Saturday, July 3, 2010

உலகக்கோப்பை கால்பந்து-2010

          கடந்த சில வாரங்களாகவே உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. தற்பொழுது அது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட அணிகளான பிரேசில், அர்ஜென்டினா போன்ற அணிகள் வெளியேற்றப்பட்டுவிட்டன. முதல் காலிறுதியில் (02/07/2010) பிரேசிலும் நெதர்லாந்து அணிகள் மோதின விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வென்று அதிர்ச்சி அளித்தது நெதர்லாந்து. பிரேசிலின் முரட்டு ஆட்டம் நெதர்லாந்து அணியிடம் எடுபடவில்லை. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் உருகுவே அணி கானா அணிகள் மோதின இதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும்  தலா ஒரு கோல் போட்டன, எனவே வெற்றியை நிர்ணயிக்க டைபிரேகர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் உருகுவே 4-2 என்ற கோல் கணக்கில் வென்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. மூன்றாவது காலிறுதியில் அர்ஜென்டினா மற்றும் ஜெர்மனி ஆகிய பலம் பொறுந்திய அணிகள் மோதின மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. கடைசி காலிறுதியில் பராகுவே மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின கோப்பையை வெல்லும் என்று பெரும்பான்மையினரால் கணிக்கப்பட்டுள்ள ஸ்பெயின் அணி எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் பராகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஸ்பெயின் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டேவிட் வில்லா வெற்றிக்கான கோலை அற்புதமாக அடித்தார்.


          06/07/2010 அன்று நடைபெறும் முதல் அரைஇறுதியில் நெதர்லாந்து அணி உருகுவே அணியையும், 07/07/2010 அன்று இரண்டாவது அரையிறுதியில் ஜெர்மனி அணி பலம்பொருந்திய ஸ்பெயின் அணியை சந்திக்கிறது.

No comments:

Post a Comment