இந்த BLOGல் பொது, அரசியல், சினிமா, விளையாட்டு, மற்றும் அனைத்துவிதமான நிகழ்வுகளை பற்றி விமர்சனம் மற்றும் செய்திகளை காணலாம்.
Friday, July 9, 2010
SPAIN VS NETHERLANDS
உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அரையிறுதியில் நெதர்லாந்து அணி உருகுவே அணியையும், ஸ்பெயின் ஜெர்மனியையும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. வரும் ஞாயற்றுக்கிழமையன்று இரவு 12 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
Saturday, July 3, 2010
உலகக்கோப்பை கால்பந்து-2010
கடந்த சில வாரங்களாகவே உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. தற்பொழுது அது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட அணிகளான பிரேசில், அர்ஜென்டினா போன்ற அணிகள் வெளியேற்றப்பட்டுவிட்டன. முதல் காலிறுதியில் (02/07/2010) பிரேசிலும் நெதர்லாந்து அணிகள் மோதின விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வென்று அதிர்ச்சி அளித்தது நெதர்லாந்து. பிரேசிலின் முரட்டு ஆட்டம் நெதர்லாந்து அணியிடம் எடுபடவில்லை. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் உருகுவே அணி கானா அணிகள் மோதின இதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன, எனவே வெற்றியை நிர்ணயிக்க டைபிரேகர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் உருகுவே 4-2 என்ற கோல் கணக்கில் வென்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. மூன்றாவது காலிறுதியில் அர்ஜென்டினா மற்றும் ஜெர்மனி ஆகிய பலம் பொறுந்திய அணிகள் மோதின மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. கடைசி காலிறுதியில் பராகுவே மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின கோப்பையை வெல்லும் என்று பெரும்பான்மையினரால் கணிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் அணி எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் பராகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஸ்பெயின் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டேவிட் வில்லா வெற்றிக்கான கோலை அற்புதமாக அடித்தார்.
06/07/2010 அன்று நடைபெறும் முதல் அரைஇறுதியில் நெதர்லாந்து அணி உருகுவே அணியையும், 07/07/2010 அன்று இரண்டாவது அரையிறுதியில் ஜெர்மனி அணி பலம்பொருந்திய ஸ்பெயின் அணியை சந்திக்கிறது.
06/07/2010 அன்று நடைபெறும் முதல் அரைஇறுதியில் நெதர்லாந்து அணி உருகுவே அணியையும், 07/07/2010 அன்று இரண்டாவது அரையிறுதியில் ஜெர்மனி அணி பலம்பொருந்திய ஸ்பெயின் அணியை சந்திக்கிறது.
Saturday, June 19, 2010
ராவணன்
இராவணன் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த மிகவும் மட்டமான படம் என்று தாராளமாக சொல்லலாம். கிழவி ஐஸ்வர்யா ராய், கிழவன் விக்ரம், மற்றும் நடிப்பே தெரியாத பிரித்திவிராஜ் போன்றோர் நடித்துள்ள படம். சுஹாசினியின் வசனம் மிக மிக மட்டம். இந்தப் படத்தை பற்றி விமர்சனம் எழுதி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, என் முதல் வரியை படித்துக்கொள்ளுங்கள். A.R.ரஹ்மான் இசை மிகவும் அற்புதமாக உள்ளது.பாட்டி ஐஸ்வர்யாராயின் சொந்த குரல் வசனங்கள் நன்றாக உள்ளது.
Friday, June 18, 2010
Wednesday, June 2, 2010
Saturday, May 29, 2010
அசிங்கம்
நடிகர் சூர்யா நடித்து வெளிவந்துள்ள படம் சிங்கம். நேர்மையான காவல்துறை அதிகாரியாக சூர்யா (துரைசிங்கம்), அநியாயம் மட்டுமே செய்யும் வில்லனாக பிரகாஷ்ராஜ். சூர்யாவின் காதலியாக அனுஷ்கா, தேவையே இல்லாத சிரிப்பு நடிகராக விவேக் ஆகியோர் அடங்கிய கூட்டணி சேர்ந்து இந்த படத்தை நாசம் செய்துள்ளனர். படம் முழுக்க தேவை இல்லாத அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் சிரிப்பு காட்சிகள் என படம் நகர்கிறது. அனுஷ்கா பார்ப்பதற்கு நன்றாக உள்ளார். நல்ல படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த சூர்யாவிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை கடந்த இரண்டு படங்களாக போறாத நேரம் என்று எண்ண தோன்றுகிறது. SUNPICTURES தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்துக்கொண்டுள்ள போதிலும் தொடர்ந்து படங்களை எப்படி வாங்கி வெளியிடுகின்றனர் என்பது MILLION DOLLER கேள்வியாக உள்ளது. சிங்கம் சூர்யாவிற்கு மட்டுமல்ல விவேக் SUNPICTURES போன்றோருக்கு மிகப்பெரிய அசிங்கம்.
Wednesday, May 12, 2010
விஸ்வநாதன் ஆனந்த
நேற்று பல்கேரியாவில் நடந்த உலக செஸ் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் நமது நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த பல்கேரியாவை சேர்ந்த தபலோவை வென்று மீண்டும் உலக சாம்பியன் பட்டதை வென்றார். இதே நமது கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் வென்றால் (ஆனால் ஜெயிக்காது) நாடே அதிரும் ஆனால் ஏனோ விஸ்வநாதன் ஆனந்த ஜெயித்ததை பத்திரிகைகள் ஒரு வரி கூட எழுத மறுக்கின்றன . அரசியல் தலைவர்கள் யாரும் கூட வாயை திறக்கவில்லை போகட்டும், நாம் பாராட்டுவோம் இந்த உண்மை இந்தியனை.
Subscribe to:
Posts (Atom)




