் பணி நேரம் குறைந்துவிட்டதா?
3) உங்களது குடிப்பழக்கம் உங்கள் பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தயுள்ளதா?
4) குடிப்பழக்கத்தால் பணகஷ்டங்கள் ஏற்பட்டுள்ளனவா?
5) மோசமான சுற்றுச் சூழலில் உங்களை விட தகுதி குறைந்த நபர்களோடு சேர்ந்து குடிக்குமளவிற்கு மாறி மாறிவிட்டீர்களா?
6) நீங்கள் குடிப்பதால் குடும்ப நலனை கவனிக்க, பராமரிக்கமுடியவில்லையா?
7) கவலைகள், பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதற்காக குடிக்கிறீர்களா?
8) தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடிக்கவேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுகிறதா?
9) குடிப்பழக்கம் காரணமாக, தூங்குவதில் சிரமம் உள்ளதா?
10) குடிப்பழக்கத்தால் உங்கள் திறமைகளும், இலட்சியங்களும், ஆர்வங்களும் குறைந்து வருகிறதா?
மேற்கண்ட 10 கேள்விகளில் ஒரேவொரு கேள்விக்கு மட்டும் ஆம் என்று நீங்கள் பதிலளித்தால், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் அல்லது மிக விரைவில் அடிமையாகி விடுவீர்கள். இரண்டும் கேள்விகளுக்கு ஆம் என்ற பதிலளித்தால் நீங்கள் குடிப்பழக்க அடிமை.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ஆம் என்று பதிலளித்தால் எவ்வித சந்தேகமும் இன்றி நிச்சயமாக நீங்கள் குடிப்பழக்க அடிமை தான். இந்தப் பத்து கேள்விகளில் எந்த கேள்வியும் உங்களுக்கு பொருந்தவில்லை எனில் நீங்கள் குடிப்பழக்க அடிமையில்லை, ஆனால் அடிமையாகிவிடாமல் உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். நன்றி வாரமலர்.

Friday, April 30, 2010
சுறா-விஜய்க்கு ஒரு கடிதம்
விஜய் நடித்து வெளிவந்துள்ள சுறா படத்தை பார்த்தேன், பெயரில் மட்டும் விஜய் என்று வைத்துக்கொண்டு மகா மட்டம்மான தோல்விப் படங்களையே கொடுத்துக்கொண்டுள்ளார் விஜய். தான் செல்லும் விழாக்களுக்கு அமைதியாகவும் தான் நடிக்கும் படங்களில் மிகவும் ஆக்ரோஷமாகவும் உள்ளது போல் காட்டிக்கொள்கிறார். இது அவரது 50வது படம், எனக்கு தெரிந்து அவர் நடித்து வெளிவந்துள்ள மட்டமான படம் சுறா தான் (51வது படம் வந்தால் சுறா நல்ல படமாகிவிடும் என்பது வேறு விஷயம்). விஜய்க்கு உண்மையிலேயே சூடு சொரணை இருந்தால் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், அமீர்கான், ஷாருக்கான் போன்றோரின் படங்களை மீண்டும் மீண்டும் பார்க்கசொல்லுங்கள். இவர் ஒரு படத்திற்கு 5 கோடி 10 கோடி என்று சம்பளம் வாங்கிக்கொண்டு சத்திரம், பண்ணைவீடு போன்றவைகளை வாங்கிக் குவித்துக்கொண்டுள்ளார் மேலும் நான் அரசியலுக்கு வருவேன் அடுத்த முதல்வர் நான் தான் போன்ற நகைச்சுவைகளையும் அடிக்கடி வெளியிடுகிறார். பாவம் அவரது ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் முதல் நாளே 100 முதல் 250 வரை ஒரு டிக்கெட் என்று கொடுத்து பார்க்கும் அவர்களுக்கு மிகவும் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. இந்த முறை நான் என் நண்பனிடம் (அவன் தீவிர விஜய் ரசிகன்) படம் எப்படி உள்ளது என்று கேட்டேன் ஒவ்வொரு முறையும் அற்புதம் என்று பொய் சொல்லும் அவன் இந்தமுறை மிக மிக மட்டம் தயவு செய்து படத்தை பார்க்காதே என்று எனக்கு அறிவுரை செய்தான். விஜய் உங்களுக்கு ஒரு அறிவுரை வழங்க விரும்புகிறேன், உங்களுக்கு கதையை தேர்வுசெய்து கொடுப்பவர் யார்? அவரை முதலில் நீக்குங்கள். உண்மையிலேயே நீங்கள் நல்ல நடிகனாக இருந்தால் அடுத்து ஒரு நல்ல படத்தை கொடுங்கள். உங்களுக்கு தேவையான பணத்திற்கு மேல் சேர்த்துவிட்டீர்கள் தயவுசெய்து படத்தில் நடிப்பதை சிறிது நாட்களுக்கு ஒத்திவையுங்கள். தயவுசெய்து உங்கள் ரசிகர்களுக்கு மொட்டை போடாதீர்கள்.
Subscribe to:
Posts (Atom)